For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வயிற்றுச் சதையை குறைக்க அன்னாசியை எந்த முறையில் சாப்பிட வேண்டும் என தெரியுமா?

உடல் எடையையும் வயிற்றுத் தொப்பையையும் குறைக்க இங்கே சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை உபயோகப்படுத்தி பயன்பெறுங்கள்.

|

உடலில் தேவையில்லாத அதிகப்படியான கொழுப்பு சதைகளின் அடியின் தங்கி உடலை பருமனாக்குக்கின்றன. அவற்றை அப்படியே விடும்போது பல தீராத நோய்களை தருவிக்கின்றன.

உடலில் குறிப்பாக வயிற்றுத் தொப்பையை குறைக்க நீங்கள் உணவுக் கட்டுப்பாடுடன், கொழுப்பை குறைக்கும் வகையில் உண்ண வேண்டும். உண்ணும் உணவினாலும் கொழுப்பை குறைக்க முடியும் என்பதற்கான குறிப்புகள் இங்கே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தொப்பை குறைய :

தொப்பை குறைய :

இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

 தொப்பை குறைய :

தொப்பை குறைய :

இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

சோம்பு நீர் :

சோம்பு நீர் :

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள கொழுப்புச்சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம், அதிகமாக சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.

பப்பாளி காய்:

பப்பாளி காய்:

பப்பாளிக் காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். வாரம் இருமுறை செய்து சாப்பிடுங்கள். கொழுப்பு கரையும்.

சுரைக்காய் :

சுரைக்காய் :

சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சமைத்து சாப்பிடுங்கள். கொழுப்பை கரைக்கும். உடலில் தனியிருக்கும் அதிகப்படியான நீரை வெளியேற்றும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to reduce belly fat in a natural way

Our traditional foods to eat to reduce belly fat,
Story first published: Friday, February 17, 2017, 16:01 [IST]
Desktop Bottom Promotion