Latest Updates
-
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்..
இந்த பழத்தோட ஜூஸ் நீங்க அடிக்கடி குடிக்கிறீங்களா? அப்போ இது உங்களுக்குதான் படிங்க...
முலாம்பழம் பற்றி ஊட்டச்சத்து நன்மை மிக்க குணங்களையும் அதன் பயன்களையும் இங்கே விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
முலாம் பழம் என்பது மஸ்க்மெலன் என்ற குடுப்பத்தை சேர்ந்தது. பார்ப்பதற்கு பெரிய வடிவில் நீள்வட்ட வடிவில் காணப்படும். இதன் விதைகள் வெள்ளரிப் பழ விதைகள் போன்று காணப்படும். இது பொதுவாக அல்ஜீரியா மற்றும் பிரான்சின் தெற்கு பகுதியில் காணப்படுகிறது.

அதே மாதிரி சீனாவின் வடமேற்கு பகுதியான கன்சு, சீனா பெய்லன், சிலி போன்ற இடங்களிலும் இது காணப்படுகிறது. இது தர்பூசணி, காண்டலூப் பழ குடும்பத்தை போல இதுவும் புகழ் பெற்றது.

ஊட்டச்சத்துக்கள்
இதில் நிறைய விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் உள்ளன. இது பார்ப்பதற்கு இளம் பச்சை நிறத்தில் உள்ளே சதைப்பகுதி மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதை நீங்கள் சாலட் போன்றவற்றில் சேர்த்து கூட சாப்பிடலாம். கலோரி குறைந்த, கொழுப்பற்ற உணவு. இதில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்கு, இரும்புச் சத்து, காப்பர், பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீஸ் போன்ற பொருட்கள் உள்ளன.

ஊட்டச்சத்து அளவுகள்
100 கிராம் முலாம் பழத்தில் 36 கிலோ கலோரி உள்ளது.
9.1 கிராம் கார்போஹைட்ரேட்
1 கிராம் நார்ச்சத்து
0.05 கிராம் புரோட்டீன்
3 மைக்ரோகிராம் விட்டமின் ஏ
18 மில்லி கிராம் விட்டமின் சி
2 28 மில்லி கிராம் பொட்டாசியம்
18 மில்லி கிராம் சோடியம்
6 மில்லி கிராம் கால்சியம்
0.1 7 மில்லி கிராம் இரும்புச் சத்து
முலாம் பழத்தின் உடல் நல நன்மைகள்

ஹைபர் டென்ஷன்
இதிலுள்ள பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தை சரி செய்கிறது. இது இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இது இயற்கையாகவே இனிப்பு மட்டும் புளிப்பு சுவை கொண்டது.

கருவுற்ற பெண்கள்
இதிலுள்ள தாதுக்கள், விட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் கருவுற்ற பெண்களுக்கும் கருவில் வளரும் சிசுவுக்கும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது உதவுகிறது. இதிலுள்ள போலேட் நரம்பு மண்டல குறைபாடு மற்றும் பிறப்பு குறைபாடுகள் களைய உதவுகிறது. மேலும் உடலுக்கு ஆற்றலை கொடுக்கவும், கால்களில் ஏற்படும் பிடிப்பிற்கு, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. கர்ப்ப காலத்தில் மட்டுமல்லாமல் குழந்தை பிறந்த பிறகு கூட அடிவயிற்று திசுக்களின் மீட்பிற்கு இதிலுள்ள விட்டமின் ஏ சத்து உதவுகிறது. இதே சத்து மாம்பழம், திராட்சை போன்றவற்றில் உள்ளது.

எடை குறைப்பு
இதன் அதிக நார்ச்சத்து காரணமாக இதை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. நீங்கள் உடல் எடையை குறைக்க நினைத்தால் அதற்கு இநத முலாம் பழம் சிறந்தது. இதிலுள்ள நார்ச்சத்து சீரண சக்திக்கும் மலச்சிக்கலுக்கும் உதவுகிறது. இதிலுள்ள 90%நீர்ச்சத்து நம் பசியை போக்கி அதிகமாக சாப்பிடுவதை தடுக்கிறது. இதனால் உடல் எடை வெகுவாக குறைகிறது.

கெட்ட கொலஸ்ட்ரால்
முலாம் பழத்தில் நீரில் கரையக் கூடிய மற்றும் கரையாத இரண்டு நார்ச்சத்துகள் உள்ளன. இந்த நீரில் கரையக் கூடிய நார்ச்சத்துகள் இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி கார்போஹைட்ரேட் உறிஞ்சும் திறனை மெதுவாக்குகிறது. இதனால் இந்த நார்ச்சத்து நேரடியாக எல். டி. எல் என்ற கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கிறது.

எலும்பு மற்றும் பற்கள்
இதில் அதிகளவில் கால்சியம் சத்து இருப்பதால் பற்கள் மற்றும் எலும்புகளின் வலிமைக்கு உதவுகிறது.

சரும ஈரப்பதம்
இதிலுள்ள விட்டமின் சி சத்து உங்கள் சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து சரும கொலாஜனை மேம்படுத்துகிறது. கொலாஜன் என்பது சரும புரோட்டீன் இது சரும செல்கள் மற்றும் இரத்த செல்களை நீட்சியடைய செய்கிறது. எனவே நீங்கள் முலாம்பழ ஜூஸை குடித்து வந்தால் சரும சுருக்கங்கள், சருமம் தொய்வடைதல், சீக்கிரம் வயதாகுதல் போன்றவற்றை தள்ளிப் போடலாம். இது சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தையும், ஆற்றலையும் தருகிறது.

