For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எடையை வேகமாக குறைக்க சாப்பிடும் போது இத செஞ்சா போதும்!

நீங்கள் சாப்பிடும் உணவுகளிலேயே இந்தந்த மாற்றங்களை செய்தால் நீங்கள் எடுக்கக்கூடிய கார்போஹைட்ரேட்டின் அளவை குறைத்திடலாம்

|

இப்போதெல்லாம் ஒவ்வொரு உணவை விரும்பி ருசித்து சாப்பிட எல்லாம் முடிவதில்லை, மாறாக இதில் எத்தனை கலோரி இருக்கிறது என்று எண்ணத் துவங்கிவிட்டோம்,இதில் வேறென்ன பொருட்கள் சேர்த்திருக்கிறார்கள். இதனை சாப்பிடுவதால் உடலுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமா என்ற பயம் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது. அந்த அளவிற்கு நமது முக்கியத்துவத்தை வைத்திருக்கிறோம்.

உடல் எடைக்கும் சரி, ஆரோக்கியத்திற்கும் சரி, நாம் சாப்பிடுகிற உணவு தான் முக்கியப்பங்காற்றுகிறது. அதனால் அதனை எப்படி எந்த அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வு நமக்கு அவசியம் இருந்தாக வேண்டும். அதே சமயம், உணவுகளில் கார்போஹைட்ரேட் என்பது மிகவும் முக்கியமாகும். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை வேண்டாம் என்று ஒரேயடியாக தவிர்க்க முடியாது, ஏனென்றால் அவை தான் நமக்கு எனர்ஜியை கொடுக்கிறது, அதோடு கார்போஹைட்ரேட் அதிகமாக சேர்ந்தால் அதுவே நமக்கு கொழுப்பாகவும் மாறிடுகிறது.

இங்கே மிக முக்கியமான விஷயம், அதுவும் நீங்கள் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிற ஒரு விஷயத்தை பற்றி தான் பேசப் போகிறோம்.கார்போஹைட்ரேட் உணவை எடுத்துக் கொண்டாலும் அதன் அளவு குறைக்க ஏதேனும் வழியிருக்கிறதா என்பது தான் இன்றைக்கு பலரது கேள்வியாக இருக்கிறது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

சர்க்கரை, கார்போஹைட்ரேட் விஷயத்தில் முக்கியமான இடத்தை வகிக்கிறது. சர்க்கரை பயன்படுத்தக்கூடாது என்று தெரிந்தவர்களுக்கு வெள்ளைச் சர்க்கரையில் மட்டுமே கார்போஹைட்ரேட் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்காக, வெள்ளைச் சர்க்கரை மட்டும் பயன்படுத்தக்கூடாது என்று அர்த்தம் கிடையாது. தேன், மற்றும் இதர இனிப்பு சார்ந்த பொருட்கள் எது எடுத்தாலும் அவை கார்போஹைட்ரேட்டினை அதிகப்படுத்திடும். அதனால் இனிப்புள்ள பொருட்களை எடுக்கும் போது கவனம் தேவை.

#2

#2

குக்கரில் சமைக்கப்பட்ட உணவினை எடுத்துக் கொள்ளுங்கள். சூடாக சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். குக்கரில் குறைந்த அளவிலான சூட்டில் வைத்து தயாரிக்கப்பட்ட உணவினை எடுத்துக் கொள்ளுங்கள்.

#3

#3

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளுக்கு பதிலாக பழங்களைச் சாப்பிடுங்கள். பழங்களிலிருந்து உங்களுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைத்திவிடும் என்பதுடன் இன்னபிற நியூட்ரிஷியன்களும் கிடைத்துவிடும் என்பதை மறக்க வேண்டாம்.

சர்க்கரை அளவை அதிகரிக்ககூடாது ஆனால் பசியை போக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் பெர்ரி பழங்கள். இவற்றில் அதிகப்படியான ஃபைபர் இருக்கிறது அதனால் நிறைவான உணர்வைத் தந்திடும். அதோடு உங்கள் ரத்தத்தின் சர்க்க்ரை அளவினை எக்குத்தப்பாக அதிகரிக்கச் செய்யாது.

