மாதவிடாய் காலத்தில் இந்த உணவுகளையெல்லாம் நீங்க தள்ளி வச்சுடுங்க!!

Posted By: Ambika Saravanan
Subscribe to Boldsky

பெண்களுக்கு மாதவிடாய் காலம் என்பது வலி மிகுந்த காலம்தான். மாதவிடாய் வருவதற்கு முன்னர் அல்லது பின்னர் பெண்கள் பல வித குறியீடுகளை அனுபவிப்பர். பலருக்கு தலை வலி, குமட்டல், உடல் வலி போன்றவை ஏற்படும். மன உளைச்சல் அதிகமாகும்.

அந்த மாதவிடாய் காலத்தில் நாம் என்ன உணவுகள் எடுத்துக் கொள்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும். சில வகை உணவுகள் பெண்களின் பதட்டத்தை அதிகரித்து வலியை அதிகரிக்கும். அந்த உணவுகளை அறிந்து அவற்றை அந்த நாட்களில் உண்பதை தவிர்க்கும்போது ஓரளவு வலியில் இருந்து தப்பிக்கலாம்.

உணவு மட்டும் அல்ல, நல்ல தூக்கமும் உடற்பயிற்சியும் மாதாவிடாய் காலத்தை சற்று எளிமையாக்கும். இரும்பு சத்துள்ள கீரை வகைகள், வைட்டமின் பி சத்து நிறைந்த முட்டை, முழு தானியம், கோழி இறைச்சி , பாதாம், வைட்டமின் சி நிறைந்த பழங்கள் போன்றவை மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு வலிமையை கொடுக்கும்.

Foods to avoid during periods that will increase your stamina

மாதவிடாய் காலத்தில் சிலவகை உணவுகள் உடலுக்கு பாதங்களை தருகின்றன. அவற்றை கண்டறிந்து அதற்கு தகுந்தாற்போல் உணவுகளை சாப்பிட்டால் மாதவிடாய் காலத்தில் வரும் பாதிப்புகளை குறைக்கலாம்.

சில வகை உணவுகள் உடல் வலியை அதிகரிக்க செய்து , கனமான வயிறு, மன உளைச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். அந்த உணவுகளை பற்றி அறிந்து கொள்வோம் இன்னும் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுத்தீகரிக்கப்பட்ட உணவுகள்:

சுத்தீகரிக்கப்பட்ட உணவுகள்:

மாதவிடாய்க்கு முந்தய அறிகுறிகளை போக்க, பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் வழியாக கார்போஹைடிரேட்டை எடுத்துக் கொள்ளலாம்.

சுத்தீகரிக்கப்பட்ட உணவுகளில் குறைந்த கார்போ உள்ளதால் அவற்றை எடுத்துக் கொள்ளும்போது அவை எளிதில் உடலில் எரிக்கப்பட்டு பசி எடுத்து உடல் சோர்வடைகிறது. சுத்தீகரிக்கப்பட்ட உணவில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் சோர்வும், மன உளைச்சலும் அதிகமாகிறது.

வெள்ளை பிரட் , பாஸ்தா, பாக்கெட் உணவுகளான உருளை சிப்ஸ் அல்லது மற்ற ஸ்னாக்ஸ் வகைகள், இன்ஸ்டன்ட் உணவுகள், நார்ச்சத்து குறைந்த தானியங்கள், கேக், குக்கி போன்றவைகளை தவிர்ப்பது நல்லது. இவற்றை சாதரண நிலையிலேயே சாப்பிடுவதை குறைக்க வேண்டும்.

கொழுப்பு மற்றும் பொரித்த உணவுகள்:

கொழுப்பு மற்றும் பொரித்த உணவுகள்:

மாதவிடாய் வலி மற்றும் அறிகுறிகளுக்கு உடலில் சிறு வீக்கம் அல்லது அழற்சியுடன் தொடர்பு இருக்கலாம் . கல்லீரலில் இருக்கும் சி-ரியாக்டிவ் புரதம்(C-reactive protein (CRP)) என்பதை அளவிடுவதன்மூலம் இதன் தொடர்பை அளவிட முடியும்.

