Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
இந்த 12 உணவுகளையும் அதிகம் சாப்பிடுபவர்களாக நீங்கள்...? அப்ப உஷார்...
இந்த உலகில் நம் அனைவருக்கும் பிடித்தமான உணவுகள் என்று ஒரு நீண்ட பட்டியலே இருக்கும். அப்படி நாம் விரும்பும் உணவுகளை அளவாக சாப்பிடு என்ற வார்த்தைக்கே நாம் இடம் அளிப்பதில்லை. ஆனால், அப்படி நாம் விரும்பி உண்ணும் உணவு நம் உடலுக்கு தீங்கு விளைவித்தால்?

அது தான், பெரியவங்க பழமொழி சொல்லுவாங்களே, அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுனு, அத தான் இப்ப நானும் சொல்றேன். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் 12 உணவு பொருட்களை நாம் விரும்பினாலும் அதிகமாக சேர்த்து கொள்ளக்கூடாது. ஏனென்றால், அவற்றின் குணம் அப்படி. அப்படி என்ன குணமென்று பார்த்துவிடலாமா...!!!

நட்சத்திர பழம் (Star fruit)
சிறிய நட்சத்திர வடிவில் தோற்றமுடைய இந்த பழம் தெற்கு அமெரிக்கா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில அதிகளவில் காணப்படும். இருப்பினும் எல்லா நாடுகளிலும் சாலட், ஜூஸ் போன்றவற்றில் பெருமளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. மேலும், பலர் இந்த பழத்தை அப்படியே சாப்பிடுவதையும் விரும்புவர். இந்த பழத்தில் இருக்கும் விஷத்தன்மை 1980 ஆம் ஆண்டுகளில் முதன்முறையாக கண்டறியப்பட்டது. நட்சத்திர பழம் மைய நரம்பு மண்டலத்தில் மனத் தளர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. இந்த பழம் பெரும்பாலான மக்களுக்கு மிகக் குறைந்த தீங்கு விளைவிப்பதாக இருந்தாலும், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. இதன் நச்சுத்தன்மையின் பொதுவான அறிகுறிகளாக விக்கல்கள், வாந்தி, பலவீனம் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட உணர்வு ஆகியவை அடங்கும். எனவே, இதனை அதிகமாக சேர்த்து கொள்வதை அறவே குறைப்பது சால சிறந்தது.

மீன் எண்ணெய்
ஆரோக்கியமான உடலுக்கு ஒமேகா - 3 முக்கியமானதாக இருந்தாலும், அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. மீன் எண்ணெயில் இது அதிகமாக இருப்பதால் இதனை அதிகமான உண்கின்றனர். வழக்கமாக ஒரு நாளுக்கு 1 முதல் 6 கிராம் வரையிலான அளவு போதுமானது. அதுவே நாள் ஒன்றுக்கு 13 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவு எடுத்து கொள்ளும் போது, அது உடலில் உள்ள ரத்தத்தின் அளவை குறைக்கும் அபாயம் ஏற்படக்கூடும். ஏற்கனவே, ரத்த குறைபாடு உள்ளவர்கள் இதனை உட்கொண்டால் பெரும் விளைவை சந்திக்க நேரிடும். மேலும், மீனின் கல்லீரல் எண்ணெய் அதிகமான வைட்டமின் ஏ கொண்டுள்ளதால், அதுவும் சற்று ஆபத்தானது தான். இவை கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைளுக்கும் முக்கியமாக கவனிக்க வேண்டியவை. எனவே, மருத்துவர்கள் பரிந்துரைத்த அளவை தவிர்த்து அதிகப்படியான மீன் எண்ணெயை மறந்தும் பயன்படுத்தி விடாதீர்கள்.

கொம்புச்சா டீ
வீடுகளிலும், உணவு விடுதிகளிலும் பிரபலமான புளிக்க வைக்கப்பட்ட ப்ளாக் டீ தான் கொம்புச்சா டீ. நொதித்தல் முறையில், ஈஸ்ட் மற்றும் பாக்டீரியாக்கள் கொண்டு புளிக்க வைக்கப்பட்ட இந்த டீ ஆரோக்கியமான பானமாக திகழ்வது உண்மை தான். இருந்தாலும், இது மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய காரணிகளை உள்ளடக்கியது. அமெரிக்க புற்றுநோய் சமூகம் இது குறித்த ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி, கொம்புச்சா டீயில் பூஞ்சை போன்ற நச்சுக்கள் உள்ளதாகவும், அவை உடலுக்கு கேடு விளைவிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. ஆரோக்கியமான உடல்நிலை கொண்டவர்கள் ஒரு நாளைக்கு 4 அவுன்ஸ் அளவிற்கு இதனை குடிப்பதால் அது சாதாரணம் என்றும், அதுவே, ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் இதனை பருவதாலோ, அல்லது அதிகமான இதனை குடிப்பவர்களுக்கு நிச்சயம் ஆரோக்கிய குறைபாடு ஏற்படக்கூடும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. நம்ப தகுந்த இடங்களில் மட்டும் கொம்புச்சா டீ வாங்கி பருக அறிவுறுத்துவது எங்களது கடமை.