#4

#4

கார்போஹைட்ரேட் வேண்டாம் என்பதற்காக முற்றிலும் ஒதுக்கக்கூடாது. அது உங்களுக்கே சில பிரச்சனைகளை ஏற்படுத்திடும். அதோடு ஒரே உணவில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் இருக்கும் உணவைச் சாப்பிடுவதைக் காட்டில் காம்ப்ளெக்ஸ் கார்ப்ஸ் எனப்படுக்கூடிய பல்வேறு வகையான உணவுகளிலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு தட்டு நிறைய அரிசி சாதத்தை சாப்பிடுவதைக் காட்டிலும், முழு தானியங்கள், காய்கறி மற்றும் ப்ரோட்டீன் நிறைந்த உணவு என பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

#5

#5

உணவுகளின் இடைவேளையில் உண்பதற்காக என பாக்கெட் உணவுகளையோ அல்லது ஸ்நாக்ஸ் அல்லது அடிக்கடி டீ, காபி போன்றவற்றை குடித்துக் கொண்டிருந்தால் அதனை தவித்திடுங்கள்.

மாறாக நட்ஸ் சாப்பிடலாம். நட்ஸ் உங்களுக்கு எனர்ஜியை கொடுக்கும்.

#6

#6

என்ன தான் பசித்தாலும் இன்ஸ்டண்ட் உணவு, உடனே கிடைத்திடும் என்று அதன் பக்கம் செல்லாதீர்கள். அரிசி சாதம் சமைப்பதாக இருந்தால் உடன் காலிஃப்ளவரை சேர்த்துக் கொள்ளலாம். அதோடு சர்க்கரை வள்ளிக்கிழங்கினையும் சாப்பிடலாம்.

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் கார்போஹைட் அதிகமாகத் தான் இருக்கிறது. அதைத் தாண்டி அதில் நிறைய ஃபைபர் இருக்கிறது மேலும் எண்ணற்ற நியூட்ரிஷியன்கள் நிறைந்து இருக்கின்றன.

#7

#7

அவசர அவசரமாக கிளம்பும் போது காலை உணவினை எல்லாம் தயார் செய்து எடுத்துச் செல்ல முடியவில்லை அதனால் காலையில் இரண்டு பிரட் மற்றும் முட்டை என்று சிலர் சொல்வதை கேட்டிருப்போம், இன்னும் சிலர் காலை உணவையே தவிர்த்துக் கொண்டிருப்பார்கள்.

காலை உணவினை கண்டிப்பாக தவிர்கக்கூடாது. ரைஸ் பிரட்டுக்கு பதிலாக பிரவுன் பிரட் பயன்படுத்துங்கள். தற்போது சந்தைகளில் நட் ஃப்ளார்,பாதாம் ஃப்ளார் போன்ற மாவுகளில் தயாரிக்கப்பட்ட பிரட் கிடைக்கிறது அவற்றையும் பயன்படுத்தலாம்.

#8

#8

காய்கறிகள் மற்றும் பழங்கள் எல்லாவற்றிலும் சிறந்த சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. சத்துக்களே இல்லாதது என்று நாம் எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. நீங்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடும் போது, எப்போதும் ஒரே மாதிரியான காய்கறியை சாப்பிடாமல் இரண்டு அல்லது மூன்று வகை காய்களைப் போட்டு சாப்பிடுங்கள்

பல்வேறு வண்ணங்களில் சாப்பிட்டக்கூடிய அந்த காய்கறி உங்களுக்கு நன்மையைத் தரும்.

#9

#9

சாப்பிட்டு முடித்ததும் ஐஸ் க்ரீம் அல்லது ஸ்வீட் என எதாவது டெசர்ட் சாப்பிடுவார்கள். டெசர்ட் உணவுகளைச் சாப்பிட்டால் தான் உணவு சாப்பிட்ட திருப்தியே கிடைக்கிறது. அதற்காக ஐஸ்க்ரீம் எல்லாம் எடுத்துக் கொண்டால் எக்குத்தப்பாக உங்களது கார்போஹைட்ரேட் அளவு அதிகரித்திடும். அதற்காக நீங்கள் என்ன செய்யலாம் தெரியுமா?

