மார்பக புற்றுநோயின் தாக்கத்தை குறைக்கும் அற்புத உணவுகள்!

By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

தற்போதைய கணக்குப்படி பார்த்தால் எட்டு பெண்களில் சுமார் ஒரு பெண் மார்பக புற்று நோயால் அவதிப்படுகிறார். உலக உடல்நல அமைப்பு கருத்துப்படி 2020 ல் மார்பக புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியாவை பொருத்த வரை மார்பக புற்று நோய் என்பது சாதாரணமாக பரவி காணப்படுகிறது. கருப்பை வாய் புற்று நோய்களும் இங்குள்ள பெண்களிடையே அதிகமாக காணப்படுகின்றன. குடிப்பழக்கம், அதிகமான உடல் எடை மற்றும் பரம்பரை போன்ற காரணங்கள் மார்பக புற்று நோய் வர காரணமாக அமைகின்றன .

புற்றுநோய்

சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் 25 லிருந்து 30 சதவீதம் வரை இந்த மார்பக புற்று நோய் வருவதை குறைக்கலாம். தானியங்கள், நார்ச்சத்து உணவுகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் மார்பக புற்று நோய் வருவதை தடுக்க முடியும்.

நாங்கள் சொல்லும் இந்த உணவுகள் மார்பக புற்றுநோயை எதிர்த்து போரிடுகின்றன. அவற்றை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1 ப்ளூபெர்ரீஸ்

1 ப்ளூபெர்ரீஸ்

ப்ளூபெர்ரீஸ் எல்லாரும் விரும்பி சாப்பிடும் பழம். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மார்பக புற்று நோய் செல்களுக்கு எதிராக செயல்படுகிறது. இதற்கு புற்று நோயை உண்டாக்கும் அழற்சியை தடுத்து உடலை புற்று நோய் தாக்கத்தில் இருந்து காக்கிறது.

2 பிரேசில் நட்ஸ்

2 பிரேசில் நட்ஸ்

பிரேசில் நட்ஸில் செலினியம், நார்ச்சத்து மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் அடங்கியுள்ளன. இவை நமது நோயெதிர்ப்பு சக்திக்கு எதிராக ஏற்படும் அழற்சியை தடுத்து புற்று நோய் வளர விடாமல் தடுக்கிறது. இதை உங்கள் சாலட் உணவிலோ அல்லது தினசரி உணவிலோ சேர்த்து கொண்டால் மிகவும் நல்லது.

3 காளாண்

3 காளாண்

காளான்கள் மார்பக புற்று நோயை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இதை உங்கள் தினசரி உணவில் சேர்த்து கொண்டால் மார்பக புற்று நோய் வருவதை தடுக்கிறது. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இது மிகவும் சிறந்தது.

4 மாதுளை பழம்

4 மாதுளை பழம்

மார்பக புற்று நோயை தடுப்பதில் மாதுளை யை பரிந்துரைக்கின்றன. இதிலுள்ள பாலிபினோல், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்று நோய் வளருவதை தடுக்கிறது. மேலும் இரும்புச் சத்து உடலுக்கு கிடைப்பதால் மார்பக புற்று நோய் வராமல் தடுக்கிறது.

5 அடர்ந்த பச்சை நிற காய்கறிகள்

5 அடர்ந்த பச்சை நிற காய்கறிகள்

பச்சை இலை காய்கறிகளும் நமக்கு புற்று நோய் வருவதை தடுக்கிறது. இதிலுள்ள விட்டமின் பி, நார்ச்சத்து, பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் குளோரோபைல் போன்றவை புற்று நோய் செல்களை உடைத்தெறிகிறது.

6 ப்ரோக்கோலி

6 ப்ரோக்கோலி

இதிலுள்ள சல்பரோபோன் மற்றும் இன்டோல்ஸ் வெவ்வேறு விதத்தில் செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இவை மார்பக புற்று நோய், சிறுநீர்ப்பை புற்றுநோய், புரோஸ்டேட் புற்று நோய் மற்றும் நுரையீரல் புற்று நோய் போன்றவற்றை எதிர்த்து போரிடுகிறது.

