டீன் ஏஜில் உடல் பருமனா? பின் வரும் நாட்களில் கல்லீரலுக்கு ஆபத்து!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

சிறு வயதில் உடல் பருமனிருந்தால், பின்வரும் காலங்களில் இதய நோய் வரலாம் என்று ஒரு முந்தைய ஆய்வு சொன்னது. இப்போது புற்று நோய் போன்ற ஆபத்தான் கல்லீரல் நோய்கள் வரலாம் என எச்சரிக்கின்றது இரு ஸ்வீடன் ஆய்வு.

Over weight at higher risk of liver diseases,

கடந்த 40 வருடங்களாக சுமார் 45,000 ஸ்வீடன் மக்களிடம் நடந்து முடிந்த ஆராய்ச்சியில், அவர்களின் பருவ வயதில் தொடங்கி, இப்போது வரை ஆய்வு செய்ததில், உடல் பருமான பதின்ம வயதினர் பின் வந்த காலங்களில் தீவிர கல்லீரல் நோய்களினாலும். கல்லீரல் புற்று நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கின்றது.

அதோடு, கொழுப்பு கல்லீரல் நோய்களாலும், ஹெபடைடிஸ் பி மற்றும் ஏ நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஸ்வீடன் என்று இல்லாமல் உலக அளவில் உடல் பருமனாக இருப்பவர்களுக்கும் பொருந்தும் என்று கூறுகிறார்கள் இந்த ஆய்வை நடத்திய ஆராய்ச்சியாளர்கள்.

Over weight at higher risk of liver diseases,

40 வருடங்களுக்கு முன் இருந்ததை விட இப்போது உடல் பருமனாக இருப்பவர்களின் எண்ணிக்கை இரு மடங்காகிவிட்டது. இதனால் கல்லீரல் தொடர்பான கொடிய நோய்கள் பல மடங்கு பெருக வாய்ப்புள்ளது என்று கவலையாக தெரிவித்தார் ஆராய்ச்சியாளர் ஹேக்ஸ்ட்ரோம்.

Over weight at higher risk of liver diseases,

மது மற்றும் புகையிலை காரணமாக வரும் கல்லீரல் நோய்களைப் போலவே, சமமாக உடல் பருமனாலும், கல்லீரல் நோய்கள் வரும் என்று ஹெபடாலஜி என்னும் மருத்துவ இதழ் எச்சரிக்கின்றது.

English summary

Over weight at higher risk of liver diseases,

Over weight at higher risk of liver diseases,