For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வயிற்றிலுள்ள கொழுப்பை குறைக்க நீங்கள் செய்ய வேண்டிய முதன்மையான விஷயங்கள்!!

உடல் பருமனை குறைக்க நீங்கள் எந்த மாதிரியான உத்திகளை கையாள வேண்டும் என இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

By Ambika Saravanan
|

ஆண் பெண் என அனைவரும் இன்று கவலைப்படும் ஒரு விஷயம் வயிற்றில் சேரும் கொழுப்பால் ஏற்படும் தொப்பை . சில காலம் முன்பு வரை 40 வயதிற்கு மேல் தான் இந்த பிரச்னை ஏற்பட்டது.

ஆனால் இன்றைய பாஸ்ட் புட் காலத்தில் இதுவும் பாஸ்ட்டாகவே நம்மை அச்சுறுத்த தொடங்கி விட்டது. ஆண்களுக்கு திருமணத்திற்கு முன்பே தொப்பை தோன்றி விடுகிறது. பெண்களுக்கும் தான். சிறு வயதில் இருந்தே கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதும். அமர்ந்த நிலையில் இருந்தே வேலை செய்வதும் இதற்கு முக்கிய காரணமாக அறிய படுகிறது.

இந்த தொப்பையின் தொந்தரவால் நாம பல விஷயத்தை இழக்கிறோம். பிடித்த ஆடைகளை உடுத்த முடிவதில்லை. ஆண்கள் உடையை இன் செய்யும் போது நீண்ட நேரம் அப்படியே இருக்காது.

Follow these habits to reduce stubborn belly fat

சட்டென்று குனிந்து எழ முடியாது. ஆசைப்பட்ட உணவுகளை உண்ண முடியாது. இவைகளுக்கு என்ன தீர்வு என்று ஆராய தொடங்குகிறோம். அந்த தேடலில் இருப்பவர்களுக்கு இந்த தொகுப்பு சில உதவிகள் செய்யலாம்.

வயிற்றில் சேரும் கொழுப்பு என்பது அழகு சம்மந்தப்பட்டது மட்டும் இல்லை. உடல் ஆரோக்கியத்திலும் இதன் பங்கு உள்ளது. வயிற்றில் சேரும் கொழுப்பை விஸேரால் கொழுப்பு என்று கூறுவர்.

குறிப்பாக இந்த வகை கொழுப்பு வயிற்றிலும் தொடை பகுதியிலும் தங்கும். இந்த கொழுப்பு அதிகமாகும் போது டைப் 2 நீரிழிவு , இதய நோய் போன்றவைகள் ஏற்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெந்நீர் பருகுங்கள்:

வெந்நீர் பருகுங்கள்:

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 டம்ளர் வெந்நீர் பருகுங்கள். அந்த நாள் முழுதும் அதனை தொடருங்கள். ஒரு பிளாஸ்கில் வெந்நீரை ஊற்றி வைத்து கொண்டு, அடிக்கடி ஒரு டம்ளர் குடியுங்கள்.

வெந்நீர், வயிற்றில் உள்ள குழாய்களை சுத்தம் செய்கின்றன. குடலில் சேரும் கொழுப்புகளை கரைக்க இவை உதவுகின்றன. வயிற்று கொழுப்பை குறைக்க உதவும் முதல் படியாக வெண்ணீர் பருகுதல் இருக்கிறது.

நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி:

நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி:

காலையில் ½ மணி நேரம் நடை பயிற்சி மேற்கொள்வதால் உங்கள் வயிற்று கொழுப்பு குறைகிறது. தூங்கி எழுந்தவுடன் சிறிது வெந்நீர் பருகிவிட்டு, நடை பயிற்சியை தொடங்கலாம். இது சிறந்த பலனை கொடுக்கும். அதன் பிறகு உடற்பயிற்சியை தொடங்குங்கள்.

உடற்பயிற்சி என்பது மணி கணக்கில் செய்ய வேண்டிய ஒரு பயிற்சி இல்லை. வெறும் 5 பயிற்சிகள் உங்களை புத்துணர்ச்சி அடைய செய்யும் வகையில் செய்யலாம். தினமும் அதே 5 பயிற்சிகளை செய்யாமல் , வாரத்திற்கு ஒரு முறை உங்கள் பயிற்சிகளை மாற்றுங்கள். யோகாவில் வயிற்று கொழுப்பை குறைக்க உதவும் வகைகளை தேர்ந்தெடுத்து செய்யலாம்.

உணவுகளை தேர்ந்திடுங்கள்:

உணவுகளை தேர்ந்திடுங்கள்:

டயட் என்ற பேரில், திடீரென்று உங்கள் உணவு அட்டவணையில் இருந்து சர்க்கரை, கார்போ ஹைட்ரெட் மற்றும் கொழுப்புகளை விலக்கி வைக்காதீர்கள்.

இதனால் உடலில் இன்சுலின் - க்ளுகோஸ் அளவு அதிகரித்து பசியை தூண்டும். மற்றும் இவை உடலில் உள்ள ஹார்மோன்களை பாதிக்கும். உணவுகளை குறைப்பதற்கு பதில், உடலில் உள்ள கலோரிகளை எரிக்கும் தன்மை உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள தொடங்குங்கள்.

இனிப்பு அதிகம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் வெள்ளை சர்க்கரையை பயன்படுத்தாமல், தேன், மற்றும் வெல்லத்தை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். இவை வயிற்று கொழுப்பை கரைய வைக்கும் அற்புத உணவுகள் ஆகும்.

அரிசி :

அரிசி :

பாலிஷ் செய்யாத அரிசியை உட்கொள்ள முயற்சி செய்யுங்கள். கை குத்தல் அரிசி அல்லது பழுப்பு அரிசியை பயன்படுத்தலாம். இவற்றில் புரதம், கார்போ ஹைட்ரெட் மற்றும் ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளது. இதனை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். மதிய உணவை நண்பகல் 12 மணிமுதல் 2 மணிக்குள் உண்ண வேண்டும். இதுவே செரிமானத்திற்கு சிறந்த நேரம்.

டிரான்ஸ் கொழுப்பு எனப்படும் கொழுப்பு உணவை தவிர்க்க வேண்டும். திரவ நிலையில் இருக்கும் சமையல் எண்ணெய் போன்றவற்றின் மதிப்பை உயற்றுவதற்கு அதில் ஹைட்ரஜனேற்றம் செய்யப்படுகிறது. இந்த முறையில் தயாரிக்கப்படும் கொழுப்பை ட்ரான்ஸ் கொழுப்பு என்று கூறுவர். இது உடல் நலத்தை வெகுவாக பாதிக்கும், கலோரிகளும் இந்த பொருள் கொண்டு தயாரிக்கும் உணவுகளில் அதிகம். வயிற்றில் கொழுப்பு சேர வாய்ப்பு அதிகம்.

புரதம் :

புரதம் :

புரத சத்து அதிகமாக இருக்கும் உணவை சேர்த்துக் கொள்ள வேண்டும். 50% புரதம், 20% கார்போ ஹைட்ரட், 10% கொழுப்பு என்ற வகையில் உணவு அட்டவணையை பின்பற்ற வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள முறைகளை பின்பற்றி ஒரே மாதத்தில் உங்கள் வயிற்று பகுதியில் சில இன்ச் குறைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Follow these habits to reduce stubborn belly fat

Follow these habits to reduce stubborn belly fat
Story first published: Saturday, September 16, 2017, 11:36 [IST]
Desktop Bottom Promotion