For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  கசகசாவை இந்த அளவுக்குமேல் பயன்படுத்தினால் உயிரையே பறித்துவிடும்... திடுக்கிடும் தகவல்

  |

  பழக்கங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. விதைகள் ஆரோக்கியமான பலன்களைக் கொண்டுள்ளன. இவை ஆரோக்கியமானது மட்டுமன்றி பெண்களின் கருவுறும் தகுதியை அதிகரித்து கொழுப்பை சரியான அளவில் பராமரிப்பதற்கு உதவுகின்றன. அதோடு ஆரோக்கியமான சருமத்திற்கும், ஆரோக்கியமான முடிக்கும் இதை உபயோகிக்க முடியும்.

  health

  இதில் ஒரு அபரிமிதமான சத்து இருப்பதாகத் தோன்றுகிறது. இருப்பினும், இவ்விதைகள் எதிர்மறையான ஒரு இருண்ட பக்கமும் கொண்டுள்ளது. விதைகளிலிருந்து பெறப்படும் ஓபியாய்டுகள் துரதிர்ஷ்டவசமாக சில நேரங்களில் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன. எனவே கசகசா பற்றிய ஆரோக்கிய நலன்களைப் பார்க்கும்போது, அதன் தீமையான பலன்களின் மீதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். இந்கு இவ்விரண்டை பற்றியும் பார்ப்போம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  குணநலன்கள்

  குணநலன்கள்

  கசகசா மற்றும் அதன் எண்ணெய் பல்வேறு சுகாதார நலன்களுக்காக பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இங்கே கசகசாகவின் முக்கிய ஆரோக்கியமான பலன்களை பார்ப்போம். கசகசாவில் உண்மையிலேயே நமக்கு ஆரோக்கியம் தருகிற விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றைப் பற்றியும் அதை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையும் முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அளவோடு பயன்படுத்தி செலவையும் ஆரோக்கியத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாமே...

  கருவுறும் தன்மை

  கருவுறும் தன்மை

  இது சமீபத்தில் கசகசா பற்றி வெளியே வந்த மிக உற்சாகம் தரும் ஆய்வுகளில் ஒன்றாகும். மிகவும் பழமையான, 100 ஆண்டுகளுக்கு முந்தைய பெண்களின் கருக்குழாய் அடைப்பை சோதனை செய்யும் நடைமுறை, இப்போது பயனுள்ள கருவுறுதல் சிகிச்சையாக மாறிவிட்டது. பல தம்பதிகளுக்கு கருவுறுதலுக்கு முக்கிய தடையாக உள்ளது கருக்குழாய் அடைப்பாகும். இவை கருக்கள் ஓவரியிலிருந்து கருப்பைக்கு சென்றடைவதற்கு தடையாக உள்ளது. இந்த செயல்முறை கருக்குழாயை சோதனை செய்ய கசகசா எண்ணெயுடன் சிறிது சாயம் கலந்து எக்ஸ் ரே மூலமாக கருக்குழாயினுள் செலுத்தி அடைப்புகளை கண்டறிய முடியும். எண்ணெய் செல்லும் பாதையில் உள்ள அடைப்புகளை எளிதாக காண முடியும். ஹிஸ்டெரோசால்புளோபோகிராஃபி என்று அழைக்கப்படும் இந்த செயல்முறை கருக்குழாய் அடைப்புகளை கண்டறிய மிகவும் உபயோகமாய் உள்ளது. ஆனால் இந்த எண்ணெய் கருவுற உபயோகமாய் இருப்பது மிகவும் ஆச்சரியகரமானது. அடிலெய்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 1119 பெண்களுக்கு கசகசா எண்ணெய் மற்றும் தண்ணீரை கருக்குழாயினுள் செலுத்தி சுத்தப்படுத்தினர்.

