குளிர்காலத்தில் ஏன் பெருங்காயத்தை உபயோகிக்க வேண்டும் ?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

பெருங்காயம் நம் இந்தியாவின் பாரம்பரிய உணவு பொருள்களில் ஒன்று. இதை உபயோகப்படுத்தாத கார உணவுகள் மிகக் குறைவு. பழமையான உணவுப் பொருளாக இருந்தாலும், இதன் பூர்வீகம் ஈரான் மற்றும் ஆஃப்கானிஸ்தான். அதன் பின்னரே வணிக சந்தையின் மூலமாக இந்தியா வந்தடைந்தது.

இது ரெசின் போன்ற பசை உள்ளது, செடியின் தண்டு மற்றும் வேரிலிருந்து பெறப்படுகிறது. இதனை காயவைத்தே உபயோகப்படுத்துகிறோம். இதனை அரைக்க முடியாது. பொடி செய்து பயன்படுத்தலாம்.

Why should we add Hing to the food during rainy season

இப்போது கடைகளில் விற்கும்பெருங்காயங்களில் 30 % மட்டுமே உண்மையான பெருங்காயம் உள்ளது. மீதி உள்ளவை அரிசி மாவு, மற்றும் மற்ற பசைகளை சேர்த்து விற்கின்றனர்.

பெருங்காயத்தை நாம் சமையலின் வாசனைக்கான பயன்படுத்துகிறோம். சமையலை ஆரம்பிக்கும்போதும், முடிக்கும்போதும் இதனை உபயோகப்படுத்துகிறோம். வாசனைக்காக மட்டுமின்றி, உணவில் கலக்கபட்ட மற்ற மசாலா வாசனைகளை சமன் படுத்துவதற்காகவும் இதனை சேர்க்கிறோம்.

Why should we add Hing to the food during rainy season

பெருங்காயத்தின் பயன்கள் :

ஆயுர்வேதத்தில் காற்று மற்றும் நீரினால் உண்டாகும் வாத மற்றும் கப தோஷங்களை சரிபடுத்துவதற்காக பெருங்காயத்தை உபயோகிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக மழைக்காலங்களில் வயிற்றில் உண்டாகும் விஷ கிருமிகளை அழிக்கிறது. வயிற்று சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்துகிறது.

Why should we add Hing to the food during rainy season

குழந்தைகளுக்கு வாய்வினால் உண்டாகும் வயிற்று வலிக்கு பெருங்காயத்தை விட சிறந்த மருந்து எதுவுமில்லை என ஆயுர்வேதம் கூறுகிறது.

வெதுவெதுப்பான சுடு நீரில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தை போட்டு குடித்தால் வாய்வு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் குணமாகிவிடும். மலக்குடல் மற்றும் உணவுகுடலில் வரும் புற்று நோய்களை வரவிடாமல் தடுக்கும். ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். நச்சுக்களை வெளியேற்றிவிடும்.

Why should we add Hing to the food during rainy season

ஸ்வைன் ஃப்ளூ விற்கு மருந்து :

இது வாய்வு பிரச்சனைகளை நீக்கினாலும். இதன் குணங்கள் வைரஸ் காய்ச்சலுக்கு மருந்தாக பயன்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

1912 ஆண்டு வரை இது ஆஸ்துமா மற்றும் ஜலதோஷத்திற்கு மருந்தாக பயன்பட்டது. ஆனால் சமீப ஆய்வான 2009 ஆண்டில்தான் இது கொடிய வைரஸ் கிருமிகளையும் அழிக்க வல்லது என தெரிய வந்துள்ளது.

Why should we add Hing to the food during rainy season

ஆமாம் பரவலாக மழைக்காலத்தில் வரும் H1N1 ஸ்வைன் ஃப்ளூ காய்ச்சலை குணப்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெருங்காயத்திலுள்ள சில வேதிபொருட்கள் வைரஸை எதிர்க்கும் திறன் கொண்டுள்ளது.

ஆகவே தினமும் பெருங்காயத்தை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பொடி பெருங்காயத்தை விட கட்டிபெருங்காயம் அதிக கலப்படம் அற்றது. அதனை உபயோகிப்பது நல்லது.

English summary

Why should we add Hing to the food during rainy season

Why should we add Hing to the food during rainy season
Story first published: Wednesday, August 3, 2016, 15:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter