கொலம்பஸ் கண்டுபிடித்த பழத்தினால் எத்தனை நன்மைகள் கிடைக்கிறது தெரியுமா!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைக்கு அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பழமான அன்னாசி பழத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.பிரேசில் நாட்டின் பராகுவே என்ற இடத்தை தாயகமாக கொண்டது அன்னாசிப் பழம்.

ஆரம்ப காலத்தில் அன்னாசிப்பழம் வைத்திருப்பது செல்வத்துடனும் ஸ்டேட்டஸுடனும் தொடர்புபடுத்தி பார்க்கப்பட்டது. செல்வந்தர்கள் மட்டுமே சாப்பிடும் பழம் குறிப்பாக அரச குடும்பத்தினர் இப்படியிருந்த பழம் இன்றைக்கு சர்வசாதரணமாக நமக்கு கிடைக்கிறது.

Amazing Benefits of Pineapple

கிறிஸ்டோபர் கொலம்பஸும் அவரது சகாக்களும் கரீபியன் தீவுக்கு இரண்டாவது முறையாக பயணித்த போது தான் இந்தப் பழத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனை சாப்பிட்டு அன்னாசிப்பழத்தின் சுவையில் மயங்கிய கொலம்பஸ் வகையாறாக்கள் அன்னாசிப்பழத்தை ஐரோப்பாவிற்கு கொண்டு வந்து விளைச்சல் செய்தனர்..

பதினேழாம் நூற்றாண்டுக்குப் பின்னர் அனைத்து மக்களுக்கும் கிடைக்கக்கூடிய பழமாக அது மாறியது. ராஜ உணவாக இருந்து பின்னர் பொதுமக்களுக்கான உணவாக மறியதால் அதில குறைவான சத்துக்கள் இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். யாருமே எதிர்ப்பார்க்காத அளவிற்கு எண்ணற்ற சத்துக்கள் அன்னாசிப் பழத்தில் நிறைந்திருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செல் வளர்ச்சி :

செல் வளர்ச்சி :

அன்னாசிப்பழத்தில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது. இது நம் உடலின் செல் வளர்சியை துரிதப்படுத்துகிறது. அதோடு பல்வேறு நோய் தொற்றுகளிலிருந்து நம்மை காக்கிறது. குறிப்பாக இதயக்கோளாறு,புற்றுநோய் ஆர்த்ரைட்டீஸ் ஆகியவை.

பாக்டீரியா :

பாக்டீரியா :

க்ளைமேட் மாற்றத்தினால் அல்லது திடீர் அலர்ஜியினால் சிலருக்கு தொடர்ந்து தும்மல் அல்லது தொண்டை வரண்டு இருமல் ஏற்படும். அவர்களுக்கு அன்னாசிப்பழம் சிறந்த தீர்வாக அமைந்திடும் .

அன்னாசிப்பழத்தில் விட்டமின் சி மற்றும் ப்ரோமிலைன் நிறைந்து காணப்படுகிறது. இவை நம் உடலில் தாக்கும் ஆண்ட்டி பாக்டீரியல் தொற்றினை அகற்றுகிறது.

எலும்புகள் :

எலும்புகள் :

வலுவான எலும்புகள் வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டியது அன்னாசிப்பழம். இதிலிருக்கும் மக்னீசியம் எலும்பினையும், எலும்பு மூட்டு சவ்வினையும் வலுவாக்குகிறது. அதோடு எலும்புகளின் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை மினரல்ஸும் இருக்கிறது.

பற்கள் :

பற்கள் :

அன்னாசிப்பழம் சாப்பிட்டால் பற்களுக்கும், ஈறுகளுக்கும் ஊட்டம் கிடைக்கப்பெற்று வலுவாக இருக்கும். பற் சிதைவு, பற்குழி,சொத்தைப்பல் போன்ற பல் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தவிர்க்க அன்னாசிப்பழம் சாப்பிடலாம்.

