உயர் ரத்த அழுத்தத்தைப் போக்கும் முசுமுசுக்கை கொடிகள்!! பார்த்தா யூஸ் பண்ணுங்க!!

By: Gnaana
Subscribe to Boldsky

வேலிகளில், சாலையோர மரங்களில் படர்ந்து வளர்ந்திருக்கும் ஒரு கொடி வகை மூலிகை, காண்பதற்கு, கோவை இலைகள் போன்று காட்சியளிக்கும், அவை முசுமுசுக்கை கொடிகள் என்று அழைக்கப்படுகின்றன. மலர்கள் மஞ்சள் வண்ணத்தில் காணப்படும், தண்டுகள் மற்றும் இதன் காய்களில் சுணைகள் எனும் நுண்ணிய முட்கள் போன்ற நார்கள் காணப்படும். சிறிய வடிவிலான காய்கள் பழுத்தபின் சிவந்த வண்ணத்தை அடையும்.

நிலத்தில் படர்ந்தும், மரங்கள் அல்லது வீடுகளின் மேற்கூரைகள் மேல் படர்ந்து வளரும் முசுமுசுக்கை கொடியை, கிராமங்களில் பேய்ப்புடலை என்றும் அழைப்பர். முசுமுசுக்கை கொடி, ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச பாதிப்புகளுக்கு அரு மருந்தாகத் திகழ்கிறது.

Benefits of Mukia Maderaspatana to live healthily

இதன் இலைகள் மற்றும் வேர்கள் மருத்துவப் பலன்கள் மிக்கவை. உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டின் சத்தும் வைட்டமின் C சத்தும் நிறைந்தவை, இரும்பு, கால்சியம் மற்றும் நார்ச்சத்து மிக்கவையாகவும் திகழ்வதால், முசுமுசுக்கை இலைகளை, உணவில் சேர்த்து, துவையல் போலவோ அல்லது தோசை மாவில் சேர்த்து அரைத்து, தோசை போலவோ உண்டு வருகிறார்கள்.

சித்தர்கள் உரைத்த சிறந்த மூலிகைகளில், முசுமுசுக்கை மூலிகையும் ஒன்று. செரிமானமின்மை, வாந்தி போன்றவற்றை சரி செய்து, பசியைத் தூண்டும், நுரையீரல் பாதிப்பை சரியாக்கி சுவாச நரம்புகளில் ஏற்படும் தொற்றுக்கள் மற்றும் புண்களை ஆற்றி, சளியைப் போக்கும், உடல் சூடு தணித்து, கண் எரிச்சலை நீக்கும். தலையில் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படுவதைத் தடுத்து, இளநரையை போக்கும் ஆற்றல் மிக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இருமல் தீர..

இருமல் தீர..

சிலருக்கு கபத்தின் பாதிப்பினால், சளி அதிகமாகி, சுவாசப் பாதைகளில் பாதிப்பை ஏற்படுத்தி, இருமலை அதிகரிக்கும். சளியின் தீவிரத்தால், இருமவும் முடியாமல் மூச்சு வாங்கும். இந்த பாதிப்பைப் போக்க, முசுமுசுக்கை இலைகளை நிழலில் உலர்த்தி, தூளாக்கி வைத்துக்கொண்டு, அத்துடன் தூதுவளைப் பொடியை கலந்து, இரண்டையும் சிறிதளவு எடுத்துக் கொண்டு, தினமும் இரு வேளை, தேனில் கலந்து சாப்பிட்டு வர, மூச்சிரைப்புடன் கூடிய இருமல் குணமாகி, சுவாசம் சீராகி விடும்.

உடல் சூட்டைத் தணிக்கும் முசுமுசுக்கை குடிநீர் :

உடல் சூட்டைத் தணிக்கும் முசுமுசுக்கை குடிநீர் :

முசுமுசுக்கை தூளை, சிறிதளவு நீரில் கலந்து நன்கு காய்ச்சி பருகி வர, தொற்றுக் கிருமிகளால் ஏற்படும் சளி, தும்மல் போன்ற சுவாச பாதிப்புகள் விலகும்.

