For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எளிதில் கிடைக்கும் இந்த கொலுமிச்சை உங்களை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்

கொலுமிச்சை மரத்தின் இலை, காய், பழம் என அனைத்துமே பல்வேறு நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. அதற்கு காரணம் அதில் உள்ள அல்கலாய்டுகள், சிட்ரோனெல்லோல், லிமோனைன் மற்றும் நேரோல் போன்ற சத்துக்கள்தான் காரணம்.

By Saranraj
|

எலுமிச்சை எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. எலுமிச்சை குடும்பத்தை சேர்ந்த மற்றொரு பழமும் அதனைப்போலவே பல நன்மைகளை வழங்குகிறது என்பது நமக்கு தெரியாத ஒரு விஷயம். அந்த பழம்தான் கொலுமிச்சை இதனை ஆங்கிலத்தில் காஃபிர் என்று கூறுவார்கள். இது ஆயுர்வேதத்தில் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

health benefits of kaffir lime

கொலுமிச்சை மரத்தின் இலை, காய், பழம் என அனைத்துமே பல்வேறு நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. அதற்கு காரணம் அதில் உள்ள அல்கலாய்டுகள், சிட்ரோனெல்லோல், லிமோனைன் மற்றும் நேரோல் போன்ற சத்துக்கள்தான் காரணம். இந்த பதிவில் கொலுமிச்சை பற்றி இதுவரை நீங்கள் அறியாத ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாய் ஆரோக்கியம்

வாய் ஆரோக்கியம்

கொலுமிச்சை மரத்தின் அனைத்து பாகங்களுமே ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே கொலுமிச்சை இலைகளை ஈறுகளில் தேய்ப்பது வாய் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். வழக்கமான உணவு முறைகளால் வாயில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களை நீக்குகிறது. கொலுமிச்சை எண்ணெயை பற்பசைகளில் பயன்படுத்துவது ஈறுகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

வீக்கத்தை கட்டுப்படுத்தும்

வீக்கத்தை கட்டுப்படுத்தும்

கொலுமிச்சையின் இலைகள் மற்றும் எண்ணெய் அனைத்து விதமான வலிகள் மற்றும் அசௌகரியங்களில் இருந்து நிவாரணம் அளிக்கும். இதில் எதிர் அழற்சி பண்பு ஆர்திரிடிஸ், எடிமா, ஒற்றை தலைவலி போன்ற பல நோய்களை குணப்படுத்த உதவும்.

பூச்சிக்கடிகள்

பூச்சிக்கடிகள்

பூச்சிக்கடிகளை சரி செய்யவும் கொலுமிச்சை பயன்படுகிறது. கொலுமிச்சையில் உள்ள சிட்ரோனெல்லோல் மற்றும் லிமோனைன் கலவைகள் சருமத்தில் ஏற்படும் எரிச்சல்களை சரிசெய்ய உதவுகிறது. அதேசமயம் பூச்சிக்கடிகளை உடனடியாக குணப்படுத்தவும் உதவுகிறது.

சரும ஆரோக்கியம்

சரும ஆரோக்கியம்

கொலுமிச்சை சாறில் உள்ள அமிலங்கள் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை குறைக்கிறது, மேலும் செல்கள் சிதைவடைவதை தடுக்கிறது. இதன்மூலம் சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள், முகப்பருக்கள் மற்றும் தடிப்புகளை தடுக்கிறது.

MOST READ: முகலாய மன்னர்களின் வெற்றிக்கு காரணம் அவர்களின் இந்த வித்தியாசமான உணவு பழக்கவழக்கங்கள்தான்

இரத்த சுத்திகரிப்பு

இரத்த சுத்திகரிப்பு

உங்களுக்கு இரத்தம் தொடர்பான வியாதிகள் ஏதாவது இருந்தால் நீங்கள் கொலுமிச்சையை பயன்படுத்த வேண்டியது அவசியம். இதில் உள்ள சரியான அமிலக்கலவைகள் உங்கள் இரத்தத்தில் உள்ள பதோஜன்களை வெளியேற்றி உங்கள் உடனடி நிவாரணத்தை வழங்குவதுடன் இரத்தத்தையும் விரைவில் சுத்தம் செய்கிறது.

மனஅழுத்தத்தை குறைக்கிறது

மனஅழுத்தத்தை குறைக்கிறது

அரோமேதெரபியில் கொலுமிச்சை அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். நரம்பியல் கோளாறுகள் மற்றும் பதட்டம் போன்ற பிரச்சினைகளை குணப்படுத்த கொலுமிச்சை எண்ணெயை பயன்படுத்தலாம். கொலுமிச்சை எண்ணெயை சுவாசிக்கும் போது அது உடல் மற்றும் மனதை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

நோயெதிர்ப்பு சக்தி

நோயெதிர்ப்பு சக்தி

கொலுமிச்சையில் உள்ள ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மேலும் இது இரைப்பை மற்றும் குடல் நோய்களை குணப்படுத்த உதவுகிறது மேலும் ஆக்சிஜனேற்ற பண்புகள் நோயெதிர்ப்பு சக்தியை பாதுகாக்கும்.

செரிமானம்

செரிமானம்

உங்களுக்கு செரிமானக்கோளாறு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் இருந்தால் அதற்கு கொலுமிச்சை சாறு சிறந்த மருந்தாகும். இது செரிமான மண்டலத்தை சீராக்கும் மற்றும் எதிர் அழற்சி பண்புகள் அனைத்து விதமான இரைப்பை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. இது மலக்குடல் புற்றுநோய், மூலநோய் மற்றும் அல்சர் போன்ற நோய்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது.

MOST READ: நம்ம ஊரு ரோடு மோசன்னு சொல்றவங்க, 2 நிமிஷம் இந்த பக்கம் வந்துட்டு போங்க - # Funny Pics

முடி பராமரிப்பு

முடி பராமரிப்பு

சரும நிபுணர்களின் படி கொலுமிச்சை சாறை தலையில் தேய்ப்பது முடி உதிர்வை தடுக்கும் மேலும் கூந்தலின் நுனிகளை பலப்படுத்த உதவுகிறது. மேலும் இது சருமத்தை ஈரப்பதமாக்கவும் பொடுகை விரட்டவும் பயன்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

health benefits of kaffir lime

Kaffir lime is used in herbal medicines and according to experts, oil, leaves, fruit, and rind of kaffir limes are all utilized for different purposes.
Desktop Bottom Promotion