சோளத்தை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்? இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்!

Written By: peveena murugesan
Subscribe to Boldsky

சோளம் ஒரு சிறந்த வகை உணவு பொருள் ஆகும்.எது காய்கறிகள் வகையிலும் மற்றும் தானியங்கள் வகையிலும் சேர்ந்தது.சோளத்தில் அதிக ஊட்டச்சத்து நிறைந்துள்ளது.இதில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் மற்றும் பைபர் உள்ளது.எடையைக் குறைக்கும் பணியில் சோளம் முக்கிய பங்கு வகிக்கிறது.

மரபணு மாற்றம் மூலம் சில சோள வகைகள் மாற்றப்பட்டு எளிதில் கிடைக்கும் வகையில் மளிகை கடைகள் மற்றும் சந்தைகளில் கிடைக்கிறது.

ஆனால் இந்த மரபணு மாற்றப்பட்ட சோளம் மிகவும் தீங்கு விளைவிக்கிறது.இதன் மூலம் உடலில் மரபணு மாற்றமும்,ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது.இவற்றை வாங்காமல் தவிர்த்து மரபணு மாற்றப்படாத சோளம் வாங்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 சோளத்திலுள்ள சத்துக்கள் :

சோளத்திலுள்ள சத்துக்கள் :

மஞ்சள் நிற சோளத்தில் ஒரு கப்பில் 392 மி.கி பொட்டாசியம் மற்றும் வெள்ளை சோளம் ஒரு கப்பில் 416 மி.கி பொட்டாசியம் உள்ளது.

இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.எனினும் அதிக அளவு பொட்டாசியம் உள்ள உணவுகள் அனைவருக்கும் நல்லதல்ல.குறிப்பாக வயதில் முதிர்ந்தவர்கள்,சிறுநீரக பிரச்சனை உடையவர்கள் எடுக்க கூடாது.மருத்துவரின் பரிந்துரையின்படி எடுக்கலாம்.

 அதிக ஆன்டி-ஆக்ஸிடென்ட் நிறைந்தது:

அதிக ஆன்டி-ஆக்ஸிடென்ட் நிறைந்தது:

மற்ற காய்கறிகளை போல சோளமும் செல்கள் சேதத்தை எதிர்த்து போராடும்.அது மட்டுமின்றி இதய நோய்,புற்றுநோய் மற்றும் பிற நோய்களில் இருந்தும் பாதுகாக்க கூடியது.கோதுமை,அரிசியை விட சோளத்தில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் அதிகம்.

சோளத்தில் கரோடெனாய்டுகள் ,வைட்டமின்-சி மற்றும் வைட்டமின்-இ உள்ளது.கரோடெனாய்டுகள்இருப்பதால் கண்களுக்கு மிகவும் சிறந்தது.

 கலோரி அளவு:

கலோரி அளவு:

சோளத்தில் கலோரி ஒரு மிதமான ஆதாரமாக உள்ளது.ஒரு கப் சோளத்தில் 184 கலோரி உள்ளது.சோளத்தில் உள்ள மாவுச்சத்தின் காரணமாக இதில் அதிக கலோரி உள்ளது.

 ஊட்டச்சத்து நன்மைகள்:

ஊட்டச்சத்து நன்மைகள்:

சோளத்தில் அதிக அளவு ஊட்டச்சத்து உள்ளது.எனவே சோளம் டயட் பட்டியலில் முக்கிய பங்கு வகிக்கிறது.ஒரு கப் வேகவைத்த சோளத்தில் 4 கிராம் நார்சத்து உள்ளது.இதனால் மலச்சிக்கல் ,இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து விடுபட முடியும்.14% வைட்டமின்-சி யும்,12% மங்கனீசும் உள்ளது.

 உடல் எடை குறைய :

உடல் எடை குறைய :

அதிக பழங்கள் மற்றும் காய் சாப்பிடுபவர்களின் எடையை விட அதிக நார்சத்து நிறைந்த சோள உணவு சாப்பிடுபவர்களின் எடை குறைந்துள்ளதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 பதப்படுத்தப்பட்ட சோளம் :

பதப்படுத்தப்பட்ட சோளம் :

இந்த வகை சோளத்தை தவிர்க்க வேண்டும்.ஏனெனில் இது உடல் எடையை அதிகமாக்குகிறது.அதுமட்டுமின்றி நாட்பட்ட நோய்கள் மற்றும் நீரிழிவு ஆகியவை ஏற்படுகிறது.

உண்ணும் முறை :

உண்ணும் முறை :

நீங்கள் உணவுக் கட்டுப்பாட்டு முறையில் இருப்பின் பதப்படுத்தப்படாத சோளம் உபயோகிக்கலாம்.எப்படி சமைப்பது என்ற முறையையும் தெரிந்து கொள்வோம். சோளத்தை வேக வைத்து அல்லது கிரில்லிங் போன்ற கொழுப்பு சேர்த்தாத முறையை பின்பற்றலாம். அல்லது அவித்து சூப்பாகவும் குடிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health benefits of corn

Health benefits of corn
Story first published: Thursday, January 26, 2017, 12:00 [IST]
Subscribe Newsletter