ஃப்ரோஜன் ஃப்ரூட் சாப்பிடலாம். அதாவது பழங்களை கட் செய்து அதனை ஃபீரீசரில் வைத்து விடுங்கள்.வேண்டுமானால் அதில் சிறிதளவு பால் சேர்க்கலாம். பின்னர் அது உறைந்ததும் அதனை சாப்பிடலாம்.

#10

#10

பெரும்பாலானோர் செய்கிற தவறு இது தான். பொதுவாக யாராக இருந்தாலும் சரி, தங்களது உடலை தண்ணீர் சத்துடன் வைத்திருக்க வேண்டியது அவசியம். இது உங்களது உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை நிற்கின்றது, உணவு செரிமானத்திற்கும் தண்ணீர் அத்தியவசியமான ஒன்றாக இருக்கிறது.

அதை விட நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய கார்போஹைட்ரேட்டின் அளவு குறைய வேண்டும் என்று நினைத்தீர்களானால் அதன் முக்கிய வேலையாக தண்ணீரை குடித்திடுங்கள்.

 #11

#11

ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடுவது என்பது இன்றைக்க அன்றாட நிகழ்வாகிவிட்டது. ஒவ்வொரு ஹோட்டல்களில் கொடுக்கப்படுகிற அளவு வேறுபடும். அதனால் தேவையில்லாமல் அதிகப்படியான உணவுகளை ஆர்டர் செய்வதை தவிர்க்க முன் கூட்டியே சேர்விங் சைஸ் என்ன என்பதனை தெரிந்து கொள்ளுங்கள்.

கூடுதலாக அதில் சேர்க்கப்படுகிற மற்றும் தயாரிப்பு முறைகளையும் தெரிந்து கொள்ளலாம்.

#12

#12

இரவு உணவு மற்ற நேரங்களை விட சற்று குறைவானதாக எடுத்துக் கொள்ளுங்கள். மதியம் சாப்பிட்டது, அது கூட சரியா சாப்டல இப்போ நிறையா சாப்டணும், வயிறு முட்ட சாப்டணும் என்று நினைத்துக் கொண்டு போகாதீர்கள்.

மாறாக லைட்டாக எடுத்துக்கொண்டாலே அது உங்களுக்கு நிறைவான உணர்வைத் தந்திடும்.

#13

#13

காய்கறி சாலட் அடிக்கடி சாப்பிடுங்கள். வெளியில் வாங்கி சாப்பிடுவதை விட நீங்களே தயாரித்து சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் எந்த காய்கறியில் என்ன சத்து இருக்கிறது, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற அளவு உங்களுக்கு தெரியும்,ஒரு வேளை உணவுக்கு பதிலாக சாலட் மட்டுமே சாப்பிடலாம்.

#14

#14

உணவுகளைச் சாப்பிடுவதில் நேரம் என்பது மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு உணவு இடைவேளைக்கும் இருக்கக்கூடிய நேர மாற்றத்தினை நீங்கள் கண்டிப்பாக உணர்ந்திட வேண்டும்.

அதேபோல கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிடுகிறீர்கள் அதனை தவிர்க்க வேறு வழியில்லை எனும்போது அதனை காலை வேலைகளில் சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். அதாவது உடலுழைப்பு அதிகமாக இருக்கக்கூடிய நேரத்தில் கார்போஹைட்ரேட் உணவினை எடுத்துக் கொள்ளுங்கள்.

#15

#15

எல்லாவற்றையும் விட முக்கியமானது இது தான். தூக்கம், ஒவ்வொருவரின் ஆரோக்கியமான உடலுக்கு சீரான தூக்கம் அவசியமானதாகும். அவை தான் உங்கள் மூலை சீராக இயங்குவதற்கும் உடலில் பிற உறுப்புகளுக்கு துரிதமாக தகவல்களை அனுப்புவதற்கும் அடிப்படையாகும்.

தூக்கம் சரியாக இல்லையெனும் போது எப்போதும் சோர்வாகவே உணர்வீர்கள். அதற்காக சோர்வை போக்குகிறேன் என்று சொல்லிக் கொண்டு தொடர்ந்து எதாவது உணவினை எடுத்துக்கொண்டேயிருப்பீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing Carbs Cutting Techniques

Amazing Carbs Cutting Techniques
Story first published: Friday, March 2, 2018, 11:46 [IST]
Desktop Bottom Promotion