7 பூண்டு

7 பூண்டு

பூண்டு மார்பக புற்று நோய் வருவதை தடுப்பதோடு புரோஸ்டேட் புற்று நோய், குடல் புற்று நோய் போன்றவற்றிலிருந்தும் நம்மை காக்கிறது. இதிலுள்ள அலுயியம் புற்று நோயை எதிர்க்கும் பொருள். எனவே தினமும் காலையில் பூண்டு பல் சாப்பிட்டாலே போதும் புற்று நோய் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

8 வால்நட்ஸ்

8 வால்நட்ஸ்

வால்நட்ஸில் உள்ள ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின்கள் போன்றவை புற்று நோய்க்கு எதிராக செயல்படுகிறது. எனவே தினமும் இந்த உணவை எடுத்துக் கொண்டால் புற்று நோயிலிருந்து தப்பிக்கலாம்.

9 சர்க்கரை வள்ளிக் கிழங்கு

9 சர்க்கரை வள்ளிக் கிழங்கு

இதிலுள்ள பீட்டா கரோட்டீன் பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவதை 17 % வரை குறைக்கிறது. எனவே இதை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

10 க்ரீன் டீ

10 க்ரீன் டீ

க்ரீன் டீயில் பாலிபினோல் என்ற பொருள் இருப்பதால் அவை நமது உடலுக்கு மிகவும் நல்லது. இவை மார்பக புற்று நோயை எதிர்த்து போரிடுகிறது. எனவே தினமும் பெண்கள் ஒரு கப் க்ரீன் டீ அருந்துவது நல்லது.

11 மிளகாய்

11 மிளகாய்

சிவப்பு மிளகாயில் உள்ள கேப்ஸைசின் மார்பக புற்று நோய் வளர்வதை எதிர்த்து போரிடுகிறது. அதே போல பச்சை மிளகாயில் உள்ள குளோரோபைல் மார்பக புற்று நோய் வர விடாமல் தடுக்க காவலாக அமைகிறது. எனவே உங்கள் உணவில் இவைகளையும் சேர்த்து பலன் பெறுங்கள்.

12 மஞ்சள் தூள்

12 மஞ்சள் தூள்

மஞ்சள் தூள் பொதுவாக நாம் எல்லா குழம்பு வகைகளிலும் சேர்ப்போம். இதிலுள்ள குர்குமின் பொருள் குடல் புற்று நோய், மார்பக புற்று நோய் மற்றும் நுரையீரல் புற்று நோய், சரும புற்று நோய் இவைகளுக்கு எதிராக செயல்படுகிறது. எனவே உங்கள் உணவில் கொஞ்சம் மஞ்சளை சேர்த்தாலே போதும் எல்லா வகையான புற்று நோய் களையும் விரட்டி விடலாம்.

13 முட்டை

13 முட்டை

முட்டையில் உள்ள கொலைன் என்ற பொருள் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயை வர விடாமல் தடுக்கிறது. எனவே பெண்கள் தினசரி உணவில் முட்டையை சேர்த்து கொள்வதன் மூலம் புற்று நோய் தாக்கத்தில் இருந்து காத்து கொள்ளலாம்.

14 ஆளி விதைகள்

14 ஆளி விதைகள்

இந்த ஆளி விதைகளை உங்கள் சாலட் உணவிலோ அல்லது குக்கீஸ், மவ்வின்ஸ் போன்றவற்றிலோ சேர்த்து உண்ணுவது நல்லது. இதிலுள்ள ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து மார்பக புற்று நோய் செல்களை அழிக்கிறது.

15 கேரட்

15 கேரட்

ஆராய்ச்சி தகவல்கள் படி தினசரி உணவில் கேரட்டை சேர்த்து கொள்வதன் மூலம் 18 முதல் 28 சதவீதம் வரை மார்பக புற்று நோயை தடுக்கலாம். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மார்பக புற்று நோய் வருவதை தடுக்கிறது.

16 செர்ரீஸ்

16 செர்ரீஸ்

செர்ரி பழங்கள் மார்பக புற்று நோய்க்கு எதிராக செயல்படுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றை உங்கள் தினசரி உணவிலோ அல்லது ஸ்மூத்தியாக எடுக்கும் போது மார்பக புற்று நோய் தாக்கத்தில் இருந்து நம் உடலை காத்து கொள்ளலாம்.

மேற்கண்ட உணவுகளை பெண்கள் தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டு புற்று நோய் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முயலுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods to reduce Breast cancer

Foods to reduce Breast cancer
Story first published: Friday, January 19, 2018, 18:30 [IST]
Subscribe Newsletter