  கசகசா எண்ணெய் உபயோகப்படுத்தப் பட்ட பெண்கள் 40 சதவீதத்தினர் அடுத்த ஆறு மாதத்தில் தாய்மையடைந்தனர். ஆனால் தண்ணீர் உபயோகப்படுத்தப்பட்ட பெண்கள் 29 சதவீதத்தினரே தாய்மையடைந்தனர். ஆராய்ச்சியாளர்கள் கசகசா எண்ணெயின் இந்த நிகழ்விற்கு சரியான காரணங்களை இன்னும் அறியவில்லை, இது தண்ணீரை விட வலுவாக கோழைகளையும் அழுக்குகளையும் வெளியேற்றியிருக்கலாம். அல்லது நாம் அறியாத ஒரு காரணி கசகசா எண்ணெய்யில் இருக்கலாம். எப்படி இருந்தாலும் கசகசா கருக்குழாய் அடைப்பினை சரி செய்து கருவுறுதல் சிகிச்சையில் முக்கியமாகவும், அதில் உள்ள நமக்கு தெரியாத உட்பொருளாகவும் இருக்கலாம். இந்த கசகசா எண்ணெய் சிகிச்சை பலனளித்தால், அது பாதுகாப்பானதாகவும், விரைவானதாகவும், மலிவானதாகவும் இருக்கும். மேலும் இது விலையுயர்ந்த மற்றும் துன்பகரமான IVF முறைக்கு முன் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது ஆகும்.

   தோல் மற்றும் முடி ஆரோக்கியம்

  தோல் மற்றும் முடி ஆரோக்கியம்

  கசகசாவில் உள்ள அழற்சி எதிர்ப்பு சத்துகள் தோல் வீக்கத்தை குறைக்கின்றன. கசகசாவில் உள்ள லினோலிக் அமிலம் தோலுக்கு ஈரப்பசை மற்றும் அரிக்கும் தோலழற்சியின் அறிகுறியிலிருந்து விடுவிக்கிறது. லினோலிக் அமிலக் குறைபாட்டால் முகப்பரு உள்ளிட்ட தோல் நோய்கள் ஏற்படுகின்றன. நம் தலையின் மேற்புறத்தில் உள்ள பொடுகைத் தடுக்க லினோலிக் அமிலம் தேவை. கசகசாவை நன்கு பொடியாக அரைத்து பாலில் இரவு முழுதும் ஊற வைத்து, அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து நன்றாக கலக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். பிறகு தலை முடியை அலச வேண்டும். எலுமிச்சை சாறு அரிப்பை தடுக்கும். கசகசாவை தயிருடன் கலந்தும் பாதிக்கப்பட்ட இடத்தில் உபயோகிக்கலாம். இதை முகத்தில் தடவினால் முகம் பளபளக்கும்.

  செரிமானம்

  செரிமானம்

  செரிமானம் மற்றும் மலச்சிக்கலை தடுக்கும் நார் சத்து கசகசாவில் அபரிமிதமாக உள்ளது. கசகசாவில் உள்ள வைட்டமின் சி ஆரோக்கியமான செரிமான அமைப்புக்கு மிகவும் அவசியமானதாகும். இது செரிமானப் பாதையை சீராக வைக்கும் கொல்லாஜன் உற்பத்தி செய்கிறது. கசகசா பொடியை ஒரு டம்பளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி சுவைக்கு தேன் சேர்த்து குடிக்கலாம். இதை தவிர கசகசா பொடியை சாலட் தயாரிக்கும் போது ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி சேர்க்கலாம்.

  தூக்கமின்மையை குணப்படுத்தும்

  தூக்கமின்மையை குணப்படுத்தும்

  கசகசாவில் மக்னிசீயம் அதிகமாக இருப்பதால் தூக்கத்தை எளிதில் வரவழைக்கும். தூக்கமின்மையை குணப்படுத்தும். மெக்னீசியம், தூக்கம் வரவழைக்கும் ஹார்மோனான மெலடோனினை அதிகரிக்கிறது, மன அழுத்தத்திற்கான ஹார்மோனான கார்டிசோலை குறைக்கிறது. கசகசாவில் உள்ள மிகவும் சிறிதளவேயான ஓபியம் ஆல்கலாய்டுகள் தூக்கம் வரவழைக்க உதவுகிறது. கசகசாவினால் ஏற்படும் ஆபத்துகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சூடான பாலில் ஒரு டீஸ்பூன் அளவு கசகசா பொடியை கலந்து குடித்தால் சுகமான தூக்கம் நிச்சயம்.

