For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆப்பிளைப் பற்றி நீங்கள் அறியாத 5 விஷயங்கள் !!

ஆப்பிள் சாப்பிடுவதால் பல நன்மைகள் உங்கலுக்கு தெரிந்திருக்கும். ஆனால் நீங்கள் அறியாத விஷயங்களும் ஆப்பிளைப் பற்றி உண்டு. அந்த விஷயங்களைப் பற்றி சொல்லப்போவதுதான் இந்த கட்டுரை.

|

ஆப்பிளை சாப்பிடுவதால் நோயிலிருந்து காத்திடலாம் என்று காலங்காலமான நீங்கள் அறியப்பட்டு வருகிறீர்கள். இதிலொன்றும் புதிதில்லை.

கி.மு விலிருந்தே ஆப்பிள் உலகம் முழுவதும் பிரபலமாகியது. அதுபோல் ஆப்பிளை பதப்படுத்தி அதிலிருந்து பெறப்பட்ட வினிகரும் பல சத்துக்கஆளையும் நன்மைகளையும் தருகிறது.

Unknown facts about apple

ஆப்பிளைப் பற்றி உங்களுக்கு பல விஷயங்கள் தெரிந்தாலும் ,நமக்கு அதனைப் பற்றி தெரியாத விஷயங்களும் நிறையய உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அலர்ஜியை நிறுத்தும் :

அலர்ஜியை நிறுத்தும் :

ஹிஸ்டமின் என்ற வேதிப் பொருள்தான் உடலில் எதிர்ப்பு வினையை காண்பிக்கும்.இதன் காரணமாகத்தான் உடலில் அலர்ஜி உண்டாகிறது.

இதனை கட்டுப்படுத்தும் க்வெர்செடின் என்ற பொருள் ஆப்பிளில் நிறைய உள்ளது. இதனால் உடலில் உண்டாகும் அதிகப்படியான அலர்ஜியை தடுக்கலாம்.

ஒற்றை தலைவலி :

ஒற்றை தலைவலி :

பச்சை ஆப்பிளை நுகர்வதால் ஒற்றை தலைவலி குணமாகும் என ஒரு ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதோடு அவை முழங்கால் வலியையும் குணப்படுத்துகின்றனவாம். ஆகவே தலைவலி வரும்போது க்ரீன் ஆப்பிளை துண்டாக்கி நுகருங்கள்.

ஆப்பிள் லெதர் :

ஆப்பிள் லெதர் :

ஆப்பிள் லெதர் என்பது தோலினால் செய்யப்பட்ட ஜாக்கெட் அல்ல. இது ஒரு வகையான நொறுக்குத் தீனி. ஆப்பிளினின் தோலில் செய்யப்படும் மொறுமொருப்பான நொறுக்குத் தீனியாகும். இது சத்துக்கள் நிறைந்த , உடலுக்கு கெடுகளைத் தராத நொறுக்குத் தீனி.

 பழங்கள் காய்களாக இருக்கிறதா?

பழங்கள் காய்களாக இருக்கிறதா?

பழங்கள் காயாக இருந்தால் அவற்றை எளிதில் பழுக்க வைக்க ஆப்பிளை பயன்படுத்தலாம் , காயான பழங்களோடு , பழுத்த ஆப்பிளையும் சேர்த்து ஒரு பேப்பரில் சுற்றி வையுங்கள். ஒரே நாளில் பழுத்துவிடும்.

 உங்கள் தலைமுடிக்கு :

உங்கள் தலைமுடிக்கு :

சிறிது ஆப்பிள் சைடர் வினிகரை நீரில் கலந்து தலை முடியை அலசினால் கூந்தலில் தங்கியிருக்கும் நச்சு வாய்ந்த ஷாம்புவின் ரசாயனங்கள் அகன்றுவிடும் என்பது தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unknown facts about apple

5 things you did not know that you could do with an apple
Story first published: Tuesday, December 6, 2016, 14:17 [IST]
Desktop Bottom Promotion