நவராத்திரி விரதமிருப்பவர்கள் 9 நாட்களுக்கு என்னென்ன சாப்பிடக் கூடாது தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

வண்ணமயமான கலாச்சாரங்களை கொண்ட இந்தியாவில் ஒன்பது நாட்கள் வரை கொண்டாடப்படும் திருவிழா நவராத்திரி பண்டிகை. அம்மனை வழிபடும் இந்த நாட்களில் பெண்கள் பெரும்பாலானோர் விரதம் இருப்பார்கள். இது பருவம் மாறும் காலம் என்பதால் பலருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியில் மாற்றம் இருக்கும். இது போன்ற நேரங்களில் விரதம் என்ற பெயரில், உணவுகளை தவிர்ப்பது தவறான பழக்கம்.

அதே நேரத்தில் விரதத்தை கடைபிடிக்க நினைப்பவர்கள், ஒரு வேளை உணவு கூட உண்ணாமல் இருப்பது, அல்லது நீராகரங்களை மட்டும் பருகுவது, அல்லது ஒரு வேளை உணவு மட்டும் என தங்களால் இயன்ற வகையில் விரதங்களை கடைபிடிப்பார்கள்.

உணவை தவிர்த்து விரதமிருக்கும் நேரத்தில் நீங்கள் கடை பிடிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெங்காயம் பூண்டு :

வெங்காயம் பூண்டு :

விரதமிருப்பவர்கள் வீட்டில் உணவுகளில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்ப்பதை தவிர்த்திடுங்கள். பருவக்காலத்தில் இதனை தவிர்ப்பது நன்று, இது உடல் சூட்டை கிளப்பி விடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உப்பு :

உப்பு :

விரத காலங்களில் கல் உப்பை மட்டும் பயன்படுத்தலாம். அதே போல மசாலாப்பொருட்களையும் தவிர்த்திட வேண்டும்.உணவுகளில் சேர்க்கும் சுவையூட்டிகள், நிறமூட்டிகளை எல்லாம் தவிர்த்திட வேண்டும்.

நட்ஸ் :

நட்ஸ் :

நட்ஸ் வகைகள் சாப்பிடலாம். பாதாம், முந்திரி, கிஸ்மிஸ், வால்நட், பிஸ்தா, கடலை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இது நீண்ட நேரம் பசியை மட்டப்படுத்தும்.

பால் பொருட்கள் :

பால் பொருட்கள் :

விரத காலங்களில் பால் பொருட்களை சாப்பிடலாம். பால், வெண்ணெய், தயிர், நெய், சீஸ் போன்றவை நீங்கள் சாப்பிடலாம். பட்டர்,சீஸ் போன்றவை குறைவாக எடுத்துக் கொள்வது நலம். அதிகமாக எடுத்துக் கொண்டால் உடலில் கொழுப்பை அதிகரித்து விடும்.

எண்ணெய் :

எண்ணெய் :

வட இந்தியர்கள் அதிகமாக கடுகு எண்ணெயை பயன்படுத்துவார்கள். இங்கே நாம் உணவுகளுக்கு கடுகு எண்ணெய் பயன்படுத்த முடியாது என்பதால், கடலை எண்ணெய்,நெய் பயன்படுத்தலாம்.

பழங்கள் :

பழங்கள் :

எல்லா வகையான பழங்களையும் இந்த நாட்களில் எடுத்துக் கொள்ளலாம். வெறும் ஃப்ரூட் சாலட்களாகவோ அல்லது ஃப்ரூட் ரைதாவாகவோ செய்து சாப்பிடலாம். பழங்களில அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் இவை உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையே பயக்கும்.

சர்க்கரை :

சர்க்கரை :

நவராத்திரி பிரசாதங்களில் இனிப்பு பதார்த்தங்களுக்கு தனி இடம் உண்டு. அவற்றிற்கு வெள்ளைச் சர்க்கரை பயன்படுத்தாமல் வெல்லம், தேன், கருப்பட்டி போன்றவை பயன்படுத்தலாம்.

மாவு :

மாவு :

வீடுகளில் நாம் அரிசி மாவு, கடலை மாவு, கார்ன் மாவு, மைதா மாவு, கோதுமை மாவு,போன்ற பல விதமான மாவுகளை பயன்படுத்தியிருப்போம். ஆனால் நவராத்திரி காலங்களில் இவற்றை பயன்படுத்துவதை தவிர்த்திட வேண்டும். சிறுதானியங்கள், சிறுதானிய மாவு போன்றவை பயன்படுத்தலாம்.

காய்கறி :

காய்கறி :

நவராத்திரி காலங்களில் எல்லா காய்களையும் எடுக்க முடியாது, சேப்பைக்கிழங்கு, சேனைக்கிழங்கு,இனிப்புக் கிழங்கு, வாழைக்காய், சுரைக்காய், பூசணிக்காய் மட்டுமே எடுக்க வேண்டும். இவற்றைக் கொண்டே நாம் பல விதமான வெரைட்டீகளை செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What should you follow during navratri fast?

What should you follow during navratri fast?
Story first published: Monday, September 25, 2017, 12:48 [IST]