  இரத்த ஓட்டம்

  இரத்த ஓட்டம்

  கசகசாவில் உள்ள இரும்பு மற்றும் வைட்டமின் B6 இரத்த சோகைக்கு ஏற்ற மருந்தாக இருக்கும். இரும்பு ரத்த ஓட்டத்தை அதிகரித்து, ரத்தத்தில் ஆக்ஸிஐனை அதிகரிக்கிறது. கசகசாவில் உள்ள தாமிர சத்தும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

  வாய்ப்புண்

  வாய்ப்புண்

  கசகசாவில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு காரணிகள், வாய்ப்புண்ணுக்கு மருந்தாக பயன்படுகிறது. அதிகமான உடற்சூட்டினால் ஏற்படும் வாய்ப்புண்ணை கசகசாவின் குளிர்ச்சியூட்டும் தன்மை குணப்படுத்தும். கசகசா பொடியுடன் சர்க்கரை அல்லது தேங்காய் துருவல் சேர்த்து பேஸ்ட் போல் செய்து வாய்ப்புண்ணுக்கு மருந்தாக சாப்பிடலாம்.

  சக்தியை அதிகரிக்க

  சக்தியை அதிகரிக்க

  கசகசாவில் உள்ள மாங்கனீசு சத்து மைட்டோகாண்ட்ரியாவில் உள்ள பிரீ ராடிக்கில்சை அழித்து, நம் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. மைட்டோகாண்ட்ரியாவை பாதுகாக்கிறது. மாங்கனீசு சத்து நம் உடலில் சூப்பராக்சைடு டிஸ்மியுடேஸின் உப காரணியாக செயல்படுகிறது. கசகசாவில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் நம் சக்தி நிலை, ஆக்ஸிஐன் போன்றவற்றை அதிகரித்து, நம் சக்தியை அதிகரிக்கிறது. கசகசாவில் உள்ள இரும்பு மற்றும் துத்தநாகம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். துத்தநாகம் நோய்களுக்கு எதிரான ரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்கிறது.

  மூளை ஆற்றல்

  மூளை ஆற்றல்

  கசகசாவில் உள்ள இரும்பு, தாமிரம், கால்சியம் சத்துகள் நரம்பு மண்டலத்தின் சக்தியை அதிகரித்து மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. கசகசா மூளைக்கு இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் சப்ளையை அதிகரிக்கிறது, இது அல்சைமர் மற்றும் டிமென்ஷியா உட்பட அறிவாற்றல் கோளாறுகளின் அபாயத்தை குறைப்பதில் உதவுகிறது.

  எலும்புகளின் ஆற்றல்

  எலும்புகளின் ஆற்றல்

  கசகசாவில் உள்ள துத்தநாகம் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கிறது. தற்போதைய ஆய்வுகளின் படி துத்தநாக குறைபாடு எலும்புகளின் அடர்த்தியை குறைக்கிறது. கசகசாவில் உள்ள நிறைந்த கால்சியம் எலும்புப்புரையின் ஆபத்தை குறைக்கிறது. கசகசாவில் உள்ள பாஸ்பரஸ், எலும்பு வளர்ச்சியை ஆதிகரிப்பதில் கால்சியத்திற்கு அடுத்தாக உள்ளது.

  மலச்சிக்கல்

  மலச்சிக்கல்

  மலச்சிக்கலுக்கு பல காரணங்களில் ஒன்று அஜீரணம். அதை தடுப்பதற்கு கசகசா பெரிதும் உதவுகிறது. கசகசாவில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கிறது. அதனால் மலச்சிக்கல் ஏற்படும்போது பாலில் அரை ஸ்பூன் அளவுக்கு கசகசாவைப் போட்டு காய்ச்சி குடித்து வரை மலச்சிக்கல் பிரச்னை மிக விரைவான சரியாகும்.

  கெட்ட கொழுப்பு

  கெட்ட கொழுப்பு

  ஓலெய்க் அமிலம் மற்றும் உணவு நார்ச்சத்து எல்.டி.எல் கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொழுப்பு அளவுகளை குறைக்கிறது. ஆரோக்கியமான கொழுப்பு அளவை பராமரிப்பதில் ஓலெய்க் அமிலம் முக்கிய பங்கு வகிக்கிறது.

