கல்லீரல் எப்போது ஆரோக்கியமாக இருக்க நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

மனித உடலில் கல்லீரலின் பயன்பாடு மிகவும் முக்கியமானது. உடலில் உள்ள உள்ளுறுப்புகளில் மிகவும் பெரியது இந்த கல்லீரல். இதன் ஆரோக்கியத்தை பேணிக் காப்பது மிகவும் அவசியமாகும்.

உடலில் பல தரப்பட்ட செயல்பாடுகளை செய்வது இந்த கல்லீரலாகும். உடலுக்கு புரதம், கொலெஸ்ட்ரோல் போன்றவற்றை உற்பத்தி செய்வது வைட்டமின், மினெரல் , கார்போஹைடிரேட் போன்றவற்றை சேமித்து வைப்பது போன்றவை கல்லீரலின் வேலையாகும்.

Foods That Can Take The Best Care Of Your Liver's Health

உடலில் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கு கல்லீரலில் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. உடலில் ஆல்கஹால் போன்ற நச்சுக்களை உடைத்தெறிவதற்கு கல்லீரல் உதவுகிறது. கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு உதவும் சில உணவு பொருள்களின் குறிப்புகள் இந்த பதிவில் தரப்பட்டுள்ளது. இதனை அறிந்து கொள்ளலாம் வாருங்கள் !

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூண்டு:

பூண்டு:

பூண்டில் செலினியம் ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது. இது கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு உதவும். இது சிறந்த ஆன்டிஆக்ஸிடெண்டாக இருப்பதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறுகிறது.

கல்லீரலுக்கு ஒரு சிறந்த உணவாக பூண்டு பரிந்துரைக்கப்படுகிறது. பூண்டில் இருக்கும் ஆர்ஜினைன் என்ற அமினோ ஆசிட் இரத்த நாளங்களை தளர்த்தி கல்லீரலில் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

ஆலிவ் ஆயில் :

ஆலிவ் ஆயில் :

ஆலிவ் எண்ணெயை மிதமான அளவில் சேர்த்துக் கொள்ளும்போது உடலுக்கு பெரிய அளவில் பயன்படுகிறது. கொழுப்பு திசுக்களை வழங்கி உடலில் நச்சுக்களை வெளியேற்றுகிறது . கல்லீரலில் செயல்பாட்டில் இதன் பங்களிப்பு மகத்தானது.

காய்கறிகள் மற்றும் கீரைகள் :

காய்கறிகள் மற்றும் கீரைகள் :

இலைகள் உடைய பச்சை காய்கறிகள் கல்லீரலின் பாதுகாப்புக்கு முக்கியமானவை. இவை உலோகம், இரசாயனம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் அளவை உணவில் சமன் செய்கின்றன . கீரைகள், பீட்ரூட் , காலிப்ளவர் மற்றும் முளை விட்ட தானியங்கள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவுகள் ஆகும்.

க்ரீன் டீ :

க்ரீன் டீ :

கேட்சின் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட் க்ரீன் டீயில் அதிகமாக உள்ளது . பல விதமான புற்று நோயை எதிர்த்து போராடி உடலை பாதுகாக்கவும் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கும் இந்த ஆன்டிஆக்ஸிடன்ட் உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

க்ரேப் ஃப்ரூட்

க்ரேப் ஃப்ரூட்

இந்த பழத்தில் வைட்டமின் சி மற்றும் கல்லீரலால் சுரக்கப்படும் க்ளுட்டத்தின் அதிகமாக உள்ளது. நாரத்தம்பழத்தில் 70மில்லிகிராம் அளவு க்ளுட்டத்தின் உள்ளது.

நச்சுக்களை வெளியேற்ற என்சைம்கள் உருவாக்குவதில் கல்லீரலுக்கு இந்த க்ளுட்டத்தின் பயன்படுகிறது. கல்லீரல் ஆரோக்கியத்திற்கு இந்த பழம் சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods That Can Take The Best Care Of Your Liver's Health

Foods That Can Take The Best Care Of Your Liver's Health
Story first published: Thursday, September 7, 2017, 13:31 [IST]
Subscribe Newsletter