Latest Updates
-
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க..
பன்னீர் சாப்பிடும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு மற்றும் பிறப்புறுப்பில் வரும் புற்றுநோய் ஏற்படாதாம்..!
உடல் ஆரோக்கியதிற்கு பால் எவ்வாறு பயன்படுகிறதோ அதே போன்று பன்னீரும் உதவுகிறது. இதில் அவற்றின் பயன்கள் பற்றி பார்ப்போம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பால் சார்ந்த அனைத்து உணவு வகைகளையும் விரும்பி உண்ணுவார்கள். பிறந்தது முதலே பால் அதிகம் உண்டு வாழ்வதால்தான் "பாலூட்டி இனம்" என்ற பெயர் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற பாலூட்டி வகை உயிரினங்களை காட்டிலும் மனித இனம் சற்றே வித்தியாசமானது. மற்ற உயிரினங்கள் பிறந்த சில காலங்கள் மட்டும் தான் பால் போன்ற பொருட்களை சாப்பிடும். ஆனால் மனிதன் மட்டும்தான் பால் போன்ற பொருட்களை அதிகம் தன் வாழ்நாளில் எடுத்து கொள்வதாக ஆராய்ச்சிகள் கூறுகிறது.

தாய் பால் முதல் பசும்பால் வரை பால் சார்ந்த பொருளை நாம் பெரிதும் உணவில் சேர்த்து கொள்கிறோம். இத்தகைய பாலில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. ஆனால் அவற்றில் இருந்து உருவாக்கபடும் மேலும் சில பொருட்களில் என்னென்ன நன்மைகள் மற்றும் தீமைகள் இருக்கிறது என்பது பெரும்பாலான மக்கள் அறிந்திராத ஒன்றே. இந்த பதிவில் பன்னீர் எத்தகைய நன்மைகள் கொண்டது என்பதை நாம் பார்க்கலாம். அத்துடன் அது எவ்வாறு ஆண்களுக்கு பெரிதும் பயன்படுகிறது என்பதையும் அறியலாம்.

பன்னீர் விரும்பிகளே...!
இன்று எந்த வகையான உணவுகளை எடுத்து கொண்டாலும் அதில் முதல் இடத்தில் இருப்பது இந்த பன்னீர்தான். எல்லா வகையான உணவுகளுடன் இது அதிகம் பொருந்தி, மிகவும் சுவையை தருகிறது. குறிப்பாக இந்திய வகை உணவுகளில் பன்னீரின் இடம் மிகவும் இன்றியமையாததாகும். குழந்தைகள் முதல் பெரியர்வகள் வரை இதை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் பல வகையான ஊட்டச்சத்துக்களும் உள்ளது.

எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள்..!
பன்னீரில் பல ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது. அவற்றில் சில...
கலோரிகள் - 79.9(335 kJ)
புரதம் - 28.4(119 kJ)
கொழுப்பு சத்து - 14.2(59.5 kJ)
காபோஹைட்ரெட் - 37.3(156 kJ)
வைட்டமின் எ - 320IU
வைட்டமின் டி - 84.6IU
கால்சியம் - 234mg
பொட்டாசியம் - 297mg
செலினியம் - 6.1mcg
மெக்னீசியம் - 21.8mg
ஜின்க் - 0.9mg
பாஸ்பரஸ் - 187mg
சோடியம் - 87.3mg

எலும்புகளுக்கு பன்னீர்...
இதில் அதிகம் கால்சியம் இருப்பதால் எலும்புகளை வலுவாக்க உதவும். எலும்புகளின் தசைளை உறுதிபட செய்யும். சிறு வயதிலே மூட்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பன்னீர் சிறந்த தீர்வு. பற்களுக்கு இவை நன்கு உதவும். பற்களின் கம்கள் சேதம் அடைவதை இது தடுக்கும். இதில் லாக்டோஸ் அளவு குறைவாக உள்ளதால் கேவிட்டி போன்ற பல் பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

பிறப்புறுப்பில் வரும் புற்றுநோயை குணப்படுத்த...
இன்று பெரும்பாலான ஆண்களுக்கு வரும் பிரச்சினைகளால் முதல் இடத்தில் இருப்பது இந்த பிறப்புறுப்பை தாக்கும் புற்றுநோய்தான். பன்னீரில் உள்ள அதிக படியான செலினியம் மற்றும் பொட்டாசியம், ஆண்களின் உடலில் உருவாகும் புற்றுநோய் செல்களை தடுக்கும். குறிப்பாக ஆண்களின் பிறப்புறுப்பை தாக்கும் ப்ரோஸ்டேட் புற்றுநோயில் இருந்து காக்கும்.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க...
உணவில் பன்னீர் சேர்த்து கொண்டால் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை உறுதிப்படுத்தி நோய்களில் இருந்து காப்பாற்றும். அத்துடன் ரத்த ஓட்டத்தை சீராக்கி உடலில் ரத்தம் சார்ந்த நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். இதில் உள்ள விட்டமின் பி, குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும்.

ஆண்மை குறைவை குணப்படுத்த..!
பன்னீரில் உள்ள ஜின்க் உடலின் செயல்பாட்டை சீராக வைக்க உதவுகிறது. பல ஆண்களுக்கு இன்று இருக்கும் பிரச்சினைகளில் முதன்மையானது இந்த விந்தணு குறைபாடே. பன்னீரில் உள்ள அதிகப்படியான ஜின்க், ஆண்களின் விந்தணு அதிகரித்து அவற்றின் ஆரோக்கியத்திற்கும் நன்கு உதவுகிறது. அத்துடன் விந்தணு தொடர்பான நோய்களையும் தடுக்கிறது.

பட்டு போன்ற முகத்தை பெற...
முகம் அழகாக வேண்டும் என்று பலவிதமான வேதி பொருட்களையும் நாம் பயன்படுத்துகின்றோம். இதனால் அதிக பணம் மட்டுமே வீணாகிறது. இதனை சரி செய்ய பன்னீர் இருக்கிறது. பன்னீர் உங்கள் முகத்தை பளபளவென மாற்ற பெரிதும் பயன்படுகிறது. இதில் உள்ள செலினியம் மற்றும் விட்டமின்கள் முக அழகிற்கு துணை புரிகிறது.

யாரெல்லாம் இதை சாப்பிட கூடாது...?
எந்த ஒரு உணவாக இருந்தாலும் அது குறிப்பிட்ட அளவே எடுத்து கொள்ள வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகத்தான் கூடும்.
- குழந்தைகளுக்கு தினமும் பன்னீர் தருவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது பல் சொத்தைக்கு உதவுகிறது. வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை இதை கொடுத்தல் நன்று.
- ஆஸ்துமா, அலர்ஜி போன்றவற்றால் பாதிக்கபட்டவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

உடல் பருமனுக்கு நோ பன்னீர்..!
- அதிக உடல் எடை கொண்டவர்கள் பன்னீரை உணவில் சேர்த்து கொள்ள கூடாது.
- ரத்த அழுத்தம் அதிகம் உள்ள பெரியோர்கள் பன்னீரை கட்டாயம் தவிர்க்க
வேண்டும்.
- இதய நோயாளிகள், மன அழுத்தம் கொண்டவர்கள் பன்னீர் சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும்.
எனவே, தினமும் பன்னீர் சாப்பிடாமல் வாரத்திற்கு ஒரு சில நாட்கள் உண்டால் அது உடலுக்கு நலனையே தரும்.



Click it and Unblock the Notifications