  இதயம்

  இதயம்

  கசகசாவில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இதில் உள்ள லினோலிக் அமிலம் இதய நோய்களின் ஆபத்தை குறைக்கிறது. இதில் உள்ள வைட்டமின் B2 மற்றும் வைட்டமின் B6 ஆகியவை இதய பிரச்சினைகளை குறைக்கிறது. கசகசாவில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கிறது, இது தமனிகளில் உள்ள அடைப்புகளை குறைக்கும்.

  செல்களின் வளர்ச்சி

  செல்களின் வளர்ச்சி

  தேவையற்ற செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. கசகசாவில் உள்ள செலீனியம் தேவையற்ற செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி கேன்சர் போன்ற அபாய நோய்களிலிருந்து காக்கிறது.

  பார்வைத்திறன்

  பார்வைத்திறன்

  கசகசாவில் உள்ள துத்தநாகம் கண்களில் உள்ள தசை நார் பிரச்சினைகளை தடுத்து பார்வை இழப்பில் இருந்து காக்கிறது. சககசா பார்வைத் திறனை அதிகரிப்பதில் மிக முக்கியப் பங்காற்றுகிறது. கசகசாவில் உள்ள அபரிமிதமான B வைட்டமின்கள் மற்றும் கால்சியம் ஆரோக்கியமான நரம்பு மண்டல. வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றன.

  சுவாச மண்டலம்

  சுவாச மண்டலம்

  சுவாச மண்டல செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. கசகசாவில் உள்ள துத்தநாகம் சுவாசக் குழாயில் வீக்கம் மற்றும் நச்சுக்களுக்கு எதிராக சைட்டோபிரடக்டன்ட் போல செயல்படுகிறது. இது சுவாசப் பாதையில் உள்ள வீக்கம் மற்றும் நச்சுக்களுக்கு எதிராக செயல்படுகிறது. சளியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. ஜின்க் சுவாசப்பகுதியின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான பங்கு வகிக்கிறது. ஆஸ்துமா மற்றும் வறட்டு இருமலுக்கு மிகவும் சரியான மருந்தாகும்.

  புற்றுநோய்

  புற்றுநோய்

  கசகசா புற்று நோய் வருவதில் இருந்து தடுக்க பயனுள்ளது. இதில் உள்ள ஒலிக் அமிலம் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கக்கூடிய ஒரு மரபணுவை தடுக்கும். கசகசாவில் இருக்கும் நொஸ்கேபின், கட்டிகளுக்கு எதிராக செயல்படுகிறது. மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு அவை உபயோகமாக உள்ளன.

  சிறுநீரக கற்கள்

  சிறுநீரக கற்கள்

  சிறுநீரக கற்கள் அபாயத்தை குறைக்கிறது. அதிக அளவில் கால்சியம் இருந்தால் சிறுநீரகங்களில் கற்களை ஏற்படுத்தும். கசகசாவில் உள்ள ஆக்சலேட்ஸ் கால்சியம் உறிஞ்சப்படுவதைத் தடுக்கின்றன. இதன்மூலம் சிறுநீரக கற்களால் ஏற்படும் ஆபத்தை குறைக்கின்றன.

  ஆண்மை பெருக

  ஆண்மை பெருக

  பாலியல் தூண்டலில் கசகசாவிற்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது. கசகசாவில் உள்ள பாலுணர்வை தூண்டும் சக்திகள் தாம்பாத்திய சக்தியை மேம்படுத்துகிறது. ஆண்மையின்மைக்கு சிகிச்சையளித்து பாலுணர்வை தூண்டுவதில் பெரும் பங்காற்றுகிறது. தாம்பத்தியத்திற்கு தடையாகும் மனதில் உள்ள தடைகளையும் இது தடுக்கிறது.

  உயர் இரத்த அழுத்தம்

  உயர் இரத்த அழுத்தம்

  கசகசாவில் உள்ள பொட்டாசியம் ரத்த உறைதலை தடுத்து ரத்தம் சுலபமாக செல்ல உதவுகிறது. சம அளவு கசகசா மற்றும் தர்பூசணி விதைகளை எடுத்து பொடி செய்து கலந்து கொள்ளவும். அதிகமாகி விட்டால் ஒரு டப்பாவில் போட்டு இறுக்கமாக மூடி வைக்கவும். தினமும் இரு வேளை ஒரு டீஸ்பூன் வீதம் எடுத்துக் கொள்ளவும்.