சுவாச நரம்புகளில் உள்ள தொற்றைக் களைந்து, சுவாசத்தை சீராக்கும் தன்மை மிக்கது. வாந்தி, ஜுரம் போன்ற பாதிப்புகளுக்கும் நிவாரணம் அளிக்கும். உடல் எரிச்சல் மற்றும் சூட்டின் பாதிப்புகளைப் போக்கும்.

இளநரை போக்கும் முசுமுசுக்கை எண்ணைய் :

இளநரை போக்கும் முசுமுசுக்கை எண்ணைய் :

முசுமுசுக்கை இலைகளை, நல்லெண்ணை சேர்த்து காய்ச்சி, வார இறுதியில், சனிக்கிழமைகளில் இந்த எண்ணையை உடலில் தேய்த்து குளித்து வர, உடல் சூட்டினால் உண்டான கண் எரிச்சல், உடல் எரிச்சல் நீங்கி, உடல் குளிர்ச்சி அடையும். முடி உதிர்வதைத் தடுத்து, இளநரை பாதிப்புகளையும் சரி செய்யும்.

மூச்சுத் திணறலை குணப்படுத்த :

மூச்சுத் திணறலை குணப்படுத்த :

முசுமுசுக்கை இலைகளை சிறிய வெங்காயத்துடன் சேர்த்து அம்மியில் அரைத்து சூட்டில் வதக்கி, அதை உணவில் கலந்து சாப்பிட்டு வர, சுவாச பாதிப்புகளால் சரியாக சுவாசிக்க முடியாமல், மூச்சுத் திணறல் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கி, சுவாசம் சீராகும். இரத்தத்தில் கலந்த நச்சுக்களை வெளியேற்றும்.

கோபத்தை குறைக்கும் :

கோபத்தை குறைக்கும் :

சிலருக்கு சுவாச பாதிப்புகளால், மனம் ஒருநிலைப்படாமல் அலைபாய்ந்து கொண்டிருக்கும், இதனால் அதிக இரத்த அழுத்தம் ஏற்பட்டு, எல்லோரிடமும் எரிச்சல் மற்றும் கோபம் ஏற்பட்டு, அதனால் யாவரும் விலகி, தனிமையில் தவித்து வருவார்கள். இவர்களின் பாதிப்பையும் முசுமுசுக்கை போக்கும்.

ரத்தம் சுத்தமாகும் :

ரத்தம் சுத்தமாகும் :

முசுமுசுக்கை குடிநீர், மற்றும் முசுமுசுக்கையில் செய்த துவையல், மற்றும் பொரியல் போன்ற உணவுகளை தினமும் சாப்பிட்டு வர, மன நல பாதிப்புகள் சரியாகி, உணர்வுகள் கட்டுப்படும். காண்பவர் மகிழும் வண்ணம், முகமும் அமைதியாகி, பொலிவாகும். இரத்தம் சுத்தமாகி, அதிக இரத்த அழுத்த பாதிப்புகள் விலகி, உடல் நலம் மேம்படும்.

பசியைத் தூண்டும் :

பசியைத் தூண்டும் :

முசுமுசுக்கை வேர்களை, நீரில் இட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை தினமும் பருகி வர, துரித வகை உணவுகளை சாப்பிட்டு, உண்ட உணவு செரிமானமாகாததாலும், வயிற்றில் சேர்ந்த நச்சுக்களாலும், பசியின்றி, உடல் சோர்ந்து இருப்பவர்கள், சோர்வு நீங்கி, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, பசியெடுத்து, நன்கு சாப்பிடுவர்.

இருமலால் ஏற்படும் நெஞ்சு எரிச்சல் மற்றும் சுவாச பாதிப்புகளை சீர் செய்து, சளியைப் போக்கி, உடலை வலுவாக்கும்.