கண்பார்வை :

கண்பார்வை :

மேக்குளர் டீஜென்ரேசன் என்பது இளம்பருவத்தினருக்கு கண்களில் ஏற்படும் ஒரு குறைபாடு. இதனால் கண்பார்வையே பறிபோய்விடும் அபாயம் உள்ளது. அன்னாசிப்ப்ழத்தில் உள்ள பீட்டா கரோட்டீன் இதனை வராமல் தடுக்கச் செய்கிறது.

புற்றுநோய் :

புற்றுநோய் :

இன்றைக்கு எல்லாரையும் பயமுறுத்தும் நோய் என்றால் அது புற்றுநோயாகத்தான் இருக்கிறது. இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது ஒரு பக்கம். புற்றுநோய்க்காக எடுத்துக்கொள்ளப்படும் சிகிச்சையினால் ஏற்படும் பக்க விளைவுகள் தான் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

இதிலிருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் செல்களை துரிதமாக செயல்பட வைக்கிறது. அதோடு செல்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

இதயம் :

இதயம் :

இன்றைய வாழ்க்கை முறையினால் ஜங்க் ஃபுட் சாப்பிடுவது அதிகரித்து வருகிறது அதோடு உடல் உழைப்பு இல்லாததால் கொழுப்பு சேர்வதும் அதிகரித்து வருகிறது.

நம் உடலில் ஏற்படும் பலப் பிரச்சனைகளின் ஆரம்ப இடமாக அதிக கொழுப்புதான் இருக்கிறது.

அன்னாசிப்பழத்தில் இருக்கும் மினரல்ஸ்கள் நம் உடலில் உள்ள கொழுப்பினை கரைக்க பெரிதும் உதவுகிறது.இதனால் மாரடைப்பு வராமல் தவிர்க்க இயலும். அதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிப்பதால் பிற நோய்களிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

செரிமானம் :

செரிமானம் :

உணவு சரியாக செரித்தால் மட்டுமே அதிலிருக்கும் எல்லாச் சத்துக்களும் நமக்கு கிடைக்கும். நாம் சாப்பிடும் உணவு சரியாக ஜீரணமாகவில்லை என்றால் அது பல்வேறு உபாதைகளுக்கு ஆளாக்கிடும்.

அன்னாசிப்பழத்தில் அதிகப்படியாக இருக்கும் ப்ரோமெலின்,விட்டமின் சி மற்றும் ஃபைபர் செரிமானத்திற்கு பெரிதும் உதவுகின்றன.

ரத்த அழுத்தம் :

ரத்த அழுத்தம் :

ரத்த அழுத்தம் என்பது சீராக இருக்க வேண்டும் அது அதிகமானாலோ அல்லது குறைந்தாலோ பெரும் ஆபத்தை ஏற்படுத்திடும்.

அன்னாசிப்பழத்தில் இருக்கும் அதிகப்படியான பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவிலான சோடியம் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.

வயிற்று வலி :

வயிற்று வலி :

வயிற்றில் சில நேரங்களில் புழுக்கள் உருவாவது உண்டு. இதனால் வயிற்று வலி உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். அன்னாசிப்பழத்தில் ப்ரொமிலைன் என்ற என்சைம் இருப்பதால் இவை வயிற்றில் இருக்கும் புழுக்களை அழித்துவிடுகிறது. இதனால் வயிற்றுவலி பிரச்சனைகளிலிருந்து நீங்கள் தப்பிக்கலாம்.

கர்ப்பிணிகளுக்கு :

கர்ப்பிணிகளுக்கு :

கர்ப்பிணிப் பெண்கள், வாந்தி,மயக்கம் தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகளினால் அவதிப்படுவார்கள். அதனை தீர்க்க அன்னாசிப்பழச்சாறு குடிக்கலாம். இதிலிருக்கும் தாதுக்கள் கர்பிணிப்பெண்களுக்கு ஊட்டம் அளிக்கிறது.

தலைமுடி :

தலைமுடி :

முடி ஆரோக்கியமாக வளர்வதற்கு தேவையான அடிப்படைகளில் ஒன்று விட்டமின் சி. விட்டமின் சி நிறைந்திடுக்கும் அன்னாசிப்பழத்தை சாப்பிடுவதால் தலைமுடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிடுகிறது.