சூரை மீன்
மீன்களில் ஆரோக்கியத்திற்கு உதவும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது. இருந்தாலும், சூரை மீனில் மெதில்மெர்குரி எனும், சுற்றுச்சூழலை கெடுக்கும் நச்சுத்தன்மை உள்ளது. இது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நச்சுத்தன்மை கொண்டது. மேலும், இது செவி திறன், பேச்சு குறைபாடு, பார்வை குறைபாடு, குழந்தைகளின் வளர்ச்சியில் பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும். எனவே, வாரத்திற்கு 2 முறை மட்டுமே அவற்றை சாப்பிடும் பழக்கத்தை பின்பற்றுங்கள். ஆரோக்கியமாக இருங்கள்.

கேரட்
நாளைக்கு 24 மணி நேரமும் கேரட்டை சாப்பிடும் பழக்கம் கொண்டது முயல். கேரட்டில் டன் கணக்கில் பீட்டா கரோட்டின் உடலுக்கு ஆரோக்கியம் அளித்தாலும், இதை அதிகமாக சாப்பிடும் போது, பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். அது தான் நன்கு அறியப்பட்ட கரோடினேமியா. எப்பொழுது அதிகமான கேரட்டை சாப்பிடுகிறோமோ, அப்போது கரோட்டின் உடலில் உள்ள கொழுப்பு செல்களில் அதிகமாக சேர்ந்துவிடும். மேலும், இதனால் உடலின் உள்ளங்கை, மூட்டு, மூக்கு போன்ற பகுதிகள் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் மாறக்கூடும். குழந்தைகளுக்கு அதிகமான கேரட்டை ஊட்டும் போது, இந்த பிரச்சனையை அவர்களும் சந்திக்க நேரிடும். இவற்றை அதிகமாக சாப்பிடுவதை குறைத்தாலே கரோடினேமியா தானாக குறைந்துவிடும்.

இலவங்கப்பட்டை
சூப்பரான மசாலா பொருட்களில் இலவங்கப்பட்டையும் ஒன்று. இது அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதாவது, வீக்கத்தை குறைப்பது, இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பது, இதய கோளாறுகளை குறைப்பது மற்றும் புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பது போன்ற அற்புத குணங்களை கொண்டுள்ளது. இருந்தாலும், இதனை அதிகமாக சேர்த்து கொள்வதை முற்றிலும் தவிர்த்திடுங்கள். ஏனென்றால், இலவங்கப்பட்டையில் 'குமரின்' எனும் பொருள் அதிகளவில் உள்ளதால், அது கல்லீரல் பாதிப்பு முதல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரித்துவிடும். எனவே, நாளொன்றுக்கு 2 கிராம் அளவிற்கு மட்டும் பயன்படுத்துவதை மனதில் கொள்ளுங்கள்.

பிரேசில் நட்ஸ்
அதிக அளவிலான ஆரோக்கிய கூறுகள் பிரேசில் நட்ஸில் இருக்கின்றன. அதிலும், முக்கியமான செலினியம் எனும் பொருள் உள்ளது. ஆனால், அதிக அளவிலான செலினியம் நஞ்சாகவே செயல்படுகிறது. ஒரு பிரேசில் நட்டில் 95 மைக்ரோகிராம் அளவிலான செலினியம் உள்ளது. நாளொன்றுக்கு 4 முதல் 5 நட்ஸ் சாப்பிட்டால் ஆரோக்கியமான வாழ்வில் நம்மை சற்று தள்ளி வைத்துவிடும். செலினியம் நச்சுப்பொருள் முடி உதிர்வு, ஞாபக மறதி, செரிமான பிரச்சனை உள்ளிட்டவற்றை உண்டாக்கக்கூடும். எனவே, ஒரு நாளைக்கு 2 நட்ஸ் மட்டும் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள்.