இந்த CRP அளவு அதிகமாக இருக்கும் நடுத்தர வயது பெண்களுக்கு 25-40% அதிக அளவு வயிறு வலி, முதுகு வலி, எடை அதிகரிப்பு, மார்பக வலி போன்றவை ஏற்படுகிறது.

அதிக அளவு கொழுப்பு உணவுகள் எடுத்துக் கொள்வதால் உடலில் அழற்சி அல்லது வீக்கம் ஏற்படுகிறது. குறிப்பாக பொரித்த வெங்காயம், பிரெஞ்சு பிரை , துரித உணவுகள், கொழுப்பு நிறைந்த சிவப்பு இறைச்சி, கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள், ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட தாவ்ரஎண்ணெய் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

உப்பு உணவுகள்:

உப்பு உணவுகள்:

மாதவிடாய் காலத்தில் நீர் அதிகமாக சேர்ந்து வயிறு கனப்பதை போல் உணர்கிறீர்களா ? உப்பு உணவை தவிர்த்து பாருங்கள். அதிகமாக உப்பு சேர்க்கப்பட்ட உணவுகள் உடலில் நீர் சம நிலையை மாற்றி, வீக்கம், உயர் இரத்த அழுத்தம் அதனால் ஏற்படும் வயிறு உப்புசம் போன்றவை உண்டாகலாம்.

ஆகவே, உப்பு சேர்க்கப்பட்ட சிற்றுண்டிகள், உப்பு சேர்க்கப்பட்ட நட்ஸ், ஊறுகாய், மயோனைஸ், சோயா சாஸ், சீஸ் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

இனிப்பு உணவுகள்:

இனிப்பு உணவுகள்:

மன உளைச்சல் மற்றும் பதட்டம், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முக்கிய அறிகுறிகளாகும். இனிப்பான உணவுகள் எடுத்துக் கொள்வதன்மூலம் பதட்டம் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கும்.

பொதுவாக சர்க்கரை உணவுகள் வேகமாக ஆற்றலாக மாறி, வேகமாக எரிக்கப்பட்டுவிடும். ஆகவே உடல் உடனடியாக சோர்ந்து விடும். சர்க்கரை, உங்கள் மனநிலையை மாற்றுவது மட்டும் அல்ல, உடலின் தண்ணீர் அளவையும் அதிகரிக்கிறது.

சர்க்கரை கலந்த சோடா மற்றும் குளிர் பானங்கள், இனிப்பு பண்டங்கள், கேக், பிஸ்கட் , சாக்லேட் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

காஃபைன் :

காஃபைன் :

காஃபினை பொறுத்தவரை உங்கள் உடலுக்கு ஏற்று கொண்டால் இதனை மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தலாம். இல்லையேல் இதனை எடுத்துக் கொள்ளாமல் இருக்கலாம். ஏனென்றால் இதன் தன்மை ஒவ்வொருவரும் மாறுபடும். பொதுவாக 1 கப் காபி, உடலில் இருந்து சோம்பலை விரட்டி, நம்மை உற்சாக படுத்தும். அதே சமயம், காபியில் உள்ள காஃபின் டென்ஷன் மற்றும் பதட்டத்தை அதிகரித்து மன உளைச்சலை மேம்படுத்தும். சிலருக்கு தூக்கத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆகவே, காபி, டீ , காஃபின் சேர்க்கப்பட்ட சோடா, பானங்கள் , சாக்லெட், போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. காபினை பொறுத்தவரை அதன் அளவை குறைப்பது நல்ல விளைவுகளை தரும். நாளின் முற்பாதியில் இதனை எடுத்துக் கொண்டு, இரவு நேரத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

மேலே கூறிய உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளாகிய, காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை உண்டு, மாதவிடாய் காலத்தின் சிரமங்களை குறைக்கலாம். மேலும் வீட்டில் உள்ள கணவர் மற்றும் குழந்தைகளும் அரவணைத்து செல்லும்போது மாதவிடாய் காலங்களை எளிதில் கடந்து வர முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods to avoid during periods that will increase your stamina

Foods to avoid during periods that will increase your stamina
Story first published: Thursday, October 12, 2017, 8:00 [IST]