Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
தினம் ஒரு கைப்பிடி வெந்தயகீரை சாப்பிட்டா ஆண்கள் உடம்பில் என்னென்ன மாற்றம் நடக்கும் தெரியுமா?
வெந்தயக் கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் அதனுடைய ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இங்கே விளக்கமாகவும் விரிவாகவும் குறிப்பிட்டுள்ளோம். படித்து பயன்பெறுங்கள்.
வெந்தய இலைகள் நமக்கு நிறைய நன்மைகளை அளிக்கிறது. நம் அன்றாட சமையலில் வெந்தயம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் வெந்தய விதைகள் மட்டுமல்ல வெந்தய இலைகள் கூட சமையலில் பெரிதும் பயன்படுகிறது.

இது சமையலுக்கு நறுமணத்தை அளிப்பதோடு உடலுக்கும் ஏராளமான நன்மைகளை அள்ளித் தருகிறது. இந்த இலைகளைக் கொண்டு ஹெர்பல் டீ, சப்ஷி, பரோட்டா போன்ற உணவுகளில் பயன்படுத்தலாம். மேலும் சென்னா மசாலா போன்ற கிரேவி வகைகளிலும் இது பயன்படுகிறது.

டைப் 2 டயபட்டீஸ்
நமது சீரண சக்தியை அதிகரிப்பதோடு எடை இழப்பு போன்றவற்றுக்கும் உதவுகிறது. இதில் நிறைய நார்ச்சத்துகள், புரோட்டீன், இரும்புச் சத்து, மாங்கனீஸ் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இதைத் தவிர ஏகப்பட்ட நன்மைகளைத் தரும் இந்த வெந்தய இலைகளைப் பற்றி இப்பொழுது நாம் பார்க்க போகிறோம்.
வெந்தயம் டைப் 1 மற்றும் டைப் 2 டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு சிறந்தது. இது நமது உடலில் கார்போஹைட்ரேட் அளவை சரி செய்கிறது. இன்சுலின் சுரப்பை மேம்படுத்துகிறது.

கொலஸ்ட்ராலை குறைத்தல்
இது இயற்கையாகவே கொலஸ்ட்ராலை குறைக்கும் சக்தி கொண்டது. குடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சும் திறனையும் கல்லீரலில் கொலஸ்ட்ரால் உற்பத்தியையும் மேம்படுத்துகிறது. ஆந்த்ரோக்ளோரோஸிஸ் மற்றும் டயாபெட்டீஸ் நோயாளிகளின் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. மேலும் இது நல்ல கொலஸ்ட்ரால் ஆன எச்டிஎல்லை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ரால் எல்டிஎல் மற்றும் ட்ரைகிளிசரைடு ஆகியவற்றை குறைக்கிறது.

தாய்ப்பால் சுரப்பு
தாய்ப்பால் என்பது குழந்தைக்கு இன்றியமையாத உணவாகும். எனவே தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு சரியாக இல்லை என்றால் வெந்தயத்தை பயன்படுத்தலாம். வெந்தய ஹெர்பல் டீ கொண்டு தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தலாம். மேலும் எதாவது பிரச்சினைகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

குடல் பிரச்சினைகள்
இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துகள் சீரண சக்தியை மேம்படுத்துகிறது. இதனால் குடல் சார்ந்த பிரச்சனைகளை குறைக்கிறது. வெந்தய டீ யை பருகுவதால் மலச்சிக்கல், வாயுத் தொல்லை, அமிலத்தன்மை, சீரணமின்மை மற்றும் வயிற்று வலி போன்றவற்றை போக்குகிறது. இது குடல் ஆரோக்கியத்திற்கும், வயிற்று அல்சர், குடல் அழற்சி, மலம் கழித்தலில் உள்ள பிரச்சினை போன்றவற்றை போக்குகிறது. கல்லீரல் வேலையை நன்றாக்கி அசிடிட்டி போன்றவற்றை குறைக்கிறது. வயிற்றுப் போக்கை தடுக்கிறது.

ஆண்களின் ஹார்மோன் சுரப்பு
ஆண்களின் ஹார்மோனான டெஸ்டிரோடிரோன் சுரப்பை அதிகரிக்கிறது. ஆண்மையை அதிகரிக்கிறது என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இது ஆண்மையை அதிகரித்து, நீர்த்துப் போன விந்துவை கெட்டிப்பட வைத்துவிடும். விந்து வேகமாக வெளியேறுவதும் தடைபடும்.

இதய ஆரோக்கியம்
தொடர்ந்து வெந்தயத்தை சாப்பிட்டு வரும் போது இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதய நோய்கள் வருவதை தடுக்கிறது, வெந்தயத்தின் கொலஸ்ட்ரால் குறைக்கும் திறன் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. ஹார்ட் அட்டாக் மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

அழற்சியை குறைக்க
வெந்தயம் உடம்பில் உள்ள அழற்சியை போக்குகிறது. நாள்பட்ட இருமல், கொப்புளங்கள், சுவாச அழற்சி, எக்ஸிமா போனற சரும நோய்கள் வராமல் தடுக்கிறது. உடம்பு வலி, சிறுநீரக கோளாறுகள் மற்றும் நிணநீர் முனைகளில் வீக்கம் போன்றவற்றை சரி செய்கிறது.
எனவே இப்படி ஏராளமான நன்மைகளை தரும் வெந்தய இலைகளை உணவில் சேர்த்து நாமும் பயன் பெறுவோம்.



Click it and Unblock the Notifications