Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
24x7 கம்ப்யூட்டர் வேலையா? நீங்க தினமும் சாப்பாட்டுல தயிர சேர்த்துக்கனும்..
தினமும் தயிரை உணவுமுறையில் சேர்த்துக் கொள்வதால் நிறைய ஆரோக்கிய பயன்கள் நமது உடலுக்கு கிடைக்கின்றன. முக்கியமாக கணினியின் முன்பே 24x7 மணிநேரமும் அமர்ந்து வேலை செய்யும் ஐ.டி வாசிகள் கட்டாயம் தயிரை டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இரவு நேரத்தில் தயிரை சாப்பிடலாமா? கூடாதா?
உட்கார்ந்தே வேலை செய்யும் முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் நாம், நமது உடல்நலனை பற்றி கவலைப்படுவதே இல்லை. உட்கார்ந்தே வேலை செய்வதால் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும், இரத்த ஓட்டம் சீர்கெடும், இவற்றால் ஆண்மை குறைபாடு ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன...

இரத்த அழுத்தம் குறையும்
உங்களுக்கு இரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது எனில், நீங்கள் உங்கள் உணவுமுறையில் தினமும் தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். தயிர் உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பது மட்டுமின்றி, சிறுநீரகம் மற்றும் இதய நலனையும் ஊக்குவிக்கிறது.

மனநிலை மேலோங்கும்
தயிரை சேர்த்துக் கொள்வதால் மனநிலை மற்றும் கவனம் குவித்தல் போன்றவை மேலோங்கும். தயிரில் இருக்கும் நல்ல ஆரோக்கிய பாக்டீரியாக்கள் தான் இதற்கு வழி வகுக்கிறது. இதனால் ஞாபக திறனும் கூட அதிகரிக்கும்.

தட்டையான வயிறு
தினசரி தயிரை உணவில் சேர்த்துக் கொள்வதால், செரிமானம் சீராகிறது, வாயுத்தொல்லை குறையும், கொழுப்பை கரைக்க உதவும். இவற்றால் உங்கள் தொப்பையை குறைத்து தட்டையான வயிறு பெற தயிர் உதவுகிறது. மேலும் தயிர் மலம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வளிக்கிறது.

இடுப்பின் அளவை குறைக்க
கொழுப்பை கரைத்து வளர்சிதை மாற்றத்தை சீராக்கி இடுப்பின் அளவை குறைக்கவும் தயிர் பயனளிக்கிறது. மேலும் தயிர் உங்கள் உடல் வெப்பத்தை குறைக்கவும் வெகுவாக உதவுகிறது.

பசியை சரியாக்கும்
சிலருக்கு அடிக்கடி பசிக்கும், சிலருக்கு எப்போதுமே பசிக்காது. இந்த பிரச்சனைக்கு தீர்வுக் காண விரும்புவோர், அவர்களது தினசரி டயட்டில் தயிரை சேர்த்துக் கொண்டால் போதுமானது. அதிகப்படியான பசியை குறைக்கும் திறன் தயிருக்கு இருக்கிறது. இதனால் உங்கள் உடல் எடையையும் கட்டுக்குள் வைக்க முடியும்.

மகிழ்ச்சி
தயிரில் வைட்டமின் மற்றும் மினரல்கள் இருக்கின்றன. தயிரில் இருக்கும் வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்திற்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்து. இது பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

என்றென்றும் புன்னகை
மேலும் தயிரை தினமும் டயட்டில் சேர்த்துக் கொள்வதால் பல் சொத்தை ஏற்படுவதை தவிர்க்க முடியும். மேலும், தயிர் பல் மற்றும் எலும்புகளின் வலுவையும் கூட்டுகிறது.



Click it and Unblock the Notifications