For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இடுப்பைச் சுற்றியிருக்கும் கொழுப்பை கரைக்கும் உணவுகள்

  |

  உடல் எடைப்பற்றிய கவலை எல்லாருக்கும் இருக்கக்கூடிய நேரத்தில் சிலருக்கு தங்கள் உடலை சரியான வடிவத்துடன் இருக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும், மாடலிங் துறையில் கால் பதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உடல் எடையை குறைத்தல் மட்டுமல்ல அதனை வடிவமாக கொண்டு வருவதும் முக்கியமாக கருதுகிறார்கள்.

  foods to reduce love handles in two weeks

  இன்றைக்கு  வளைந்த,வடிவமான இடுப்பு தான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. கொழுப்பு இடுப்பு பகுதியில் தான் அதிகமாக சேரும். நாம் கொழுப்பை கரைக்கும் உணவுகளை எடுத்துக்கொண்டால் அவை கொழுப்பை மட்டுமே கரைத்திடும். சில சமயங்கள் நம் உடலில் கொழுப்பு சேராமல் தவிர்க்கச் செய்திடும். ஆனால் கொழுப்பை கரைப்பது லவ் ஹேண்டில்ஸ் எனப்படுகிற இடுப்பின் வடிவத்தை கொண்டு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னென்ன உணவுகளை தங்களின் அன்றாட உணவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  சக்கரவள்ளிக்கிழங்கு :

  சக்கரவள்ளிக்கிழங்கு :

  இதில் மிகக் குறைந்த அளவிலான கொழுப்பே உள்ளது. அதோடு இது செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அதிக நேரம் நீங்கள் எனர்ஜியுடன் இருக்க முடியும். காலை உணவாக இதனைச் சாப்பிடலாம்.

  இதிலிருக்கும்க் கேரோடினாய்ட்,ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் போன்றவை நம் உடலின் ரத்தச் சர்க்கரையளவை முறையாக பராமரிக்க உதவுகிறது. இவை நாம் உணவாக எடுத்துக்கொள்ளும் கலோரிகள் கொழுப்பாக மாறுவதை தடுக்கிறது. இதிலிருக்கும் அதிகப்படியான விட்டமின் ஏ,சி,பி6 போன்றவையும் நமக்கு அதீதமான பயன் தருகிறது.

  கருப்பு அரிசி :

  கருப்பு அரிசி :

  வெள்ளை அரிசியில் கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது என்று சொல்லி அதனை தவிர்த்து வரும் வேளையில் இடுப்பின் வடிவத்தை கொடுக்க கருப்பு அரிசி எடுத்துக் கொள்ளலாம். இதனை கவுனி அரிசி என்று வழங்குகிறார்கள்.

  கவுனி அரிசியின் தனிச் சிறப்பே அதன் கறுப்பு நிறம்தான். கறுப்பு நிறத்துக்குக் காரணமாக இருப்பது ‘ஆன்தோசயானின்' என்னும் நிறமி.

  திராட்சை வகைகள், கத்தரிக்காய், ஊதா முட்டைகோஸ், மாதுளை, கறுப்பு பீன்ஸ் போன்று இந்த அரிசியும் ‘ஆன்தோசயானின்' நிறமியைக் கொண்டுள்ளது. இந்த நிறமிகள், இதயம், மூளை மற்றும் ரத்தக் குழாய்களின் செயல்பாடுகளையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.

  வெள்ளை நிற அரிசி, பழுப்பு நிற அரிசியோடு ஒப்பிடுகையில், கவுனி அரிசி கொஞ்சம் குறைவான மாவுச்சத்தையும் அதிகமான புரதம், இரும்புச் சத்தையும் கொண்டுள்ளது.

   கறுப்பு அரிசியின் சத்துக்கள் :

  கறுப்பு அரிசியின் சத்துக்கள் :

  கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து, உணவுக்குப்பின் ரத்தச் சர்க்கரை உயராமல், சீராக இருக்க உதவுகிறது. மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகள், வாய்வு, வயிற்று வீக்கம், வயிற்று வலி போன்ற பிரச்னைகளுக்கும் இந்த அரிசி மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது.