சளி ஜலதோஷம் போக்கும்:

சளி ஜலதோஷம் போக்கும்:

சிறுவர் சிறுமியர் ஒவ்வாமை மற்றும் சக பிள்ளைகளுடன் விளையாடும்போது ஜலதோச தொற்று ஏற்பட்டு, மூக்கில் நீர் ஊற்றும் சளித்தொல்லை மற்றும் இருமல் போன்ற பாதிப்புகளால் அவதிப்படுவார்கள்.

இந்த பாதிப்புகளை சரி செய்ய, முசுமுசுக்கை வேரை சாறெடுத்து, அந்தச் சாற்றில், பனை வெல்லம் கலந்து, சாப்பிட வைக்க, மூக்கில் நீர் ஒழுகும் சளித் தொற்று பாதிப்புகள் விலகி, சுவாசம் சீராகி, பிள்ளைகள் மீண்டும் இயல்பாகி விடுவார்கள்.

வீட்டில் உள்ள அனைவரும் முசுமுசுக்கையை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வர, சளி இருமல் போன்ற பாதிப்புகள் விலகி, உடல் நலமாகும்.

குறட்டைத் தொல்லை போக்கும் :

குறட்டைத் தொல்லை போக்கும் :

பகல் எல்லாம் குடும்பத்தாருக்காக உழைத்து களைத்து, இரவில் உறங்கும் நேரம்தான் உண்மையான ஒய்வு என்று ஓயாமல் உழைக்கும் வீட்டில் உள்ள பெண்மணிகளுக்கு, இரவில் அந்த சிறிய உறக்கமும் அமைதியாக அமையாமல், கணவரின் குறட்டை சத்தத்தில் உறக்கம் வராமல் சிரமப்படுவார்கள்.

இந்த பாதிப்பை போக்க, தினமும் முசுமுசுக்கை இலைகளை துவையல் போல உணவில் சேர்த்தோ அல்லது அடை போல செய்தோ சாப்பிட்டு வர, விரைவில் குறட்டை பாதிப்பு விலகி, அனைவரும் சுகமாக உறங்க வாய்ப்பாகும்.

உடலுக்கு ஆற்றல் தரும் :

உடலுக்கு ஆற்றல் தரும் :

முசுமுசுக்கை தோசை...

ஊறவைத்த சிறிது புழுங்கல் அரிசியுடன் சிறிது முசுமுசுக்கை இலைகளைச் சேர்த்து, தோசை மாவு பதத்தில் அரைத்து, தோசையாக்கி கல்லில் இட்டு சாப்பிட, சளி ஜுரத்தின் தீவிரத்தால் நாவில் ஏற்பட்ட ருசியின்மை மாறி, சளித்தொல்லையும் விலகும்.

முசுமுசுக்கை அடை...

முசுமுசுக்கை அடை...

முசுமுசுக்கை இலைகளை அரைத்து, அத்துடன் அரிசி மாவு, இஞ்சி, மிளகு ஜீரகம் இந்துப்பு சேர்த்து, நன்கு கெட்டியாக மாவை பிசைந்துகொண்டு, கல்லில் நல்லெண்ணெய் ஊற்றி அடைபோல செய்து சாப்பிட, சுவாச பிரச்னைகள் தீரும், இரத்தம் சுத்தமாகும், தும்மல் மற்றும் குறட்டை பாதிப்புகள் விலகும்.

உடலில் உள்ள தொற்றுக்கிருமிகள் பாதிப்புகள் விலகி, உடல் வலுவாகி, மனம் புத்துணர்ச்சி அடையும்.

முசுமுசுக்கை கடுமையான சுவாச பாதிப்புகளான ஆஸ்துமா மற்றும் டி.பி. எனும் எலும்புருக்கி வியாதிகளை சரிசெய்து, நுரையீரலை சீராக்கி, உடல் நலம் காக்கும், அரிய மூலிகையாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Benefits of Mukia Maderaspatana to live healthy

Benefits of Mukia Maderaspatana to live healthily
Story first published: Tuesday, January 16, 2018, 11:05 [IST]
Subscribe Newsletter