ஆளையே முடக்கும் மல்டிபிள் ஸ்க்லெரோஸிஸ் நோய் பற்றி 7 உண்மைகள் !!

Written By:
Subscribe to Boldsky

உலகளவில் சுமார் 2 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இது ஒரு தனிச்சையான நோய் எதிர்ப்பு மண்டல நோயாகும்.

அதாவது ஏதாவது கிருமிகள் வந்தால் எதிர்ப்பு காட்ட வேண்டிய நோய் எதிர்ப்பு மண்டலம் , தன் உறுப்புகளையே அவ்வாறு எதிரிகளாக பாவித்து அவற்றை அழிக்கும்.

Things you must know about multiple sclerosis

அத்தகைய நோயான இது தமிழில் தண்டு வர மரப்பு நோய் எனப்படுகிறது. ஆங்கிலத்தில் சுருக்கமாக எம்.எஸ் என்று குறிப்படுவதுண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறிகள் :

அறிகுறிகள் :

அறிகுறிகள் இதுதான் என குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஏனென்றால் மனிதனுக்கு மனிதன் அறிகுறிகள் மாறுபடும். இந்த நோய் உண்டானால் பல உறுப்புகள் பாதிக்கப்படுகிறது. இதனால் பல்வேறு தொந்தரவுகள் உண்டாகும்.

நாள்பட்ட நோய் :

நாள்பட்ட நோய் :

இது நாள்பட்ட நோயாகும். மூளை மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. கண் பார்வை மங்குதல், இரண்டிரண்டாக தெரிதல் சிலருக்கு மன நிலை கூட பாதிக்கப்படும்.

இது எல்லாருக்கும் ஒரே மாதிரியான பிரச்சனைகளை தருவதில்லை. மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது.

கண்டறிதல் :

கண்டறிதல் :

இந்த நோயை கண்டறிவது கடினம்தான். அடிக்கடி தலை சுற்றல், மயங்கி கீழே விழுவது ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகள். அதன் பின் தொடர் மருத்துவ பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம்

சிகிச்சை பலனளிக்கும் :

சிகிச்சை பலனளிக்கும் :

இந்த நோய்க்கு சிகிச்சை உண்டு. ஆனால் முற்றிலும் குண்மாகாது. நோயின் தீவிரத்தை குறைத்து, உறுப்புகளின் ஆற்றலை சிறிது அதிகரிக்கமுடியும் என்பது ஆறுதலான விஷயம்.

மல்டிபிள் ஸ்கெலரோஸிஸ் வகைகள்

மல்டிபிள் ஸ்கெலரோஸிஸ் வகைகள்

இந்த நோயில் பலவகை உண்டு. இதில் குறிப்பாக ரிலாப்ஸிங் ரெமிட்டிங் என்ற வகை அதிக மக்களை தாக்கும் நோய் என்று சொல்கிறார்கள். 80 சதவீத மக்கள் இந்த வகை மல்டிபிள் ஸ்கெலெரோஸிஸ் நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

 காரணங்கள் மற்றும் வயது :

காரணங்கள் மற்றும் வயது :

இது 15- 60 வயது வரை எவரையும் தாக்கும். இதற்கு மரபு, பருவம் என காரணங்கள் பலவாரு கூறப்படுகிறது. தைராய்டு மற்றும் சர்க்கரை வியாதியால் பாதிப்படைவர்களுக்கு அதிகம் தாக்கும் அபாயம் உள்ளது.

விட்டமின் டி மற்றும் எம். எஸ் :

விட்டமின் டி மற்றும் எம். எஸ் :

இந்த நோய்க்கும் விட்டமின் டி குறைப்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என கூறப்படுகிறது. விட்டமின் டி அதிகம் எடுத்துக் கொண்டால் எம். எஸ் போன்ற முடக்கும் நோய்கள் வராமல் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things you must know about multiple sclerosis

multiple Sclerosis is an auto immune disorder. it affects the brain and central nervous system. it is a chronic disabling disorder. it can not be cured. but can extend the functions of organs.
Story first published: Tuesday, October 18, 2016, 18:10 [IST]
Subscribe Newsletter