  கவுனி அரிசியின் வெளிப்புற அடுக்கில், அதிக அளவில் ‘ஆன்தோசயானின்' நிறமி காணப்படுகிறது. இது ரத்த நாளங்களில் படியும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது. தவிர, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை உயர்த்தி, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது.

  ரத்த நாளங்கள் முதிர்ச்சி அடையாமல் பாதுகாத்து இதய ஆரோக்கியத்தைத் தக்க வைக்கிறது. நச்சுப் பொருள்கள் உடலில் சேர்வதே பல்வேறு நோய்களுக்குக் காரணம். கவுனி அரிசியில் காணப்படும் ‘பைட்டோ நியூட்ரியன்ட்ஸ்' (Phytonutrients), உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுகள், கல்லீரல், ரத்த நாளங்கள், பெருங்குடல் ஆகியவற்றில் குவியாதவாறு தடுக்கிறது.

  வெள்ளை டீ :

  வெள்ளை டீ :

  சிலர் தான் வெள்ளை டீ குடிக்கிறார்கள். இதில் எந்த ஈடுபொருளும் அதீதமாக சேர்க்கப்படுவதில்லை. பொதுவாக பாலில் கலந்த டீ போக, பெரும்பாலானோர் குடிப்பது ப்ளாக் டீ மற்றும் க்ரீன் டீ தான். இப்போது இதில் வெள்ளை டீயும் சேர்க்கப்படுகிறது.

  இந்த மூன்றுமே ஒரே செடியில் விளையும் இலைகள்தான். அந்த இலைகளை நாம் என்ன செய்கிறோம் என்பதை வைத்தே டீயின் நிறம் மாறுகிறது. சற்று வெள்ளி நுனிகளையுடைய இளம் இலைகளைப் பறித்து, எவ்வித பதனிடு முறைகளும் இன்றி, வெறுமனே நிழலில் உலர்த்திப் பொடி செய்யும் டீ... வெள்ளை டீ.

  இதில் கேஃபின் குறைவாகவும், ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் மிக அதிகமாகவும் இருக்கும். வெள்ளை டீ என்று பெயர் இருந்தாலும், கொதிக்க வைத்தால், சற்று மஞ்சள் நிற திரவமாகவே இருக்கும். விலை மிக அதிகமான இந்த டீ, இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வருகிறது.

  கொண்டக்கடலை :

  கொண்டக்கடலை :

  கொண்டக்கடலையில் ப்ரௌன், வெள்ளை என இரண்டு வகைகள் உள்ளன. அதில் பெரும்பாலும் தமிழ்நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படுவது ப்ரௌன் நிற கொண்டக்கடலை தான்.

  இந்த கொண்டக்கடலையில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் இந்த கொண்டக்கடலை தினமும் சிறிது

  சாப்பிட்டு வந்தால், பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம் கிடைக்கும் சத்துக்களைப் பெறலாம்.

  ப்ரௌன் நிற கொண்டக்கடலை

  ப்ரௌன் நிற கொண்டக்கடலை

  ப்ரௌன் நிற கொண்டக்கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவை உடல் எடை குறைய உதவிபுரியும். அதிலும் இதனை தினமும் 1/2 கப் வேக வைத்து சாப்பிட்டு வந்தால், வயிறு நிறைவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.

  கொண்டக்கடலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆந்தோசையனின்கள், டெல்பின்டின், சியானிடின், பைட்டோநியூட்ரியன்ட்டுகள் போன்றவை உள்ளது. மேலும் இதில் ஃபோலேட் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது.

  இதனால் இரத்த நாளங்களில் கொழுப்புக்கள் தங்கி அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. கொண்டக்கடலையில் கரையும்

  நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், அவை கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்.

  கருப்பு பீன்ஸ் :

  கருப்பு பீன்ஸ் :

  பொதுவாக பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் இருக்கும். இவற்றை சாப்பிட்டால், பசியே ஏற்படாது. அதிலும கருப்பு பீன்ஸில் அளவுக்கு அதிகமான அளவில் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளன.