ஜாதிக்காய்
இலவங்கப்பட்டை போலவே, ஜாதிக்காயும் சுவையான மசாலா பொருள். சிறிய அளவிலான ஜாதிக்காய் உபயோகம், அற்புதமான சுவையை தரும். அதுவே, அதிகப்படியான உபயோகம், மைசிஸ்டின்சின் விஷத்தன்மையை உண்டாக்கும். இந்த நச்சுத்தன்மையின் அறிகுறிகள் குமட்டல், தலைச்சுற்றல், வயிற்று வலி, வலிப்புத்தாக்கங்கள் மற்றும் மயக்கம் ஆகியவையாகும். ஒரு நாளில் ஜாதிக்காய் 10 கிராம் அதிகம் சாப்பிட வேண்டாம் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

பச்சை இலை காய்கறிகள்
பச்சை இலை காய்கறிகளை சாப்பிடுவதும் ஆரோக்கிய கேடா என கேட்டால், ஆமாம் என்று தான் சொல்ல வேண்டும். பூமியில் விளையும் காய்கறிகள் எப்படி ஆபத்தானது என்று நீங்கள் கேட்கலாம். பச்சை காய்கறிகளில் அதிகப்படியான அயோடின் உள்ளதால் அது புற்றுநோய் மற்றும் இதய நோய்களின் தாக்கத்தை குறைக்க கூடியது தான். ஆனால், உடலில் அதிகமாக அயோடின் சேர்ந்தால், அது ஹைப்பர் தைராய்டை உருவாக்கக்கூடும். உங்களுக்கு ஏற்கனவே தைராய்டு பிரச்சனை இருந்தால், நீங்கள் நிச்சயமாக அதிக அளவிலான பச்சை காய்கறிகளை தவிர்த்தே ஆக வேண்டும். அப்படி தைராய்டு பிரச்சனை இல்லை என்றாலும் பரவாயில்லை. நீங்களும் போதுமான அளவு அயோடினை மட்டும் எடுத்து கொண்டு ஆரோக்கியமான வாழ்வை வாழுங்கள்.

காபி
காபி குடிப்பது முற்றிலும் பாதிப்பில்லை. காபியில் உள்ள ஆரோக்கியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பிற காரணிகள் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியவை. சராசரியாக 80 முதல் 120 மி.கி. காப்ஃபைன் ஒரு கப் காஃபியில் உள்ளது. நாளொன்றிற்கு 400 மி.கி. காப்ஃபைன் பாதுகாப்பானது. ஒருவேளை நீங்கள் காபி பிரியராக இருந்து, 500 மி.கி.-க்கு அதிகமான காப்ஃபைனை நீங்கள் உட்கொண்டால், அது நரம்பு மண்டலத்தை பாதித்து, வயிற்று பிடிப்புகள், இதய எரிச்சல், தூக்கமின்மை, தசை நடுக்கம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். மனிதருக்கு மனிதர் காப்ஃபைன் அளவின் தேவை அளவு மாறுபடக்கூடும். எனவே, உங்கள் உடலுக்கான அளவை அறிந்து நீங்கள் காபி பருகினால் நல்லது.

கல்லீரல்
புரத சத்துக்கள் நிறைந்த மாமிச உணவுகளில் சிறந்தது, கல்லீரல். 100 கிராம் மாட்டிறைச்சியின் கல்லீரல், நாளொன்றிற்கு 7 முறை உட்கொள்வதால் தேவையான காப்பர் மற்றும் 6 முறை உடகொள்வதால் வைட்டமின் ஏ ஆகியவை கிடைக்கப்பெறும். கொழுப்பை கரைக்கக்கூடிய வைட்டமின் ஏ, உடலின் கொழுப்பு திசுக்களில் சேர்ந்து, உடல் ஆரோக்கியத்தை கெடுக்கக்கூடும். வைட்டமின் ஏ-வில் உள்ள நச்சுத்தன்மை, எலும்பு வலி, குமட்டல், வாந்தி மற்றும் பார்வை பிரச்சனைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. காப்பரில் உள்ள நச்சுத்தன்மையால் நரம்பியல் மாற்றங்கள் ஏற்படலாம், அல்சைமர் நோய்க்கான ஆபத்து அதிகரிக்கும். நீங்கள் கல்லீரலை எவ்வளவு நேசித்தாலும், வாரம் இரண்டு முறைக்கு மேல் அதனை உட்கொள்ளக்கூடாது.

தண்ணீர்
ஆச்சரியப்பட வேண்டாம். இது உண்மை தான். உங்களால் அதிக அளவிலான நீரை தாராளமாக குடிக்க முடியும். ஆனால், நீரில் உள்ள நச்சுத்தன்மை, ஹைபோநட்ரீமியா தடகள வீரர்களுக்கு சற்று ஆபத்தானது. குறிப்பாக, 2002 பாஸ்டன் மாரத்தான் ஓட்டத்தில், 488 வீரர்களுக்கும் மேல், அதாவது 13 சதவிகிதம் பேர் ஹைகோநட்ரிமியாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக, சில இணையதள சவால்கள், உணவு கட்டுபாட்டில் உள்ளவர்களை அதிகப்படியான நீர் குடிப்பதால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் என கூறி அதனை ஊக்குவித்தனர். அதிகமான தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள சோடியம் அளவு குறையும். அது உடலின் சமநிலையை உருவாக்கிவிடும். எனவே, நாள் ஒன்றிற்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடித்தாலே உடலுக்கு போதுமானதாகும்.



Click it and Unblock the Notifications











