வயிற்று வலி வரும்போது நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!

Posted By:
Subscribe to Boldsky

வயிற்று வலிக்கு பொதுவான காரணம் ஜீரண மண்டல பாதிப்பு. வயிற்று வலி வயிற்றில் உண்டாகியிருக்கும் தொற்றுக்கான சாதரண வலி. ஃபுட் பாய்ஸன் ஆகியிருந்தால் அல்லது கிருமிகளின் தொற்றுக்களால் வயிற்று வலி உண்டாவதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தவிர்க்க இயலாது.

வயிற்று வலி வந்தால் உடனே எல்லா மருந்துகளையும் நாம் ட்ரை பண்ணிப் பார்ப்பது வழக்கம். ஆனால் எந்த மாதிரியா உணவுகளை நாம் முதலில் தவிர்க்க வேண்டும் என்பதை நாம் நினைப்பதில்லை.

Foods to avoid when you have a stomach ache

வயிற்று வலி வருவதற்கு பலப்பல காரணங்கள் உண்டு. அஜீரணம், தொற்று, வாய்வு, மலச்சிக்கல், என சாதாரண பாதிப்புகள் நிறைய உண்டு. வயிற்று வலிகான காரணம் கண்டுபிடிப்பது போல் எந்த மாதிரியான உணவுகளையும் நீங்கள் சாப்பிடக் கூடாது என்பதையும் நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றைப் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால் உணவுகள் :

பால் உணவுகள் :

பால் உணவுகளில் இருக்கும் லாக்டோஸ் உங்கள் வயிற்று வலியை இன்னும் அதிகபப்டுத்திவிடும். காரணம் அவை எளிதில் செரிக்காது. இதனால் செரிமான மண்டலம் இன்னும் அதிகமாக எதிர்ப்புகளை தெரிவிக்கும்போது , வலி தீவிரமாகும். ஆகவே பாலை தவிருங்கள்.

கொழுப்பு :

கொழுப்பு :

சாதரணமாகவே கொழுப்பு உணவுகள் செரிக்க தாமதமாகும். வயிற்று வலி இருக்கும்போது கொழுப்பு, எண்ணெய் உணவுகளை சாப்பிடும்போது வயிற்று வலி மற்றும் வாந்தி போன்றவையும் ஏற்படும்.

காரம் :

காரம் :

கார உணவுகள் ஜீரண நொதிகளை தூண்டிவிடும். இதனால் அதிக அமிலத்தன்மை உண்டாகி நெஞ்செரிச்சல், எரிச்சல் போன்றவை உண்டாகும். ஆகவே காரமான உணவுகளை வயிற்று வலி இருக்கும்போது அறவே தவிருங்கள்.

இனிப்பு வகைகள் :

இனிப்பு வகைகள் :

இனிப்பு வகைகள் உங்கள் ஜீரண மண்டலத்தை பாதிக்கும் உணவுகளாகும். இவை தொற்றினை இன்னும் அதிக தீவிரப்படுத்துவதால் நிலைமை இன்னும் அதிகம் பாதிக்கப்படும். ஆகவே இனிப்பு வகைகளை வயிற்று வலியின் போது சாப்பிடாதீர்கள்.

காஃபி :

காஃபி :

காபி அஜீரணத்தை உண்டுபண்ணும். உங்களுடைய குடலின் செய்ல்பாடுகளை குறைக்கும். மலச்சிக்கலையும் உண்டு பண்ணும். ஆகவே வயிற்றுப் பிரச்சனை இருக்கும்போது காபி குடிக்கக் கூடாது.

சோடா :

சோடா :

வயிற்று வலி வந்தால் நிறைய பேர் சோடா குடிப்பார்கள். இது தவறு. அதிலுள்ள கார்பனேற்ற மூலக்கூறுகள் இன்னும் அதிக வாய்வை வயிற்றுக்குள் உண்டு பண்ணும்போது வலி அதிகமாகும். ஆகவே சோடா குடிக்காதீர்கள்.

ரிஃபைண்டு மாவுப் பொருட்கள் :

ரிஃபைண்டு மாவுப் பொருட்கள் :

பொதுவாகவே கார்போஹைட்ரேட் உணவுகள் செரிப்பதற்கு தாமதமாகும். அவற்றினால் செய்யப்பட்ட சுத்தரிக்கப்பட்ட அரிசி மாவு, கோதுமை மாவு, மைதா மாவை தவிருங்கள். இவை குடல்களில் ஒட்டிக் கொண்டு பிரச்சனைகளை உண்டு பண்ணும்.

நார்ச்சத்து உணவுகள் :

நார்ச்சத்து உணவுகள் :

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்ற எல்லா நேரங்களிலும் மிகவும் நல்லது. ஆனால் வயிற்று வலி இருக்கும்போது நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தவிருங்கள். இவை வயிற்றுப் போக்கை உண்டாக்கிவிடும்.

மது :

மது :

மது எப்போதுமே குடிக்கக் கூடாது. குறிப்பாக வயிற்று வலி இருந்தால் நீங்கள் மதுவின் பக்கமே போகக் கூடாது. இவை நோயின் அறிகுறிகளை இன்னும் தீவிரப்படுத்திவிடும்.

என்ன சாப்பிடலாம் :

என்ன சாப்பிடலாம் :

லாக்டிக் அமிலம் அதிகம் இருக்கும் உணவுகளை சாப்பிடலாம். உங்களுக்கு தொற்றினால் ஏற்பட்ட வயிற்று வலி என்றால் தயிர் மற்றும் யோகார்ட்டை சாப்பிடுங்கள். இவை நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்யும்போது உடலுக்கு நன்மைகளை தருகிறது. அது போல் பழங்களும் மிகவும் நல்லது.

மாதுளை

மாதுளை

பழச் சாறுகளை குடிக்கலாம். இவை எளிதில் செரிக்கும். தேவையான தெம்பையும் பழச் சாறுகள் தரும். குறிப்பாக மாதுளைச் சாறு வயிற்றுப் பாதிப்புகளுக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது.

வாழைப்பழம் :

வாழைப்பழம் :

வாழைப்பழம் தினமும் சாப்பிடுங்கள். அது உடலுக்கு தேவையான பொட்டாசியம் தருகிறது. வயிற்று வலிக்கு நல்ல மருந்தாக வாழைப் பழம் பயன்படுகிறது. பலவீனமன தசைகளை வலுப்படுத்துகிறது.

அரிசி பயித்தம் கஞ்சி :

அரிசி பயித்தம் கஞ்சி :

பயிற்றம் பருப்பு மற்றும் அரிசியை வறுத்து பொடி செய்து கஞ்சியாக காய்ச்சி குடிப்பது நல்லது. எளிதில் ஜீரணமாகும். பயிற்றம் பருப்பு வயிற்று உபாதைகளை நீக்கும். உடலுக்கு தெவையான தெம்பும் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods to avoid when you have a stomach ache

Foods to avoid when you have a stomach ache
Story first published: Saturday, January 6, 2018, 13:30 [IST]