  இந்த உணவை அதிகம் சாப்பிட்டால், வயிற்றில் சேரும் கொழுப்புகள் குறையும் என்று ஆய்வுகள் பலவும் கூறுகின்றன. ஆகவே மறக்காமல் இந்த கறுப்பு பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  பட்டாணி :

  பட்டாணி :

  பச்சை பட்டாணியின் மூலமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கலாம். இந்த பச்சை பட்டாணி உடலில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவைக் குறைத்து, இரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்புச்சத்தை அதிகரிக்கும். இதன் மூலமாக நமக்கு ஏற்படும் ஏராளமான நோய்களில் இருந்து விடுபடலாம்.

  பிரவுன் அரிசி :

  பிரவுன் அரிசி :

  பிரவுன் அரிசி என்பது தவிடு நீக்காத அரிசி. நாம் தற்போது சாப்பிடும் அரிசி, தவிடு நீக்கப்பட்டு, வெள்ளை நிறத்துக்காக, நன்றாக பாலீஷ் செய்யப்பட்டது. பிரவுன் அரிசி எனப்படும் தவிடு நீக்கா த அரிசியில் பல்வேறு சத்துக்கள் உள்ளன.

  வெள்ளை அரிசியைக் கா ட்டிலும் அதிக நார்ச்சத்து கொண்டது பிரவுன் அரிசி. இந்த அரிசியில் செலினியம் அதிகம் இருப்பதால், இதய நோய், கீல்வாதம், புற்றுநோய் போன்றவ ற்றை வரவிடாமல் தடுக்கிறது.

  உடலில் சேரும் கெட்ட கொழுப்பைக் கரைப்பத ற்கும், நரம்புமண்டலங்கள் சீராக செயல்படுவதற்கும் மக்னீசியம் அவசியம். நாள் ஒன்றுக்குத் தேவையான மக்னீசியத்தில் 80 சதவிகிதம் ஒரு கப் பிரவுன் அரிசியில் கிடைத்துவிடுகிறது.

  பிரவுன் அரிசி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெது வாக ஏற்றும். இந்த அரிசியின் கிளைசமிக் குறியீட்டு எண், வெள்ளை அரிசியைவிடவும் குறைவு. எனவே, சர்க்கரை நோயாளிகள், ப்ரீ டயாபடீஸ் நிலையில் இருப்ப வர்கள், உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் வெள்ளை அரிசி யைத் தவிர்த்து, பிரவுன் அரிசி யைச் சாப்பிடலாம்.

  டார்க் சாக்லெட் :

  டார்க் சாக்லெட் :

  அதிக சர்க்கரை, கொழுப்பு, கிரீம் போன்ற 3 காரணங்களால்தான் சாக்லெட் சாப்பிடக் கூடாது என்று பொதுவாக மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

  டார்க் சாக்லெட்டில் இந்த மூன்று நெகட்டிவ் விஷயங்களுக்குப் பதிலாக Cocoa powder, Flavanols, Stearic acid என்ற 3 பாஸிட்டிவ் விஷயங்கள் இருக்கின்றன.

  டார்க் சாக்லெட்டுகளில் குறைந்தபட்சம் 70 சதவிகிதம் கோகோ இருந்தால் அவற்றில் போதுமான அளவு ஃப்ளேவனாய்டுகள் இருக்கும். அதனால் இதனைச் சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் இதில் அளவுடன் இருக்க வேண்டியது அவசியம்.

  கொலஸ்ட்ரால் :

  கொலஸ்ட்ரால் :

  டார்க் சாக்லெட்டில் உள்ள ஸ்டீரிக் அமிலம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கும். டார்க் சாக்லெட்டில் இருக்கும் கோகோ பவுடரும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவுகிறது.

  டார்க் சாக்லெட்டில் இருக்கும் ஃப்ளேவனால்ஸ் பீட்டா செல்களை உற்சாகமாக இயங்க வைக்கும் ஆற்றல் கொண்டது. இதுபோல பீட்டா செல்களின் செயல்திறனான இன்சுலின் சென்சிட்டிவிட்டி மேம்படுவதால் சர்க்கரை அளவு அதிகரிக்காது.

