For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  உணவு விஷயத்தில் நம்பப்படும் சில தவறான நம்பிக்கைகளும்! அவற்றின் உண்மைகளும்!!

  |

  இன்றைக்கு உடல் நலம் குறித்த விழிப்புணர்வு ஏறத்தாழ பெரும்பாலோனோருக்கு இருக்கிறது. எந்த உணவை எடுத்தாலும் அதில் இத்தனை கலோரி இருக்கிறது... அது ஆயில் அயிட்டம், சாப்பிட்டா வெயிட் போடும்... இது சாப்ட்டா ஸ்கின்னுக்கு நல்லது என்று சாப்பிடும் உணவுகளில் கிடுக்குப்பிடி காட்டுவார்கள் தினமும் சாப்பிடும் உணவுகளில் தான் நமக்கு எத்தனை சந்தேகங்கள்...

  சந்தேகங்களை விட தவறான புரிதலோடு இருந்தால் அது பெரும் ஆபத்து... உணவுகளில் இருக்கும் சத்துக்கள் குறித்து நிலவும் பொய்யும் அது குறித்த உண்மையையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  வேகாத கேரட் :

  வேகாத கேரட் :

  சமைத்த காய்களைவிட பச்சையாக சாப்பிடும் காய்களில் தான் அதிக சத்துக்கள் இருப்பதாக பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். காலையில் எழுந்ததுமே ஒரு காரட் பச்சையாக சாப்பிட்டால் முழு நாளுக்கான எனர்ஜி கிடைக்கும், காய்கறியில் இருக்கும் என்சைம்கள் ஜீரணத்தை அதிகரிக்கும் என்றெல்லாம் சொல்வார்கள்.

  இது முற்றிலும் தவறானது.உடலின் ஒட்டுமொத்த ஜீரணத்திற்கு காய்கறிகளில் இருக்கும் என்சைம்கள் மூலமாக ஜீரணமாவது என்பது மிகவும் குறைந்த அளவு தான். அத்துடன் காய்களை ஜீரணத்திற்காக மட்டுமே நாம் சாப்பிடுவதில்லை என்பதையும் உணர வேண்டும்.

  அரிசி சாப்பிட்டால் ஓபிசிட்டி வரும்:

  அரிசி சாப்பிட்டால் ஓபிசிட்டி வரும்:

  அரிசி உணவுகளில் கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது. அதனால் அது சாப்பிட்டால் நமக்கு கொழுப்பு சேரும் என்று சொல்லி அரிசி உணவே இல்லாத பேலியோ டயட் தான் இப்போதைய ட்ரெண்ட்டாக இருக்கிறது. கார்போஹைட்ரேட் அரிசிகளில் மட்டுமல்ல பிரட்,பாஸ்தா போன்ற பல உணவுகளைச் சாப்பிட்டாலும் கார்போ ஹைட்ரேட் சேரும். அதோடு கார்போஹைட்ரேட் வேண்டவே வேண்டாம் என்று சுத்தமாக நம்மால் ஒதுக்க முடியாது நம் உடலை சுறுசுறுப்பாக இயக்குபவைகளில் முதன்மையானது கார்போஹைட்ரேட்.

  பகலும் இரவும் ஒன்றே :

  பகலும் இரவும் ஒன்றே :

  கொழுப்பு நிறைந்த உணவுகளை மதிய நேரத்தில் தான் சாப்பிட வேண்டும் அப்போது தான் அது எளிதில் ஜீரணமாகும் இரவுகளில் சாப்பிட்டால் அது ஜீரணமாகாது என்று சொல்லி மதிய உணவாக சிலர் டபுள் மீல்ஸ் கூட வெளுத்து கட்டுவார்கள். உள்ளே செல்லும் உணவு பகலா இரவா என்றெல்லாம் பார்க்காது. கொழுப்பு உணவுகளை எப்போது சாப்பிட்டாலும் அது உடல் நலத்திற்கு தீங்கு தான் விளைவிக்கும்.

  வெயிட் போடுமா அரிசி :

  வெயிட் போடுமா அரிசி :

  அரிசி உணவுகள் மற்றும் பால், பால் சார்ந்த பொருட்கள் எனக்கு ஒத்துக்கொள்ளாது அதுவே சாப்பிட வேண்டிய சூழல் உடலுக்கு ஒவ்வாது உணவை எடுப்பதால் அது ஜீரணமாவதில்லை அது கொழுப்பாக மாறிடுகிறது. என தன் ஓபீசிட்டிக்கு அவர்கள் கூறும் நீண்ட விளக்கத்தை கேட்டிருப்போம். இந்தக் கருத்தயும் முழுதாக ஏற்றுக் கொள்ள முடியாது. தனக்கு எட்டாத பழத்தை நரி சீ.... இந்தப்பழம் புளிக்கும் என்று சொன்னது போலவே இவர்களது கூற்று.