  தைராய்டு

  தைராய்டு

  தைராய்டு வராமல் தடுக்கும் செயல்பாட்டுக்கு கசகசா மிகவும் உதவுகிறது. கசகசாவில் உள்ள செலினியம் தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, ஹைப்போ மற்றும் ஹைப்பர் தைராய்டு தொடர்புடைய அறிகுறிகளை நீக்குகிறது.

  கவனிக்க வேண்டியவை

  கவனிக்க வேண்டியவை

  கசகசாவை உட்கொள்வதால் சில எதிர்மறையான பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன. கசகசா ஓப்பியம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது, இதை சுத்திகரிக்கும்போது மிகவும் சக்தி வாய்ந்த ஒப்பியேட் மருந்துகளை உருவாக்க முடியும். தாங்க முடியாத நீண்ட கால வலிகளுக்கு இவை மருந்தாக பயன்படுகிறது. போதைக்காக தெருவோரங்களில் பயன்படுத்தும் கசகசாவில் இருந்து தயாரிக்கும் ஹெராயின் நிறைய பேரின் வாழ்க்கையை அழிக்கிறது. நாம் கசகசாவை பயன்படுத்தும் போது இத்தகைய எதிர்மறையான பக்க விளைவுகளையும் கருத்தில் கொண்டு பயன்படுத்த வேண்டும்.

  கசகசா டீ

  கசகசா டீ

  கசகசா தேனீர் விதைகளில் உள்ள ஓபியேட்ஸை உட்கொள்வதற்கான ஒரு சுலபமான வழி. நசுக்கிய விதைகள் மற்றும் காய்களை கொதிக்கவைத்து அல்லது விதைகளை குளிர் பானங்களில் கழுவி அதையும் குடிக்கின்றனர். சிலர் ஓபியேட்டை நுகர்வதற்காக இத்தகைய பானங்களை எடுத்து கொள்கிறார்களே தவிர அதன் நற்பலன்களுக்காக அல்ல. கசகசா தேனீர் தூக்கமின்மையை போக்கவும், தேவையற்ற கவலைகளை போக்கவும் உதவுகிறது. சந்தேகமின்றி, கசகசா தேநீர் தூக்கத்திற்குப் பயனளிக்கலாம், ஏனெனில் ஓபியேட்ஸ் தூக்கத்தைத் தூண்டும், ஆனால் பக்க விளைவுகள்?

  கசகசாவை அதிக அளவில் எடுத்துக்கொள்ளும் போது மிகவும் ஆபத்தானது. எப்படி என பார்ப்போம். கசகசா தேநீர் எவ்வாறு ஆபத்தாக மாறுகிறது தெரியுமா?

  ஓபியேட்டின் அளவு அதிகமாகும் போதும், பல வித விதைகள் சேர்த்து காய்ச்சும் போதும் அதில் உருவாகும் மார்பின் மற்றும் கோடைன் அதிகரித்து போதையை தருகிறது.

  உண்மையில், 1996 இல் ஜர்னல் ஆப் போரென்சிக் சயின்சஸின் ஆய்வானது, மோர்ஃபின் அளவு 125 மடங்கு அதிகமாக இருப்பதை காட்டியது.

  மோர்ஃபின் அளவு அதிகரிக்கும் போது உயிரிழப்பு கூட ஏற்படலாம். நுரையீரலில் நீர் சேர்ந்து நுரையீரல் சுவர் வழியாக அது ரத்தத்தில் கலக்கும் போது அவர்களுக்கு நுரையீரல் வீக்கம் ஏற்படும். கசகசா தேநீர் அருந்தும் போது மோர்ஃபின் உடலில் அதிகமாக சேர்ந்து உயிரிழப்பு ஏற்படும்.