சீரண சக்தி
இதிலுள்ள கரையக் கூடிய நார்ச்சத்துகள் சீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. வயிறு வீக்கம், மலச்சிக்கல் போக ஒரு டம்ளர் முலாம் பழ ஜூஸ் போதுமானது. இதிலுள்ள விட்டமின்கள் அமிலத் தன்மையை போக்குகிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்
முலாம் பழத்தில் உள்ள விட்டமின் சி நமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்த வலிமையான நோயெதிர்ப்பு சக்தி நோய்களை அண்ட விடாமல் தடுக்கும். முலாம் பழம் நமது உடலுக்கு தேவையான விட்டமின் சி அளவில் 34% அளவு பூர்த்தி செய்கிறது.

டயாபெட்டீஸ் வராமல் தடுத்தல்
நமது உடலில் போதுமான இன்சுலின் சுரப்பு இல்லாததை சரி செய்கிறது. இதன் டையூரிக் தன்மை இன்சுலின் சுரப்பை சமநிலைபடுத்துகிறது. உடலில் ஏற்படும் நீர்த்தேக்கத்தை சரி செய்கிறது. இதன் சர்க்கரை சத்து குறைவாக இருப்பதால் டயாபெட்டீஸ் நோய் வராமல் தடுக்கிறது.

ஆரோக்கியமான கண்கள்
முலாம் பழத்தில் ஷாக்ஸ்தின் மற்றும் லுடின் என்ற பொருட்கள் உள்ளன. இவைகள் கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதிலுள்ள பைட்டோ நியூட்ரிஷன் கண்களில் ஏற்படும் தொற்று, கண்புரை போன்றவற்றை சரி செய்கிறது.

நீர்ச்சத்து
முலாம் பழத்தில் 90% தண்ணீர் உள்ளது. இதில் தாதுக்கள், இரும்புச் சத்து, ஜிங்க், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இருப்பதால் உடலுக்கு போதுமான நீர்ச்சத்து கிடைக்கிறது.

முலாம் பழம் vs பரங்கிக்காய்
முலாம் பழமும் பரங்கிக்காயும் பார்ப்பதற்கு ஒன்று போலவே தோன்றும். அதற் வடிவம் நிறம் எல்லாம் ஒன்றாகவே இருக்கும். இரண்டிலும் நமது உடலுக்கு போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

முலாம் பழத்தை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்?
சரும நிறம்
முலாம் பழத்த வாங்குவதற்கு முன் அதன் சரும நிறத்தை கவனிக்க வேண்டும். பார்ப்பதற்கு லேசான மஞ்சளில் லேசான லெமன் மஞ்சளில் இருந்தால் நல்லது.

சேதமடையாமல் இருத்தல்
அதே மாதிரி பழம் வாங்குவதற்கு முன்பு அதில் எதாவது புள்ளிகள், வெட்டுகள், கீறல்கள் எதாவது இருக்குதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.

வடிவம்
வடிவத்தை பற்றி எந்த பிரச்சினையும் இல்லை. சற்று கனமான பழமாக வாங்கிக் கொள்ளலாம்.

டேப் டெஸ்ட்
அதே மாதிரி முலாம் பழம் வாங்கும் போது அதை கைகளில் வைத்து தூக்கி தட்டி பாருங்கள். அதில் வெற்று ஒலி கேட்டால் வாங்கி செல்லுங்கள். மேலும் அதனை சுற்றி உங்கள் விரல்களால் அழுத்தி பாருங்கள். இது உங்களுக்கு பழம் பழுத்து இருப்பதை காட்டும். அதன் வாசனையை வைத்து அதன் இனிப்பு சுவையை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

முலாம் பழ ஜூஸ்
தேவையான பொருட்கள்
1/4 முலாம் பழம்
1 வெள்ளரிக்காய்
350 கிராம் கீரை
1 தோலுரித்த லெமன்
செய்முறை
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக கழுவி விட்டு நறுக்கி கொள்ளுங்கள்.
இந்த பொருட்களை எல்லாம் ஒரு ஜூஸரில் சேருங்கள்
இப்பொழுது ஜூஸை மட்டும் வடிகட்டி கொள்ளுங்கள்.
ஒரு கிளாஸில் ஜூஸை ஊற்றி ஐஸ் கட்டிகள் சேர்த்து பருகலாம்.

மெலன் சால்ஸா
தேவையான பொருட்கள்
சிவப்பு வெங்காயம், சிலன்ட்லோ, முலாம் பழம், லெமன் ஜூஸ்
தேவையான பொருட்கள்
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக நறுக்கி கொள்ளவும்
இப்பொழுது நறுக்கிய பொருட்கள் மீது லெமன் ஜூஸை பிழியவும்.
நன்றாக கலக்கி விட்டு குடியுங்கள்.

பாதுகாத்து வைத்தல்
முலாம் பழத்தை நீங்கள் அறை வெப்பநிலையிலயே பாதுகாத்து வைக்கலாம். நீங்கள் அதை நறுக்கி விட்டால் பிரிட்ஜில் வைத்து பாதுகாக்க வேண்டும். 1-2 வாரத்திற்குள் பயன்படுத்தி விடுங்கள். இல்லாவிட்டால் கெட்டு போய் விடும்.



Click it and Unblock the Notifications