  தனக்கு பிடித்த உணவை முழுதாக ஜீரணம் செய்வது பிடிக்காததாஅப்போ 50 சதவீதம் ஜீரணம் ஆனாலே போதும் என்று ஓரவஞ்சனை எல்லாம் நம் உள்ளுறுப்புக்கள் பார்ப்பதில்லை.

  ஓவன் ஆபத்து :

  ஓவன் ஆபத்து :

  மைக்ரோ வேவ் ஓவனில் நாம் உணவை தயாரிக்கும் போது மைக்ரோ வேவின் ரேடியேஷன் கதிர்வீச்சால் உணவுப்பொருள் விஷமாகிடும் என்றும் பயமுறத்தலை கேட்டிருப்போம். ஓவனில் மிகக்குறைந்த அளவிலான ரேடியேஷன் தான் வருகிறது. ஓவனில் உணவுப்பொருள் மட்டுமே சமைக்கப்படுகிறதே தவிர அத்துடன் ரேடியேஷன் கலந்து வினைபுரிவதில்லை என்பதால் நீங்கள் பயப்படத் தேவையில்லை.

  உண்ணாவிரதம் அவசியமா?

  உண்ணாவிரதம் அவசியமா?

  வாரம் ஒரு முறை வெறும் தண்ணீரை குடித்து விரதமிருக்க வேண்டும். வயிறுக்கும் ஜீரண உறுப்புகளுக்கு ஒருநாளாவது ஓய்வு வேண்டாமா என்று புதிதாக பணிக்குச் சேர்ந்தவர் போல டயலாக் பேசுபவர்களை நம்ப வேண்டாம்.

  நம் உள்ளுருப்புகள் தினமும் வேலை கொடுப்பதால் இனி ஜீரணிக்க மாட்டேன் என்று ஸ்ட்ரைக் செய்து கொடி பிடிப்பதோ அல்லது வேலை நிறுத்தம் செய்யப்போவதோ இல்லை. தொடர்ந்து தன் வேலையை செய்து கொண்டேயிருக்கும்.

  உருளைக்கிழங்கு வேண்டாம் :

  உருளைக்கிழங்கு வேண்டாம் :

  குழந்தைகளுக்கு பிடித்தமான காய்களில் உருளைக்கிழங்கு முதன்மையானது. ஆனால் அதைச் சாப்பிட்டால் ஓபிசிட்டி வந்துவிடும் என்று பயமுறுத்தி வைத்திருப்பார்கள். இதுவும் தவறான கருத்து தான்.

  சாதாரணமாக ஒரு உருளைக்கிழங்கில் 160 கலோரிகளும் 4 கிராம் ஃபைபர் இருக்கும்.அதோடு உருளைக்கிழங்கில் இருக்கும் க்ளிசிமிக் இண்டெக்ஸ் glycemic index நம் உடலிலுள்ள ரத்தச் சர்க்கரை அளவை உயர்த்திடும். இது நம் உடலுக்கு தேவையானது தான் அதற்காக அளவுக்கு மீறி சாப்பிட வேண்டாம். அதே நேரத்தில் முற்றிலும் ஒழிக்கவும் தேவையில்லை.

  காளான் பூஞ்சை :

  காளான் பூஞ்சை :

  காளானில் சில பூஞ்சைகள் இருக்கும் அதனால் அதை சாப்பிடுவது ஆபத்தானது.என்று உங்களுக்குசொல்லப்பட்டிருந்தால் அது பொய்யான தகவலே. உண்மையில் காளான்களில் எக்கச்சக்கமான சத்துக்கள்நிறைந்திருக்கின்றன.

  ரத்தப் புற்றுநோயை வராமல் தடுக்கும் ஆற்றல் காளாணுக்கு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதோடு இதில் ரிபோஃப்ளோவின், விட்டமின்-பி5, பொட்டாசியம் என எக்கச்சக்கமான சத்துக்கள் இருக்கின்றன. நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் சக்தியும் இதற்கு உண்டு.