  பக்க விளைவுகள்

  பக்க விளைவுகள்

  இறப்பு மட்டுமே கசகசாவின் பயன்பாட்டை குறைத்திடவில்லை. மற்ற சில பக்க விளைவுகளும் உள்ளன. பலர் கசகசா சாப்பிட்டதும் கடுமையான வயிற்று வலியை அனுபவித்துள்ளனர். அதுவும் ஒப்பியேட்டின் தாக்கம் குறைந்ததும் வலி இன்னும் தீவிரமாகிவிடும். இது கசகசாவின் பொதுவான பக்க விளைவு. கசகசாவால், அடுத்த நாள் காலையில் ஹாங் ஓவர் ஸ்டைலில் தலைவலியும் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

  அடிக்ட்

  அடிக்ட்

  கசகசாவை மிக அதிக அளவில் உட்கொள்ளும்போது, அது நம்மை இன்னும் அதிகமாக உட்கொள்ளத்தூண்டும். இது கசகசாவின் மிக சிக்கலான பக்க விளைவாகும். ஏனெனில் ஒப்பியேட் அடிமைப் பழக்கத்தை உருவாக்கும் தன்மை கொண்டது. சில நாட்கள் அதிகமான அளவில் கசகசா சாப்பிட்டாலே, அது நம்மை அடிமைப்படுத்திவிடும்.

  ஒப்பியேட்டின் அளவு அதிகமாக அதிகமாக உடல் சகிப்புத்தன்மையை உண்டாக்கிக்கொள்ளும். அதனால் இன்னும் அதிகமாக உட்கொள்ளத் தூண்டும். இதனால் ஓவர் டோஸாகி அபாயமான விளைவுகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

  மருத்துவ பரிசோதனைகள்

  மருத்துவ பரிசோதனைகள்

  கசகசாவில் இருந்து அதிக சத்துகளை பெற விழையும் போது, நமக்கு தெரியாத அதன் மோசமான பக்க விளைவுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் சிறிதளவு கசகசாவை சேர்த்து கொண்டு பிறகு மருத்துவ பரிசோதனைகளுக்கு செல்லும் போதும், அதன் முடிவுகள் சரியாக இருக்காது. எனவே மருத்துவ பரிசோதனைகளுக்கு செல்லும் போது, கசகசா சேர்த்த உணவை தவிர்ப்பது நலம்.

  ஆபத்திலிருந்து தப்பிப்பது எப்படி?

  ஆபத்திலிருந்து தப்பிப்பது எப்படி?

  தூக்கம் வருவதற்காக கசகசா தேநீர் பருகும் போது குறைந்த அளவே எடுத்து கொள்வது நலம். சமையலுக்கு கசகசாவை பயன்படுத்தும் போதும் அளவில் கவனம் தேவை.

  கசகசாவில் இயல்பாக ஓபியம் இல்லை. கசகாவின் வெளிப்புறத்திலும், அதன் விதையிலும் மட்டுமே உள்ளது. எனவே சமையலுக்கு கசகசாவை பயன்படுத்தும் போது அதை நன்றாக கழுவி உபயோகப்படுத்தும் போது விதையின் வெளிதோலில் உள்ள ஓபியம் நீங்கி விடும். கசகசாவின் சுவையை தீங்கின்றி அனுபவிக்கலாம்.

  செய்ய வேண்டியவை

  செய்ய வேண்டியவை

  கசகசாவை உபயோகிக்கும் முன் கழிவுகளை அகற்றி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். கழிவுகளில் தான் ஓபியம் உள்ளது. கசகசாவை அரைப்பது கடினம். எனவே அதை வறுத்து இரண்டு மணி நேரம் நீரில் அல்லது பாலில் ஊர வைத்து எளிதில் அரைக்கலாம்.

  சமைக்காமல் கசகசாவை பயன்படுத்தும் போது வறுத்து உபயோகித்தால் அதன் சுவையும் நறுமணமும் கூடும்.

  செய்யக்கூடாதவை

  செய்யக்கூடாதவை

  பலவித விதைகள் சேர்த்து காய்ச்சும் கசகசா தேநீர் உயிரை பறிக்கும் அளவு ஆபத்தானது. அதை தவிர்க்கவும். மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் போது கசகசா உணவு, தேநீரை தவிர்க்கவும். அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சே. எனவே கசகசாவை அளவாக உபயோகிப்பது நலம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Dangers and Benefits of Poppy Seeds

  We don’t know if you have heard of them before, but what we do know is that the benefits of poppy seeds are amazing.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more