காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள்

Posted By: Ambika Saravanan
Subscribe to Boldsky

உணவு நமது அடிப்படை தேவைகளில் ஒன்று. நமது ஆரோக்கியத்திலும் நமது உற்சாகத்தில் உணவின் பங்கு மிக முக்கியமானது. மனிதர்கள் சிறு ப்ராயத்திலிருந்தே உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்கள்.

நமது குழந்தை பருவத்தில் நிலவை காட்டியோ,கதைகள் சொல்லியோ அல்லது பயமுறுத்தியோ நமது தாய்மார்கள் தட்டில் போட்ட உணவை முழுவதுமாக ஊட்டி விட்டு விடுவார்கள். கடைசி வாய் சாப்பிட்டால் தான் பெரியவனாக வளர ம்,உடையும் என்று கதை சொல்லி அதை குழந்தைகளும் நம்பி உணவை சாப்பிட்டு முடித்து விடுவர்.

Foods you should avoid on an empty stomach

காலப்போக்கில் நாம் குழந்தை பருவத்திலிருந்து வளர வளர சில விஷயங்களை அலட்சிய படுத்தி விடுகிறோம். சரியான நேரத்தில் சரியாய் உணவை எடுத்து கொள்ளாமல் நமது சாப்பாடு அட்டவணை நமது வசதிக்கேற்ப மாற்ற படுகிறது. நமது படிப்பு வேலை நேரத்திற்கேற்ப நமது சாப்பாட்டு ஸ்டைலும் மாறிவிடுகிறது.

சரியான நேரத்தில் சரியான உணவை எடுக்கும் போது நமது உடலுக்கு சரியான சக்தி கிடைக்கிறது என்பதில் ஒரு மாற்று கருத்து இருக்க முடியாது. ஒரு நல்ல உணவு , அதை எடுக்க வேண்டிய நேரத்தில் எடுக்காமல் மாற்றி எடுக்கும் போது உடலில் பல தீய விளைவுகள் ஏற்படுகின்றன.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லதுன்னு தெரியும்.. ஆனா எப்படி குடிக்கிறது நல்லதுன்னு தெரியுமா?

நாம் வெறும் வயிற்றில் சில உணவுகள் உண்பதை தவிர்ப்பது மிக அவசியம். அவைகள் என்னென்ன அவைகளை உண்பதால் என்ன தீனி என்பதை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தக்காளி:

தக்காளி:

தக்காளி அதன் சுவையாலும் நிறத்தாலும் அனைவரையும் கவரும் ஒரு பழம் . சிறு குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் அதை சமைக்காமலே சாப்பிட விரும்புவர். அவ்வவ்போது அதன் விலையேற்றத்தால் தக்காளி சில நேரங்களில் சமையலில் இருந்து விருப்ப ஓய்வு பெறுவதும் உண்டு.

தக்காளியில் வைட்டமின் சத்துக்கள் அதிகமாக உள்ளது. மற்றும் அது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றி. ஆனால் வெறும் வயிற்றில் தக்காளியை உட்கொள்ளும்போது வற்றில் சுரந்திருக்கும் அமிலங்களுடன் இவை கலந்து வயிற்று அடைப்பை ஏற்படுத்தும்.

வயிற்றில் ஒரு தேவையற்ற அழுத்தத்தை கொடுத்து வலியை ஏற்படுத்தும். அல்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் தாக்கம் இன்னும் அதிகமாகும்.

 சிட்ரஸ் பழங்கள்:

சிட்ரஸ் பழங்கள்:

திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இவை சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக பயன்படுகிறது. இவைகளை நாம் வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது ஒருவித வயிற்று எரிச்சல் உருவாகலாம். வெறும் வயிற்றில் ஜீரணிக்க எந்த உணவும் இல்லாத போது இந்த பழங்களை உட்கொள்ளும் போது இவை உணவு குழாயை விரிவு படுத்துகின்றன. இதனால் வயிற்றுக்குள் ஒரு உராய்வை ஏற்படுத்துகின்றன.

 கார்பனேற்றப்பட்ட பானங்கள்:

கார்பனேற்றப்பட்ட பானங்கள்:

இயல்பிலேயே கார்பனேற்றப்பட்ட பானங்கள் உடலுக்கு எதிரானது. அதை காலையில் அருந்தும்போது உடலுக்கு பல்வேறு தீங்குகளை கொடுக்கும்.

புற்று நோய் வருவதற்கும் இவை காரணியாக இருக்கலாம். இதய நோய் மற்றும் பல விதமான உடல் உபாதைகளும் இவற்றால் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகையால் வெறும் வயிற்றில் இத்தகைய பானங்களை அருந்துவதை தவிர்ப்பது நல்லது.

காஃபீ அல்லது டீ:

காஃபீ அல்லது டீ:

காஃபீ அல்லது டீ இவையே என் முதல் உணவு என்று கூறுபவரா நீங்கள் ? ஆம் என்றால் அதுவும் உங்கள் உடலுக்கு கெடுதல் தான். காஃபீ அல்லது டீயை வெறும் வயிற்றில் குடிக்கும் போது உடலின் ஹைட்ராகிளோரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கிறது. இதன் மூலம் மலச்சிக்கல் மற்றும் வாந்தி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உணவு செரிமானத்தை தாமத படுத்தவும் முனைகிறது.

 எழுந்ததும் நீர் :

எழுந்ததும் நீர் :

மேலே குறிப்பிட்டவற்றை தவிர்த்து காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 டம்ளர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது. தண்ணீர் குடித்து அரை மணி நேரத்திற்கு பிறகு காஃபீ அல்லது டீ பருகலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods you should avoid on an empty stomach

Foods you should avoid on an empty stomach
Story first published: Monday, August 7, 2017, 16:30 [IST]