தினமும் இந்த பழம் சாப்பிட்டா வயிற்றில் சேர்ந்திருக்கும் கொழுப்பு கரையும்!

Posted By:
Subscribe to Boldsky
தினமும் இந்த பழம் சாப்பிட்டா வயிற்றில் சேர்ந்திருக்கும் கொழுப்பு கரையும்!- வீடியோ

மருத்துவ குணம் நிரம்பியது என்று சொல்லி நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய அனைத்து வகையான உணவுகளும் அதிக விலைகொண்டதல்ல, அதை விட நாம் சாதரணமாக எடுத்துக் கொள்ளும் உணவுகள், எளிதாக நமக்கு கிடைக்ககூடிய உணவுகளில் ஏராளமன மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கிறது.

உலகின் எல்லா பாகங்களிலும் எல்லா நேரங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு பழம் என்றால் அது வாழைப்பழம் தான். வாழைப்பழத்தில் மூன்று வகையான இனிப்புகள் இருக்கிறது. சக்ரோஸ், ப்ரக்டோஸ்,ஃப்ரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் கிடைத்திடும்.இதைத் தவிர நம் குடலுக்குத் தேவையான ஃபைபர் நிறைய இருக்கிறது.

வாழைப்பழம் மனிதனின் மூளைக்குத் தேவையான அனைத்து வகையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது. இதனை சாப்பிடுவதால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்ற நீண்ட பட்டியலை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தசைகள் :

தசைகள் :

தீவிரமான விளையாட்டிற்கு பிறகோ அல்லது உடற்பயிற்சிக்குப் பிறகு வாழைப்பழம் சாப்பிடுங்கள். அதில் அதிகப்படியான மக்னீசியம் இருக்கிறது. இதனைச் சாப்பிடுவதால் தசைகளில் தேக்கி வைத்திருக்கும் கொழுப்பு கரைந்திடும்.

இதிலிருக்கும் எலக்ட்ரோலைட் மற்றும் பொட்டாசியம் தசை இறுக்கத்தை குறைக்கும்.

மகிழ்ச்சி :

மகிழ்ச்சி :

வாழைப்பழத்தில் விட்டமின் பி9 இருக்கிறது. அதோடு அகா ஃபோலேட் என்ற ஒரு வகை நியூட்ரிசியன் இருக்கிறது. இது குறைவாக இருப்பதால் தான் நமக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.

வாழைப்பழம் சாப்பிடுவதால் நம் மூளையில் செரோடோனின் என்ற ஹார்மோனைச் சுரக்கச் செய்திடும் இதனால் மன அழுத்தம் குறைந்து மகிழ்சியுடன் இருப்பீர்கள்.

கொழுப்பு :

கொழுப்பு :

வாழைப்பழத்தில் கோலைன் இருக்கிறது. அதோடு இதிலிருக்கும் பி விட்டமின்கள் அடிவயிற்றில் சேர்ந்திருக்கக்கூடிய கொழுப்பைக் கரைத்திடும். மதுப்பழக்கம் உடையவர்களுக்கு கல்லீரலைச் சுற்றி கொழுப்பு படிந்திருக்கும் அதனை கரைக்கவும் வாழைப்பழம் பயன்படும்.

மலச்சிக்கல் :

மலச்சிக்கல் :

மலச்சிக்கல் ஏற்ப்பட்டால் உணவில் தினமும் வாழைப்பழத்தைச் சேர்த்து சாப்பிடுங்கள். வாழைப்பழத்தில் அதிகமான பைபர் (Fiber) இருப்பதால் உங்கள் குடலை சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியை சுத்தமாக போக்கிவிடுகிறது.

மந்தம் :

மந்தம் :

நம்மில் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழும்பிவிட்டால் கூட மந்தமாக இருப்பதாக அலுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இதோ வாழைப்பழ மருந்து தயாராகவுள்ளது.

வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் தயார் செய்து குடிக்கவும்.

வாழைப்பழம் தேனுடன் சேர்த்து வயிற்றை அமைதிப்படுத்தி இரத்தத்திலுள்ள இனிப்புச் சத்தை அதிகமாக்குகிறது. அத்துடன் இதில் பாலும் சேர்ப்பதால் பால், நீர் சத்தை சரியாக வைத்துக்கொள்கிறது.

நெஞ்செரிச்சல் :

நெஞ்செரிச்சல் :

வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிச்சல் குறைந்திடும்.

உடற்பருமன் :

உடற்பருமன் :

ஆஸ்திரியாவில் உள்ள மனோதத்துவ நிறுவனத்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள் 5000 நோயாளிகளை சோதனை செய்து பார்த்ததில் அதிகமான உயர்ந்த மனஅழுத்த வேலைகளில் உள்ளவர்கள் தான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள்.

இந்த அழுத்தத்தின் காரணத்தால் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு சீராக இல்லாத காரணத்தால் உடற்பருமன் ஏற்படுகிறது. அவர்களுக்கும் வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை ஒரு ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வந்து உடற்பருமன் குறைவதாக அந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

குடற்புண் :

குடற்புண் :

வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை ஏற்படுத்தாததினால் குடற்புண்ணை அழிப்பதுடன் குடற்புண் வராமல் காக்கிறது.