  கல் உப்பு :

  கல் உப்பு :

  சாதரணமாக நாம் பயன்படுத்தும் பொடி உப்பை விட கல் உப்பில் நிறைய சத்துக்கள் இருக்கின்றன என்றுசொல்லப்படுகிறது. கடல் உப்பு டேபிள் சால்ட் இரண்டிலுமே சம அளவிலான சோடியும் இருக்கிறது.

  பொடி உப்பை விட கல் உப்பில் மக்னீசியம் ஐயர்ன் சத்து இருக்கிறது, ஆனால் அவை மிகக் குறைந்த அளவு தான். அந்த சத்துக்கள்உங்கள் உடலுக்கு தேவையான அளவு கொடுக்க வேண்டுமென்றால் அதிக உப்பை எடுக்க வேண்டியிருக்கும். அதிக உப்பு உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

  சோடாவை விட எனர்ஜி ட்ரிங்க் நல்லது :

  சோடாவை விட எனர்ஜி ட்ரிங்க் நல்லது :

  சோடாவில் கேஸ் இருப்பதால் அதனை தவிர்த்துவிட்டு பாட்டிலில் அடைத்து வைத்திருக்கும் குளிர்பானத்தைகுடிக்கலாம். அது எனர்ஜி டிரிங்க் என்று தண்ணீருக்கு பதிலாக குடிப்பதை பார்த்திருப்போம். இயற்கையான பொருட்களை ,மூலப்பொருட்களாக அறிவித்துவிட்டு அதே வாசனை வருவதற்கான கெமிக்கல்ஸ் தான்சேர்க்கப்பட்டிருக்கும்.

  கிட்டதட்ட 80 சதவீதம் அதில் சர்க்கரையைத் தான் கலந்திருப்பார்கள் அது உடலுக்கு தீங்கு விளைவிப்பதுடன் பற்களுக்கும் ஆபத்து. எனர்ஜி டிரிங் வேண்டுமென்றால் ப்யூர் ஜூஸ் நீங்களே தயாரித்து குடிக்கலாம். சோடாவோ அல்லது சாஃப்ட் டிரிங்க்ஸோ இரண்டுமே உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

  எல்லா கலோரிகளும் ஒன்றல்ல :

  எல்லா கலோரிகளும் ஒன்றல்ல :

  மீன் சாப்பிட்டு கிடைக்க கூடிய கலோரியும் கேக் சாப்பிட்டு கிடைக்க கூடிய கலோரிகளும் ஒரேயளவாக இருந்தாலும் ஒரே தாக்கத்தை ஏற்படுவதில்லை சாப்பிட்ட உணவை ஜீரணமாக்க ப்ரோட்டீன் சத்து தேவைப்படும்.

  மீன் சாப்பிடும் போதே நமக்கு ப்ரோட்டீன் சத்தும் கிடைத்திடும் இதே நேரத்தில் கேக் சாப்பிட்டால் அது ஜீரணமாகதாமதமாகும் இதனால் கேக் பொருட்கள் சாப்பிட்டால் வெயிட் போடுவதாய் தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறோம். உடலுக்கு தேவையான சரிவிகித உணவை எடுத்துக் கொள்வது அவசியம்.

  முட்டை :

  முட்டை :

  முட்டை சாப்பிட்டால் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆம் முட்டையில் கொலஸ்ட்ரால்இருக்கிறது தான் ஆனால் அதனை முற்றிலுமாக ஒதுக்கத் தேவையில்லை. காலை உணவில் முட்டையை சேர்த்துக் கொண்டால் அதிலிருந்து கிடைகக்கூடிய கலோரி அன்றைய நாளை உற்சாகமாக்கும்.

  ஓட்ஸ் சாப்பிடலாமா? :

  ஓட்ஸ் சாப்பிடலாமா? :

  ஓட்ஸ் உடலுக்கு நல்லது தான். அது முழுமையான ஸ்க்ராட்ச் ஆல் தயாரிக்கப்பட்டு நீங்களே அதில் சில பழங்களைசேர்த்து சுவையூட்டி சாப்பிட்டால் அது ஆரோக்கியமானது தான். ஆனால் இன்று ஓட்ஸ் டப்பாவில் அடைத்து இன்ன, இன்ன ஃப்ளேவர், நீங்கள் எதுவும் சமைக்க வேண்டாம் என்று நம் வேலைப்பளுவை குறைக்கிறோம் என்று சொல்லி கெமிக்கல்ஸ் தான் நமக்கு கொடுக்கிறார்கள். ஃப்ளேவர்,கலர் என தேடாமல் ஆரோக்கியத்தை தேடுங்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Common Food Myths and Facts

  Here truth about some common food myths
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more