  அதேபோல், உணவின் மூலம் கிடைக்கும் சர்க்கரை அளவான கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவும் டார்க் சாக்லெட்டில் குறைவு

  திராட்சைப் பழம் :

  திராட்சைப் பழம் :

  திராட்சைக் பெரிதும் மருத்துவப் பயனளிக்கும் . திராட்சையில், பெருமளவு நீரும்,மாவுப் பொருளும் மற்றும் உப்பு நீர், கொழுப்பு சத்துக்களும் உண்டு. இது மிக குளிர்ச்சி தரும் பழவகையாகும் இரத்தத்தை விருத்தி செய்யவும் பித்தத்தை தணிக்ககூடிய பழமாகும்.

  திராட்சை கனியை இரு வகைகளில் பயன் படுத்தலாம்,பசுமையாக இருக்கும் போது பயன் படுத்தலாம். காயவைத்து உலர்ந்த பழங்களை பயன்படுத்துவது மற்றோரு வகை.

  பசுமையான திரட்சை இரத்தத்தை சுத்தப்படுத்தவும், உடலின் சூட்டை தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்த பயன்படுகிறது.

  திராட்சையில் உள்ள குளுக்கோஸ் உயர்ந்த தரம் கொண்டது.இது சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளும்போது நல்ல சர்க்கரையாக மாறி உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.

  க்ரீன் டீ :

  க்ரீன் டீ :

  கேட்சின் கொலிபெனல்ஸ் (Catechin Colyphenols ) தான் க்ரீன் டீயில் பிரதான விஷயம். அதாவது பவர்புல் ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் எனப்படும் மிகச் சிறந்த நோயெதிர்ப்பு சக்தி இந்த டீயில் குவிந்து கிடக்கிறது .

  பொதுவாகவே நாம் சாப்பிடும் எண்ணெய் பலகாரங்களாலும், அதிக ஸ்வீட் சாப்பிடுவதனாலும் உண்டாகும் கெட்ட கொழுப்பினால், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும். இது மாரடைப்பு வரை கூட கொண்டு போய் விட்டுவிடும்.

  இப்படிப்பட்ட ரத்த நாளங்களின் அடைப்பைப் போக்கி நார்மல் நிலைக்கு கொண்டுவரும் பணியை செய்கிறது இந்த க்ரீன் டீ.

  தொடர்ந்தால்... :

  தொடர்ந்தால்... :

  தொடர்ந்து க்ரீன் டீ பருகி வந்தால் மூட்டு பிரச்சனைகள், ரத்தகொதிப்பு, இதய நோய்கள் போன்ற நோய்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்து நாளடைவில் காணாமல் போகின்றன.

  க்ரீன் டீயைப் பருகுவதால் Fat Oxddations Themnogenesis மூலம் உடலில் சேர்ந்துள்ள கலோரிகள் உடனடியாக எரிக்கப் படுகிறது. எனவேதான் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி க்ரீன் டீ சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

  கிரீன் டீயில் ஃப்ளவனாய்டு (Flavonoid), கேட்டச்சின் (Catechin) முதலான பாலிபீனால்கள் (Polyphenol) அதிகம் உள்ளன. இவை சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களாகச் செயல்பட்டு, உடலில் உள்ள செல்கள் சிதையாமல் பாதுகாக்கின்றன.

  பாதாம் :

  பாதாம் :

  இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும்.

  நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. பாதாம்... பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது.

  எனவே நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக் கொள்ளவும் தினமும் பாதாம் எடுத்துக் கொள்வது அவசியம்.

  இதய நோய் :

  இதய நோய் :

  பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது.

  ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம்.

  பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை.

  புத்திக்கூர்மைக்கும் உதவுபவை. நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  foods to reduce love handles in two weeks

  foods to reduce love handles in two weeks
  Story first published: Monday, November 6, 2017, 13:45 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more