சீரான வெப்பநிலை :

சீரான வெப்பநிலை :

வாழைப்பழத்திற்கு குளிர்ந்த பழம் என்ற பெயரும் உண்டு. தாய்லாந்து நாட்டு மக்கள் அதிகமாக வாழைப்பழத்தை சாப்பிடுவதால் அவர்களது உடலின் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது.

வாழைப்பழம் சாப்பிடுவதால் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய ஒரு வித மந்த நிலையை இல்லாமல் ஆக்குகிறது.

மன அழுத்தம் :

மன அழுத்தம் :

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அவை இதயத்துடிப்பை கட்டுக் கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் ஆக்ஸிஜைனை மூளைக்குச் செலுத்தி உடலின் தண்ணீரின் அளவை சமப்படுத்துகிறது. இதனால் மன அழுத்த நோய் நீங்கும்.

காலைத் தூக்கம் :

காலைத் தூக்கம் :

மூன்று நேர உணவு இடைவேளைக்குள்ளும் வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடம்பிலுள்ள இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு அதிகமாக்கப்பட்டு காலைத் தூக்க நோயிலிருந்து விடுபடலாம்.

இரத்த சோகை :

இரத்த சோகை :

வாழைப்பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் அதிக அளவு சிவப்பணுக்களை அதிகப்படுத்தி இரத்தச் சோகை வராமல் தடுக்கிறது.

முழுமை :

முழுமை :

சில நேரங்களில் எவ்வளவு உணவு சாப்பிட்டாலும் வயிறு நிறைவாகத் தோன்றாது. மேலும் மேலும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டேயிருக்க வேண்டும் என்பது போலத் தோன்றும் அவர்களுக்கு வாழைப்பழம் மிகச்சிறந்த தீர்வாக அமைந்திடும்.

இதிலிருக்கும் நல்ல பாக்டீரியா உணவை எளிதாக செரிமானம் செய்ய உதவுவதுடன் நிறைவான உணர்வைத் தரும்.

கெட்ட கொலஸ்ட்ரால் :

கெட்ட கொலஸ்ட்ரால் :

வாழைப்பழத்தில் இருக்கும் ஃபைட்டோஸ்டிரோல்ஸ் நம் உடலில் உள்ள கெட்டக் கொழுப்பை அகற்றிடும். அதோடு வாழைப்பழத்தில் இருக்கக்கூடிய விட்டமின் பி6 நோயெதிர்ப்பு சக்திக்கும்,இதயம் மற்றும் செரிமானத்திற்கு மிகவும் நல்லது.

இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கியிருக்கக்கூடிய கெட்ட கொழுப்பு கரைந்திடும்.

இரத்த அழுத்தம் :

இரத்த அழுத்தம் :

குறைந்த அளவு உப்பும் அதிக அளவு பொட்டாசியமும் இருப்பதால் அதிக இரத்த அழுத்தத்தையும், வாதநோயையும் குறைக்க முடிமென்று அமெரிக்க அரசு உணவு நிறுவனம் கூறுவதோடு அதிக வாழை மரங்களை சாகுபடி செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

எலும்பு :

எலும்பு :

வாழைப்பழத்தில் நிறைய கால்சியம் இல்லை தான் என்றாலும் வாழைப்பழம் சாப்பிடுவதால் கால்சியம் தேவை அதிகரிக்கும். அதோடு இதைச் சாப்பிடுவதால் நாம் சாப்பிடும் பிற உணவுகளிலிருந்து கிடைக்கூடிய கால்சியம் உறிஞ்சப்படும் தன்மையும் அதிகரிக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி :

நோயெதிர்ப்பு சக்தி :

வாழைப்பழத்தில் விட்டமின் ஏ இல்லை ஆனால் இது விட்டமின் ஏ பற்றாகுறையை ஈடு செய்யக்கூடியது. இதில் மூன்று வகையான கரோடினாய்ட் இருக்கிறது.

வாழைப்பழத்தில் இருந்து கிடைக்ககூடிய ப்ரோவிட்டமின் ஏ,கரோடினாய்ட்ஸ்,பீட்டா கரோட்டீன் மற்றும் அல்ஃபா கரோடீன் ஆகியவை விட்டமின் ஏ இடத்தை பூர்த்தி செய்கிறது.

புற்றுநோய் :

புற்றுநோய் :

வாழைப்பழத்தில் இருக்கும் டெல்ஃபிண்டின் என்ற ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் உடலில் இருக்கக்கூடிய செல்களை சிறப்பாக செயல்பட வைக்கிறது. குறிப்பாக வயிற்றில் வளரக்கூடிய புற்றுநோய் செல்களை இது தடுக்கிறது.

கண்பார்வை :

கண்பார்வை :

வாழைப்பழத்தில் இருக்கக்கூடிய பீட்டாகரோட்டீன் என்ற ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் எல்லா செல்களையும் புத்துணர்வுடன் வைத்திருக்க உதவுகிறது. அதோடு இதிலிருக்கும் விட்டமின் இ மற்றும் லுயுடின் கண் பார்வைக்கு மிகவும் நல்லது.

பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடிய மாக்குலர் டீஜென்ரேஷன் வராமல் தடுக்க லியுடின் என்ற சத்து அவசியமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing things happens when you Eat this Fruit

Amazing things happens when you Eat this Fruit
Story first published: Wednesday, November 22, 2017, 15:46 [IST]