மழைக்காலத்தில் உங்கள் வீடுகளில் அவசியம் இருக்க வேண்டிய பொருள் இது தான்!

Posted By:
Subscribe to Boldsky

டிசம்பர் மாதம் வந்து விட்டாலே எல்லாருக்கும் பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டது. வருடம் தோறும் டிசம்பர் மாதம் என்றாலே எதாவதொரு இயற்கை சீற்றமோ அல்லது தமிழகத்தையே உலுக்கும் ஏதேனும் சம்பங்களோ நடந்து கொண்டிருக்கிறது.

சென்னை வெள்ளம், வர்தா புயல் தொடர்ந்து ஒகி புயல் என்று தமிழகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஓகி புயலின் தாக்கத்தல் தமிழகத்தில் எங்கும் மழை பொழிந்து கொண்டிருக்கிறது. வெள்ள அபாயம் கூட இருக்கும் இந்நேரத்தில் தொற்று நோய் பரவும் அபாயமும் அதிகமாக இருக்கிறது. வீட்டில் பவர் கட் ஆனால் என்ன செய்வது என்று நீங்கள் எச்சரிக்கையாக இருக்கும் அதே கவனம் உங்களுடைய உடலுக்கும் கொடுத்திடுங்கள்.

ஆம், இந்த மழையில் தான் பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகும் அதனால் பாக்டீரியாக்கள் அதிகரித்து நோய்த் தொற்று பரவும் அபாயமும் இருக்கிறது. ஏற்கனவே தற்போது தான் 'டெங்கு' பயத்திலிருந்து ஓய்ந்திருக்கும் சமயத்தில் அது மீண்டும் தலைதூக்க நாமே காரணமாக இருக்காமல் இருப்பது அவசியம்.

மழை காலத்தில் நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்க உங்கள் வீடுகளில் அவசியம் இருக்க வேண்டிய ஆண்ட்டி பயாட்டிக்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். ஆண்ட்டி பயாட்டிக் என்றதும் தனியாக வாங்க வேண்டிய மருந்துகள் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.

Amazing antibiotics which you must kept in rainy season

அது உங்கள் வீடுகளிலேயே இருக்கும். அதனை பயன்படுத்தமட்டும் செய்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூண்டு :

பூண்டு :

பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி குணங்களுக்காக நன்கு அறியப்படுவது தான் பூண்டு. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஈஸ்ட் மற்றும் புழு தொற்றுக்களைக் கட்டுப்படுத்த இது உதவிடும்.

தேன் :

தேன் :

இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.அதே போல தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.

மிளகு :

மிளகு :

மிளகில் மாங்கனீசியம், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்சத்து ஆகியவை அடங்கியுள்ளது. மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. அதாவது சரியான செரிமானம் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவைகளை நீக்குகிறது.

இஞ்சி :

இஞ்சி :

இஞ்சியை நாம் தினமும் எடுத்துக்கொள்வதால் ரத்த அணுக்கள் உறைந்து கட்டியாவது தடுக்கப்படுகிறது. இதனால், நம் உடலில் ரத்த ஓட்டம் சீராகிறது. ஜலதோஷம், சளித்தொல்லை மற்றும் தொண்டைக்கட்டு போன்றவற்றுக்கு, இஞ்சி டீ சாப்பிடுவது நல்லது.

மஞ்சள் பால் :

மஞ்சள் பால் :

மஞ்சள் பால், பாக்டீரியா நோய்த்தொற்றுகள் மற்றும் நச்சுயிரி சார்ந்த நோய்த்தொற்றுகளைத் தாக்கும் நுண்ணுயிர் ஆகும். இந்த பொருள் உடலை வெப்பப்படுத்தும் என்பதால் நுரையீரலின் சளித் தேக்கம் மற்றும் சைனஸ் பிரச்சனைக்கு விரைவான நிவாரணம் வழங்குகிறது.

