இந்த உணவுகளையெல்லாம் சாப்பிட்டால் உடலில் சேர்ந்துள்ள அழுக்குகள் உடனே வெளியேறிவிடும்...!

நாம் உண்ணும் உணவு வகையில் ஆரோக்கியமான உணவுகள், ஆரோக்கியமற்ற உணவுகள் என இரு வகை உண்டு. உணவின் தன்மையை பொருத்தே இது மாறுபடும். சாப்பிட கூடிய உணவுகள் மிக மோசமானதாக இருந்தால் உடல் நலம் விரைவிலே சீர்கேடு அடைந்து விடும்.

இந்த உணவுகளையெல்லாம் சாப்பிட்டால் உடலில் சேர்ந்துள்ள அழுக்குகள் உடனே வெளியேறிவிடும்...!

இந்த வகை உணவுகள் அழுக்காக உடலில் சேர்ந்து கொண்டு, நீண்ட நாட்கள் கழித்து இவற்றின் தாக்குதலை தொடங்கும். இது போன்ற கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றி உடலை சுத்தமாக வைத்து கொள்ள ஒரு சில உணவு வகைகளே போதும். அவை என்னென்ன என்பதை இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழுக்குகள் மோசமானதா..?

அழுக்குகள் மோசமானதா..?

உடலில் சேர கூடிய அழுக்குகள் நமது உடலை விட்டு வெளியே செல்லாமமல் அப்படியே தங்கி விடும். இதனை சுத்தம் செய்யவில்லையென்றால் நமக்கு தான் ஆபத்து நேரும். குறிப்பாக இவை கல்லீரல், குடல், சிறுநீரகம், அடிவயிற்று பகுதி போன்றவற்றில் அப்படியே தங்கி விட்டு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

பீட்ரூட்

பீட்ரூட்

உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதில் இந்த பீட்ரூட் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், இரும்பு சத்து, கால்சியம், போன்றவை அதிக அளவில் உள்ளதாம். குறிப்பாக கல்லீரல் பகுதியில் சேர்ந்துள்ள நச்சுக்கள் முழுவதையும் வெளியேற்ற இந்த பீட்ரூட் உதவுகிறதாம்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெயில் காலங்களில் நமது உடலை பாதுக்காக்கும் மிக முக்கிய உணவு பொருள் இந்த வெள்ளரிக்காய். உடல் முழுவதையும் சுத்தம் செய்யும் தன்மை இதற்கு உள்ளதாம். மேலும், நீர்ச்சத்தை இது உடலில் அதிகரிக்க செய்யும். முக்கியமாக கல்லீரலில் சேர்ந்துள்ள நச்சுக்களை இது வெளியேற்ற உதவுமாம்.

இந்த ஜுஸ் போதுமே..!

இந்த ஜுஸ் போதுமே..!

உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை சுத்தம் செய்ய இந்த ஜுஸ் பயன்படும். காலை வேளையில் தொடர்ந்து இதனை குடித்து வந்தால் நல்ல பலன் கிட்டும்.

தேவையானவை :-

இஞ்சி சிறு துண்டு

சுடு தண்ணீர் 1 ஸ்பூன்

உப்பு 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்

ஆப்பிள் ஜுஸ் 3 ஸ்பூன்

செய்முறை :-

செய்முறை :-

முதலில் மிதமான சுடு நீரில் உப்பை கலந்து கொள்ளவும். அடுத்து இஞ்சியை நசுக்கி சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். பிறகு இவற்றுடன் ஆப்பிள் ஜுஸ், எலுமிச்சை சாறு, உப்பு கலந்த நீர் ஆகியவற்றை சேர்த்து கலக்கி கொள்ளவும். இந்த ஜுஸை அன்றாடம் குடித்து வந்தால் அழுக்குகள் எளிதில் வெளியேறி விடும்.

வெங்காயம்

வெங்காயம்

உரிக்க உரிக்க கண்ணீரை தரும் இந்த வெங்காயம் தான் உங்களுக்கு பல வித நன்மைகளை தரவல்லது. இவை உடலை சுத்தம் செய்ய கூடிய நொதிகளை உற்புத்தி செய்ய பெரிதும் உதவுகிறது. வயிற்று பகுதி மற்றும் குடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை இந்த வெங்காயம் வெளியேற்றுகிறது. எனவே, வெங்காயத்தை ஒதுக்காமல் அதிகம் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

சீமை சாமந்தி டீ

சீமை சாமந்தி டீ

உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை எளிதாக வெளியேற்ற இந்த டீ உதவும். கிரீன் டீயை போன்று இதிலும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் தன்மை அதிகம் உள்ளது. ரத்தத்தில் சேர்ந்துள்ள அழுக்குகளையும் முற்றிலுமாக இந்த டீ சுத்தம் செய்து விடுமாம்.

இஞ்சி

இஞ்சி

பல்வேறு மருத்துவ குணங்களை தனக்குள் ஒளித்து வைத்திருக்கும் ஒரு அரிய பெட்டகம் இந்த இஞ்சி. இஞ்சியை உணவில் அதிக அளவில் சேர்த்து வந்தால், நச்சுக்கள் எளிதில் வெளியாகி விடும். மேலும், கிருமிகள், ஒட்டுண்ணிகள், தொற்றுகள் ஆகிய அனைத்தையும் இது அழித்து விடும் வல்லமை பெற்றது.

கேரட்

கேரட்

பீட்டா கரோட்டின் நிறைந்துள்ள கேரட்டை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் அதிக நன்மைகள் நடக்கும். குறிப்பாக இவை எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலுப்படுத்த உதவும். மேலும், அழுக்குகள் சேராதவாறு பார்த்து கொள்ளும்.

பூண்டு

பூண்டு

பலருக்கு பூண்டை கண்டாலே பிடிக்காது. இதன் வாசனையும், சுவையும் பலருக்கு வெறுப்பை உண்டாக்குவதாக கூறுவார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் நீங்கள் பூண்டை உணவில் சேர்த்து கொண்டால் எந்தவித நோய்களும் உங்களை அண்டாது. மேலும், செரிமான கோளாறுகளும் எளிதில் குணமாகும்.

 யோகர்ட்

யோகர்ட்

நச்சுக்களை வெளியேற்றுவதில் இந்த யோகர்டுக்கும் முக்கிய பங்கு உள்ளது. சிறிதளவு உணவில் யோகார்ட்டை சேர்த்து கொண்டால் ஏராளமான நன்மைகள் உண்டாகும். குறிப்பாக எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், நச்சுக்களை முழுமையாக வெளியேற்றவும், கிருமிகளை அழிக்கவும் இவை உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion