தீபாவளி பலகாரம் சாப்பிடுவதற்கும் காலாவதி தேதி இருக்கு! உங்களுக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

தீபாவளி நெருங்கிவிட்டது.அதன் கொண்டாட்டங்களும் களைக்கட்டத் துவங்கியிருக்கிறது. தீபாவளியில் புத்தாடை, பட்டாசுகளைத் தாண்டி முக்கிய இடம் வகிப்பது தீபாவளி பலகாரங்கள் தான்.

தீபாவளி பலகாரம் என்று சொல்லி காலாவதி தேதியைத் தாண்டி நாம் சாப்பிடுவதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. வீட்டில் தயாரிக்கும் பொருள் என்றாலும் கூட ஒவ்வொரு இனிப்பு வகைக்கும் காலாவதி தேதி இருக்கிறது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்ணைக் கவரும் வண்ணம் :

கண்ணைக் கவரும் வண்ணம் :

சாப்பிடும் பொருட்களில் அழகை எதிர்ப்பார்த்தால் நிச்சயம் நாம் உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும்.

சாப்பிடும் பொருள் சத்தானதாக, ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். மிக முக்கியமாக சுத்தமாக தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். அதை விடுத்து அதன் வடிவத்தையும் நிறத்தையும் பார்த்து வாங்க ஆரம்பித்தால் ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம்.

காலாவதி தேதி :

காலாவதி தேதி :

ஸ்வீட் ஸ்டால்கள், பேக்கரிகளில் விற்பனையாகும் இனிப்புகள் என்றைக்குத் தயாரிக்கப்பட்டவை என்பது நமக்கு தெரியாது. அதேபோல, எத்தனை நாளைக்குள் அவற்றைப் பயன்படுத்தலாம் என்பதும் நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.

பண்டங்களில் ஏதேனும் மாற்றம் தெரிந்தாலும் கூட அதனை பெரிதாக கண்டு கொள்ளாது அதனை சாப்பிட்டு விடுகிறோம். மற்ற எல்லா பொருட்களைப் போலவே இனிப்புகளுக்கும் காலாவதி தேதி உண்டு. அவற்றை எப்படி கண்டுபிடிப்பது என்று அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

எப்படிக் கண்டறிவது?

எப்படிக் கண்டறிவது?

ஸ்வீட் வாங்கும்போது, முதலில் அதில் வெள்ளையாக பூஞ்சைத் தொற்று உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். அது, ஸ்வீட்டைக் கையில் எடுத்துப் பார்த்தாலே தெரிந்துவிடும்.

அதேபோல ஓர் இனிப்புப் பலகாரம், நாம் வழக்கமாகப் பார்க்கும் நிறத்தைவிட அதிகளவு ஈர்க்கக்கூடிய நிறத்தில் இருக்கக் கூடாது. ஸ்வீட் கெட்டுப்போய்விட்டதா என்பதை அதன் சுவையே உணர்த்திவிடும். வழக்கமான சுவையை விட கொஞ்சம் வித்யாசம் தெரிந்தாலே அதனை சாப்பிடுவதை தவிர்த்திட வேண்டும்.

கவனம் :

கவனம் :

ஸ்வீட் ஈக்கள் மொய்த்தபடி சுகாதாரமற்ற நிலையில் இருந்தால், வாங்கக் கூடாது. சூரிய ஒளி பலகாரங்களின் மேல் நேரடியாகப் படாதவாறு பராமரிக்கப்படுகிறதா என்பதையும் சரிபார்த்துவிட்டுப் பிறகு வாங்க வேண்டும்.

இனிப்பு பொருள்களில் பால், ஜீரா சேர்க்கப்படும் அளவைப் பொறுத்து அவை கெட்டுப்போகும். எண்ணெய்களால் தயாரிக்கப்பட்ட இனிப்புகளைவிட, நெய்யால் தயாரிக்கப்பட்டவை அதிக நாள் கெடாமல் இருக்கும்.

4 நாட்கள் :

4 நாட்கள் :

பொதுவாக, எந்த இனிப்பையும், அது தயாரிக்கப்பட்ட நான்கு நாள்களில் சாப்பிட்டுவிடுவது நல்லது. பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ப்படும் ஸ்வீட்ஸில் காலாவதி தேதியைச் சரிபார்த்துத்தான் வாங்க வேண்டும்.

மில்க் ஸ்வீட்ஸ் :

மில்க் ஸ்வீட்ஸ் :

பால்கோவா,தூத் பேடா,போன்ற மில்க் ஸ்வீட்கள் சாதாரணமாக இரண்டு நாள்கள் வரை கெட்டுபோகாமல் இருக்கும். கெட்டுப்போன இனிப்புகள் வயிற்றுப்போக்கை உண்டாக்கும். சில நேரங்களில் வயிற்றில் பாக்டீரியா உள்ளிட்ட தொற்றைக் கூட ஏற்படுத்திடும்.

இனிப்பு :

இனிப்பு :

ஜிலேபி,ஜாங்கிரி,லட்டு,பாதுசா,ரசகுல்லா,குலோப்ஜாமுன் போன்றவற்றை தயாரித்த தேதியிலிருந்து மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் சாப்பிடுவது நன்று.

சோன்பப்டி தாயாரித்த நாளிலிருந்து 20 நாட்கள் வரை நன்றாக இருக்கும். மைசுர் பாக், அதிரசம் ஏழு முதல் பத்து நாட்கள் வரை நன்றாக இருக்கும் மைசூர் பாக், இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை நன்றாக இருக்கும் நெய் சேர்க்கப்பட்டதென்றால் ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do you know about the expiry date for sweets

Do you know about the expiry date for sweets
Story first published: Monday, October 9, 2017, 12:30 [IST]