அதுமட்டுமின்றி சுவாச அமைப்பு தொடர்பான நோய்களான ஆஸ்துமா மற்றும் மூச்சு குழாய் அழற்சி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாகவும் இருக்கிறது.

இலவங்கப்பட்டை :

இலவங்கப்பட்டை :

இலவங்கப் பட்டையுடன் சுக்கு, சோம்பு, கிராம்பு இவற்றில் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து 1 லிட்டர் நீர் விட்டு கொதிக்கவைத்து அது 250 மி.லி.யாக அதாவது நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து வடிகட்டி கஷாயம் போல் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்திவந்தால் இருமல், இரைப்பு மேலும் வயிற்றுவலி போன்றவை குணமாகும்.

வெங்காயம்:

வெங்காயம்:

ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு கிருமிகளை இது தடுக்கிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சுக் கிருமிகள் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.

கேரட் :

கேரட் :

கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது கேரட்.

பருப்பு வகைகள்:

பருப்பு வகைகள்:

பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

முட்டைக்கோஸ்:

முட்டைக்கோஸ்:

குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

சளி :

சளி :

பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு, காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால், குளிர்ச்சியான சூழ்நிலை சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும்; சளி மற்றும் இருமல் பிரச்னைகளால் அவதிப்படுவார்கள்.

இன்ஃப்ளூயன்சா வைரஸ் காரணமாகவும் சளி இருமல் வரும். இந்தப் பிரச்னைகள் வராமல் இருக்க, வெளி இடங்களில் சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் அருந்துவதையும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

அடிக்கடி ஆவி பிடிப்பது, மூச்சுப் பயிற்சியில்ஈடுபடுவதன் மூலம் சளி, இருமல் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.

நுரையீரல் தொந்தரவுகள் :

நுரையீரல் தொந்தரவுகள் :

மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் உலர்ந்த மற்றும் குளிர்ந்த காற்றை மாறி மாறி சுவாசிக்கும்போது, நுரையீரல் மற்றும் தொண்டைப் பகுதிகளில் எரிச்சல் ஏற்படும்.

இதனால், தொண்டைக் கரகரப்பு வரலாம், நெஞ்சுச்சளி கட்டிக்கொள்ளும். ஆஸ்துமா, நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுவிட மிகவும் சிரமமாக இருக்கும்.

நெற்றி மற்றும் கன்னங்களில் இருக்கும் சைனஸ் அறைகள், தொற்று காரணமாக பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். இதனால், சைனஸ் தலைவலி வரலாம்.

காலையில் படுக்கையில் இருந்து எழும்போது, பயங்கரமாக தும்மல் வரும். கன்னங்களில் வலி இருக்கும். நுரையீரலில் ஏற்படும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைத்தொற்று போன்றவற்றால், நிமோனியா காய்ச்சல் வரலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள், முதியவர்களுக்கு இந்த காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

கொசு :

கொசு :

நீர் நிலைகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் கட்டாயம் இருக்கும். அதுவும் மழைக்காலத்தில், எல்லா இடங்களிலும் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்திக்கு உதவுகின்றன. இதில், முக்கியமானது மலேரியா காய்ச்சலை உருவாக்கும் கொசு.

‘அனோபீலஸ்' என்ற பெண் கொசுதான் மலேரியா காய்ச்சலுக்கு மிக முக்கியக் காரணம். இந்தக் கொசு ஒருவரைக் கடித்து, மற்றொருவரைக் கடிக்கும்போது, அதன் எச்சில் வழியாக கிருமிகள் பரவி, மலேரியா காய்ச்சல் ஏற்படுகிறது. மலேரியா காய்ச்சலை ஏற்படுத்தும் ஒட்டுண்ணி, உடலுக்குள் சென்று, சாதகமான காலம் வரும் வரை காத்திருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததும் காய்ச்சல் வரும்.

