திராட்சைப் பழம் எப்போது சாப்பிட வேண்டும் என்று தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக இருக்கும் திராட்சை பழத்தைப் பற்றிய சிறப்புத் தொகுப்பு. திராட்சையில், கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என, பல வகைகள் உண்டு.

Health benefits Of Grapes

எந்த திராட்சையாக இருந்தாலும், நோய்களை குணப்படுத்தும் சக்தி உண்டு திராட்சை குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 சத்துக்கள் :

சத்துக்கள் :

திராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகம் உள்ளது . இது தவிர கார்போஹைடிரேட், டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின் மற்றும் பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன.

மாதவிடாய் :

மாதவிடாய் :

மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்றுவலிக்கு தினமும் திராட்சை சாறு குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். அதே போல நாற்பது வயதுக்கு மேல் வரும் மெனோபாஸ் பிரச்சனை தீர திராட்சை பழம் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

மார்பக புற்றுநோய் :

மார்பக புற்றுநோய் :

பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கட்டுப்படுத்தும் சக்தி திராட்சைக்கு இருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.

அல்சருக்கு மருந்து :

அல்சருக்கு மருந்து :

திராட்சை அல்சருக்கு அருமருந்தாக செயல்படுகிறது. வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவற்றையும் குணப்படுத்திடும். கர்ப்பிணி பெண்களுக்கு, குமட்டல், வாய்க்கசப்பு இருக்கும் நேரங்களில், திராட்சை சாப்பிட்டால் பலன் கிடைக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும் திராட்சையை எடை குறைவாக உள்ளவர்கள், உடலில் அதிக சூடு இருப்பவர்கள் திராட்சை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

கட்டி :

கட்டி :

`ரெஸ்வெரட்டால்' என்கிற ஒருவகை இயற்கை அமிலம் திராட்சையில் அதிகமாக காணப்படுகிறது. இந்த அமிலம் கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுப்பதுடன், தேவையில்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.

 திராட்சை பசி :

திராட்சை பசி :

பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சை சாப்பிட்டால் அது பசியை தூண்டிவிடும். அத்துடன் வயிற்றில்,குடலில் ஏதேனு கோளாறுகள் இருந்தாலும் குணப்படுத்திடும்.

Image Courtesy

சருமம் :

சருமம் :

சூரியக் கதிர்களில் இருந்து நம் சருமத்தை பாதுகாக்கும் ஆற்றல் திராட்சைக்கு உண்டு. ஒரு கைப்பிடியளவு திராட்சையை அரைத்து அப்படியே முகத்தில் பூசிக் கொண்டு 15 நிமிடங்களில் கழுவிவிடலாம். அல்லடு திராட்சையை பாதியாக வெட்டி முகத்தில் வைத்து 15 நிமிடங்கள் கழுத்தி முழுவது தேய்த்து லேசாக மசாஜ் செய்திடுங்கள்.

இது நம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்திற்கு பொலிவைக்க் கொடுத்திடும். அத்துடன் சருமத்திற்கு ரத்த ஓட்டத்தைக் கொடுத்து, சுருக்கங்களை தவிர்த்திடும்.

Image Courtesy

இரவுகளில் :

இரவுகளில் :

மாம்பழம், திராட்சை போன்ற பழங்களை இரவில் சேர்த்துக் கொண்டால் சுறுசுறுப்பாக இருக்கும். இரவு தூக்கத்தை குறைத்து விடும்.அதனால் இரவு நேரங்களில் திராட்சை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

சாப்பிடக்கூடாது :

சாப்பிடக்கூடாது :

அசிடிட்டி, அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். திராட்சை பழத்தில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது இவை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வாயுத்தொல்லையை ஏற்படுத்திடும்.

 எப்போ சாப்பிடலாம் ? :

எப்போ சாப்பிடலாம் ? :

இரண்டு வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் பழங்களை சாப்பிடலாம். இந்த சமயத்தில் பழங்களை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

அதுமட்டும் இல்லாமல் ரத்தத்தில் குளுகோஸ் அளவு சீராகவும், கொழுப்புச்சத்து சேராமலும் பார்த்துக் கொள்ளும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health benefits Of Grapes

Health benefits of Grapes in detailed version
Story first published: Wednesday, July 26, 2017, 10:50 [IST]