ஸ்ஸ்ஸ்!! காரம்ன்னு பச்சை மிளகாயை ஓரமா ஒதுக்கறீங்களா? இதக் கொஞ்சம் படிங்க!!

Posted By:
Subscribe to Boldsky

பச்சை மிளகாய் காரத்த்திற்கு மட்டுமல்ல உடல்நலத்திற்கும் மிகவும் நல்லது என்றால் நம்ப முடிகிறதா உங்களலால், பச்சை மிளகாய் சுவையூட்ட மட்டுமல்ல உணவின் தன்மையை அதிகப்படுத்த மட்டுமல்ல என்பதை இதைப் படித்தால் உங்களுக்கு புரியும்.

Health benefits of green chili

பச்சை மிளகாயில் பல வகைகள் இருக்கிறது.இதில் கொலஸ்ட்ரால் மற்றும் கலோரிகள் இருக்காது.அதை விட பச்சை மிளகாயில் இருப்பது விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்கள் தான்.இதனால் உடலுக்கு எத்தகைய நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் :

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் :

பச்சை மிளகாயில் விட்டமின் சி அதிகம். இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திடும். அதே போல, நோய்த் தொற்று ஏற்ப்பட்டாலும் அதனை பரவாமல் காத்திடும்.

ஜீரண சக்தி :

ஜீரண சக்தி :

பச்சை மிளகாய் மென்று சாப்பிட்டால் எச்சில் அதிகமாக சுரக்கும். இதனால் நாம் உட்கொள்ளும் உணவுப்பொருள் எளிதாக ஜீரணமாகும்.

இரும்புச்சத்து :

இரும்புச்சத்து :

பச்சை மிளகாயில் இருக்கும் விட்டமின் சி இரும்புச்சத்தை கிரகித்துக் கொள்ள உதவிடும். அனீமியாவை எதிர்த்துப் போராடும். நம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவிடும்.

சர்க்கரையளவு குறைக்கும் :

சர்க்கரையளவு குறைக்கும் :

சர்க்கரை நோய் இருப்பவர்கள் பச்சை மிளகாய் சாப்பிட்டால் உடலில் உள்ள சர்க்கரையளவு அதிகரிக்காமல் பாதுகாத்திடும்.

சருமம் :

சருமம் :

பச்சை மிளகாயில் இருக்கும் விட்டமின் சி தண்ணீரில் கரையக்கூடிய ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்களை உருவாக்கிடும். இதனால் கொலாஜன் வேதிப்பொருளை சுரக்க உதவிடும்.

சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க கொலாஜன் என்ற வேதிப்பொருள் மிகவும் முக்கியம். அவை பச்சை மிளகாயில் இருக்கிறது.

தலைமுடி :

தலைமுடி :

பச்சை மிளகாயில் இயற்கையாகவே இருக்கும் சிலிக்கான் சத்து தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.முடியின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் ஃபோலிக்கல்ஸ் மற்றும் டெஸ்ட்டோஸ்டிரோன் வளர்ச்சியும் அதிகரிப்பதால் நரை முடி வருவது தவிர்க்கப்படும்.

எடை குறைப்பு :

எடை குறைப்பு :

பச்சை மிளகாயில் சுத்தமாக கலோரி இல்லை என்பதாலும், நம் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதாலும் எடை குறைக்க நினைப்பவர்கள் இதனை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். முக்கியமாக பச்சை மிளகாய் கொழுப்பை கறைத்திடும்.

பார்வை :

பார்வை :

பச்சை மிளகாயில் விட்டமின் ஏ இருக்கிறது.இவை கண் பார்வைக்கு மிகவும் நல்லது. ஐந்து வயதிற்கு மேற்ப்பட்ட எந்த வயதினரும் பச்சை மிளகாயை தாராளமாக எடுக்கலாம்.

இதயம் :

இதயம் :

பச்சை மிளகாயில் மினரல்ஸ் இருக்கிறது.குறிப்பாக பொட்டாசியம், இரும்பு மற்றும் மக்னீசியம் இருக்கிறது. இவை சீரான இதயத்துடிப்பிற்கும், ரத்த அழுத்தத்திற்கும் மிகவும் அவசியமானது.

எலும்பு :

எலும்பு :

பச்சை மிளகாயில் அதிகப்படியான கால்சியம் மற்றும் விட்டமின் கே இருக்கிறது. இவை எடுத்துக் கொள்வதால் காயம் ஏற்ப்பட்டால் அதிக ரத்தம் வெளியேறுவது தவிர்க்கப்படும். அதாவது ரத்தம் சீக்கிரம் உறைந்திடும். அதே நேரத்தில் எலும்புகளுக்கு வலு அளித்திடும்.

ஸ்ட்ரஸ் :

ஸ்ட்ரஸ் :

பச்சை மிளகாயில் காப்சய்சின் இருக்கிறது இவை நம் மனதை உற்சாகமாக வைத்திருக்க உதவிடும் என்டோர்பின்ஸ் சுரக்க உதவிடும் இதனால் ஸ்ட்ரஸ் குறைந்திடும்.

நன்மைகள் ஏரளமாக இருக்கிறது என்பதற்காக அளவுக்கு மீறி எடுத்தால் அது ஆபத்தில் தான் முடியும். அதிகமாக எடுத்துக்கொண்டால் வயிற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health benefits of green chili

Health benefits of green chili
Story first published: Saturday, August 12, 2017, 11:08 [IST]