For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களுக்கு பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சினைகள்

ஆயுர்வேதத்திலிருந்து, வீட்டு வைத்தியம் வரை பூண்டு அனைத்திலும் பயன்பட கூடிய ஒன்றாக இருக்கிறது. இவ்வளவு நன்மைகள் கொண்ட பூண்டு சில தீமைகளையும் வழங்கக்கூடியது. எந்த மருந்தாக இருந்தாலும் ஒரு அளவுக்குத்தான்

By Saranraj
|

நமது இந்தியர்களின் உணவில் குறிப்பாக தென்னிந்தியர்களின் உணவில் முக்கியப்பங்கு வகிக்கும் ஒரு உணவுப்பொருள் என்றால் அது பூண்டுதான். பூண்டு என்பது கிட்டத்தட்ட நமது அனைவரின் வீட்டிலும் இருக்கும் ஒரு உணவுப்பொருள். இதனை சுவைக்காக உணவில் சேர்ப்பதை விட இதன் மருத்துவ குணங்களுக்காகத்தான் இதனை அதிகம் உணவில் சேர்க்கின்றனர்.

harmful effects of garlic

ஆயுர்வேதத்திலிருந்து, வீட்டு வைத்தியம் வரை பூண்டு அனைத்திலும் பயன்பட கூடிய ஒன்றாக இருக்கிறது. இவ்வளவு நன்மைகள் கொண்ட பூண்டு சில தீமைகளையும் வழங்கக்கூடியது. எந்த மருந்தாக இருந்தாலும் ஒரு அளவுக்குத்தான் அதனை உபயோகிக்க வேண்டும். இங்கே பூண்டை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பல பாதிப்புகள் என்னவென்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்லீரல் பாதிப்பு

கல்லீரல் பாதிப்பு

மனித உடலில் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு என்றால் அது கல்லீரல்தான். ஏனெனில் அதுதான் இரத்த சுத்திகரிப்பு, சீரான வளர்ச்சிதை மாற்றம், உடலில் இருந்து அம்மோனியாவை நீக்குவது என இதன் பலன்கள் ஏராளம். ஆனால் பூண்டில் உள்ள அல்லிசின் எனப்படும் பொருள் கல்லீரலை பாதிப்பதுடன் அதில் நச்சுத்தன்மையை அதிகரிக்கும்.

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று பல காலமாக ஒரு கருத்து உள்ளது. ஆனால் உண்மையில் அப்படி ஒன்றுமில்லை.வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது வயிற்றுபோக்கைத்தான் உருவாக்கும். ஏனெனில் வயிற்றுப்போக்கை உருவாக்கும் சல்பர் பூண்டில் அதிகம் உள்ளது.

வாந்தி

வாந்தி

பூண்டை அனைவரும் விரும்புவார்கள் என்று கூற இயலாது. ஏனெனில் பூண்டு பிடிக்காத பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது உங்களுக்கு வாந்தி, குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் இவை GERD எனப்படும் வாயுதொடர்பான நோய்களை உண்டாக்கவல்லது.

வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றம்

பூண்டு அதிகம் சாப்பிட்டால் மற்றவர்களுடன் நேரடியாக பேசுவதை முடிந்தளவு தவிர்த்து விடுங்கள். ஏனெனில் உங்கள் வாயில் ஏற்படும் துர்நாற்றம் அவர்களை முகம் சுளிக்க வைப்பதுடன் உங்களுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். பூண்டு வாய்துர்நாற்றத்தை ஏற்படுத்த காரணம் அதில் உள்ள சல்பர்தான்.

இரத்த கசிவு

இரத்த கசிவு

பூண்டு இயற்கையாகவே இரத்ததை மெல்லியதாக மாற்றக்கூடியது. எனவே வார்ஃபரின், ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும்போது பூண்டு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது இந்த மருந்துகளுடன் வினைபுரிந்து இரத்தத்தை மிகவும் மெல்லியதாக மாற்றும். இதனால் உடலுறுப்புகளுக்குள் இரத்த கசிவு ஏற்படும்.

கர்ப்பிணிகளுக்கு ஏற்றதல்ல

கர்ப்பிணிகளுக்கு ஏற்றதல்ல

கர்ப்பிணி பெண்கள் நிச்சயம் பூண்டு அதிகம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது அவர்களுக்கு அதிக வலி மற்றும் வாயுத்தொல்லையை அதிகரிக்கும். அதேபோல பாலூட்டும் பெண்களும் அதிகம் பூண்டு சாப்பிடக்கூடாது. இது தாய்ப்பாலின் சுவையை மாற்றுவதோடு குழந்தைகளுக்கு சில ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

மயக்கம்

மயக்கம்

இரத்த அழுத்த பிரச்சினை உள்ளவர்கள் பூண்டு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பூண்டு இரத்த அழுத்தத்தை குறைத்து சோர்வு, தலைவலி, மயக்கம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.

வியர்வை

வியர்வை

பூண்டில் உள்ள சில மூலக்கூறுகள் அதிக வியர்வை ஏற்படுவதை ஊக்குவிக்கும். எனவே கோடைகாலங்களில் அதிக பூண்டு சாப்பிடுவதை தவிர்க்கவும்.

பிறப்புறுப்பு தொற்று

பிறப்புறுப்பு தொற்று

பெண்கள் தங்கள் பிறப்புறுப்பில் எந்தவித தொற்றுநோய்களும் ஏற்படாமல் இருக்க பூண்டு சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் பூண்டு பிறப்புறுப்பில் உள்ள திசுக்களை பாதித்து பிறப்புறுப்பில் தொற்றுநோயை பரவ செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

harmful effects of garlic

Garlic is a common cooking ingredient used in every Indian household to enhance the flavour of food. But it has some side effects too.
Story first published: Saturday, September 8, 2018, 17:41 [IST]
Desktop Bottom Promotion