அதோடு அன்னாசிப்பழத்தில் எளிதில் கரையக்கூடிய விட்டமின் சத்து இருப்பதால் இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் தலைமுடி அதிகம் உதிராமல் நீளமாக வளர்ந்திடும்.

அதோடு தலையில் அரிப்பு இருந்தாலும் தொடர்ந்து அன்னாசிப்பழம் சாப்பிட்டு வர அரிப்பு குறைந்திடும். அன்னாசிப்பழத்தில் இருக்கும் என்சைம்கள் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிப்பதால் அடர்தியான கூந்தலுக்கு வழிவகுக்கும்.

சருமம் :

சருமம் :

சருமத்தை பொலிவாக காட்டவும், சருமத்தில் ஏற்படும் பருக்களை நீக்கவும் அன்னாசிப்பழம் முக்கியப் பங்காற்றுகிறது இதிலிருக்கும் கொலாஜன் சருமத்தை நிறமாற்றங்களிலிருந்து சரி செய்கிறது. அதோடு இதிலிருக்கும் அமினோ அமிலம் மற்றும் விட்டமின் சி சருமத்தின் திசுக்களை வலுவூட்டுகிறது.

இதனை சாப்பிடுவதோடு அன்னாசிப்பழத்தை அரைத்து அந்த பேஸ்ட்டை முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட்டு வர நல்ல பலன் கிடைத்திடும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. இதனால் உங்கள் சருமம் பொலிவுடன் காணப்படும்.

நகங்கள் :

நகங்கள் :

சிலருக்கு நகம் அடிக்கடி உடையும். இப்படி நகம் உடைவதற்கு முக்கியக் காரணம் உடலில் சத்துக்குறைபாடு ஏற்பட்டிருப்பதே. இதற்கு நீங்கள் சத்தான ஆகரங்களை எடுத்துக் கொள்ளவேண்டும். சத்தான ஆகாரங்களில் அன்னாசிப்பழமும் ஒன்று . அதோடு அன்னாசிப்பழத்தை வைத்து நகத்தை வலுவாக்கும் லோஷனையும் செய்திடலாம்.

ஒரு டேபிள் ஸ்பூன் அன்னாசிப்பழச்சாறு ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு ஒரு ஸ்பூன் முட்டையின் வெள்ளைக்கரு மூன்றையும் ஒன்றாக கலந்து நகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் பூசிக் கொள்ளுங்கள். முதல் நாள் இரவு பூசிக்கொண்ட பிறகு மறுநாள் காலையில் கழுவி விடலாம்.

பாதங்கள் :

பாதங்கள் :

பாதங்களில் பித்தவெடிப்பு அல்லது அலர்ஜி ஏற்ப்பட்டிருப்பவர்கள் நடப்பதற்கு கூட மிகவும் சிரமப்படுவார்கள் அவர்களுக்கு அன்னாசிப்பழம் சிறந்த மாற்றாக அமைந்திடும். இதனுடன் எந்த பொருளையும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.

அன்னாசிப்பழத்தை நறுக்கி அப்படியே பாதங்களில், தேய்த்தால் போதுமானது. ரத்தக்காயம் இருந்தால் அந்த இடத்தில் அன்னாசிப்பழத்தை தேய்க்க கூடாது.

உதடுகள் :

உதடுகள் :

அன்னாசிப்பழத்தை உதடுகளுக்கும் பயன்படுத்தலாம். அன்னாசிப்பழச்சாறுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் பூசி வந்தால் உதடுகளில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளை தீர்க்க முடியும்.

வெறும் அன்னாசிப்பழச்சாறும் மட்டும் கூட உதடுகளில் தேய்க்கலாம். உதடுகளில் தேய்த்து லேசாக மசாஜ் செய்து பத்து நிமிடத்தில் கழுவிவிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing Benefits of Pineapple

Amazing Benefits of Pineapple
Story first published: Wednesday, October 25, 2017, 10:05 [IST]