டெங்கு :

டெங்கு :

மலேரியாவுக்கு அடுத்தபடியாக நாட்டையே பயமுறுத்தும் கொசு, டெங்குவைப் பரப்பும் ‘ஏடிஸ் எஜிப்டி'. இந்தக் கொசு, அசுத்தமான நீர் நிலைகளில் வாழாது.

எனவே, சாக்கடைகளில் இந்தக் கொசு உற்பத்தி ஆவது இல்லை. வீட்டைச் சுற்றி இருக்கும் தேங்காய்ச் சரடுகள், ஓடுகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றில் தேங்கும் மழைத் தண்ணீரில் இருந்துதான் இந்தக் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.

வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொண்டாலே, டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க முடியும்.

யெல்லோ ஃபீவர் :

யெல்லோ ஃபீவர் :

‘ப்ளேவி வைரஸ்' என்ற வைரஸ் காரணமாக ஏற்படும் நோய், ‘யெல்லோ ஃபீவர்'. இதுவும் ஏடிஸ் எஜிப்டி கொசு மூலம்தான் பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, தசைகள் வலி, வாந்தி எடுக்கும்போது ரத்தம் வருவது போன்றவை இந்தக் காய்ச்சலின் அறிகுறிகள்.

சிக்குன் குனியா :

சிக்குன் குனியா :

சிக்குன்குனியா காய்ச்சல் வருவதற்கும் ஏடிஸ் ஏஜிப்டி வகை கொசுதான் காரணமாக இருக்கிறது. சிக்குன்குனியா வந்தால், காய்ச்சல் மற்றும் உடலில் உள்ள மூட்டு இணைப்புகளில் கடுமையான வலி போன்றவை ஏற்படும்.

எலியின் சிறுநீர் வழியாக எலிக்காய்ச்சல் பரவுகிறது. இந்தக் கிருமித்தொற்று உள்ள சிறுநீர், மழை நீரில் கலக்கும்போது, அது மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

இதனால், வெளியே சென்று வீடு திரும்பியதும், வெதுவெதுப்பான நீரில் கால்களை நன்கு கழுவ வேண்டும். வீட்டைச் சுற்றி நடப்பதாக இருந்தாலும், காலணி அணியாமல் செல்லக் கூடாது.

மெட்ராஸ் ஐ :

மெட்ராஸ் ஐ :

‘மெட்ராஸ் ஐ' என அழைக்கப்படும் கண்நோய் மழை சீசனில் அதிகமாகப் பரவும். கண்ணுக்குள் இருக்கும் ‘கஞ்சக்டைவா' எனும் பகுதியை அடினோ வைரஸ் தாக்குவதால் கண் சிவந்துவிடும். இதனால், சில நேரங்களில் கண்ணீர் கசிந்துகொண்டே இருக்கும். அடினோ வைரஸ் எளிதில் மற்றவர்களுக்கும் பரவும்.

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு

மழைக்காலத்தில் தண்ணீரில் கழிவுநீர் கலக்க வாய்ப்பு அதிகம். இதனால், காலரா போன்ற வயிற்றுப் போக்கைப் பரப்பும் கிருமிகள் இந்தப் பருவத்தில் வேகமாகப் பரவும்.

சுகாதாரம் அற்ற முறையில் தயாரித்து விற்கப்படும் உணவுப் பொருட்களை உண்பதன் மூலமும், ஈ மொய்த்த பொருட்களைச் சாப்பிடுவதன் மூலமும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு இந்தப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தெருவோர உணவுகள் மட்டும் இன்றி வீட்டிலும் சுத்தமான உணவு, காய்ச்சி வடிகட்டிய சுத்தமான நீரைப் பருகவில்லை எனில், டைபாய்டு காய்ச்சல் வரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing antibiotics which you must kept in rainy season

Amazing antibiotics which you must kept in rainy season
Story first published: Friday, December 1, 2017, 16:08 [IST]
Subscribe Newsletter