For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவராத்திரியில் உடல் உபாதைகளை சமாளிக்க குடிக்க வேண்டிய பானங்கள்!!

|

நவராத்திரி என்றாலே கொலு, கோவில் , வீட்டில் தினந்தோறும் பிரசாதம் செய்வது என வேலைகள் பெண்களுக்கு இரு மடங்காகும்.

அதோடு அக்கம்பக்கம் வீட்டிற்கு சென்று , விசேஷத்திற்கு அழைத்து, வந்தவர்களை உபசரித்து என மாறி மாறி பயங்கர பிஸியில் பெண்களும் குழந்தைகளும் இருப்பார்கள்.

நவராத்திரி கல்கத்தாவிலும் மிகவும் விசேஷம். ஒன்பது நாளும் கொண்டாட்டமாகவே இருக்கும். உறவினர்கள் ஒன்று கூடுவது,. பலப்பல உணவுகளை சாப்பிடுவது. விடியும் வரை கொண்டாட்டமாக இருப்பது என மகிழ்ச்சியாய் இந்த விசேஷங்களை அனுபவிப்பார்கள்.

அவர்கள் இந்த நவராத்திரியில் பல பானங்களை தயாரித்து அவற்றை எல்லாருக்கும் பகிர்ந்து குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இது இந்தியர்களில் கலாச்சாரத்தை கூறும் பண்டிகைகளில் ஒன்று.

இந்த மாதிரியான சமயங்களில் உடல் அசதி ஒருபக்கம், குளிர் மழை என சேர்ந்து உடலில் சோர்வையும், நோய்களையும் தந்து விடும். இந்த விசேஷமான நவராத்திரியில் எப்படி உடல் உபாதை களை சமாளிக்கலாம் என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 நீர் அருந்துங்கள் :

நீர் அருந்துங்கள் :

நிறைய நீர் அருந்துங்கள். ஏனெனில் ஓடியாடி செய்யும் வேலைகளால் நிறைய நீரிழப்பு ஏற்படும். எனவே அவ்வப்போது நீர் குடிக்க மறந்துவிடாதீர்கள்.

 கரும்பு சாறு :

கரும்பு சாறு :

இந்த சமயத்தில் எனர்ஜி குறைந்திருக்கும். எனவே கரும்புச் சாறு குடியுங்கள். இதனால் உடலுக்கு தேவையான குளுகோஸ் பெற்று உடனடி சக்தியை பெறுவீர்கள்.

இள நீர் :

இள நீர் :

உடல் சோர்வை போக்க இள நீர் அவசியம் குடியுங்கள். உங்கள் உடலிற்கு தேவையான மினரல் சத்துக்களை பெறுவீர்கள்.

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை சாறு :

மழை காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்க விட்டமின் சி அதிகம் தேவை. எனவே எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது மிகவும் நலது. நோய் எதிர்ப்பு சக்தி கூடு தெம்பு கிடைக்கும்.

இஞ்சி தேநீர் :

இஞ்சி தேநீர் :

இஞ்சி தேநீர் உடனடி சத்தினையும் புத்துணர்வையும் தரும். அதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் தூண்டுகிறது. ஆகவே இஞ்சி டீயை குடிக்கலாம்.

லஸ்ஸி :

லஸ்ஸி :

பண்டிகையின்போது பலபேர் வீட்டுக்கு சென்று பலதரப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டியது வரும்.

லஸ்ஸி குடிப்பதால் பண்டிகை காலங்களில் ஏற்படும் உங்கள் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தடுக்கும். இரைப்பையில் நல்ல பேக்டீரியாக்கள் உற்பத்தி அதிகமாகும். இதனால் அஜீரண பிரச்சனைகள் ஓடிவிடும்.

மோர் :

மோர் :

லஸ்ஸியியை போல் இன்னொரு சத்துக்கல் நிறைந்தது மோர். எளிமையான பானம். ஜீரண சக்தியை அதிகரிக்கும். தெம்பு தரும். கால்சியம் நிறைந்தது.

 சர்பத் :

சர்பத் :

மிகவும் சோர்வு தலைகாட்டும் நேரத்தில் சர்பத் குடிப்பது நல்லது. இது பால் மற்றும் பழங்களால் செய்யப்படுபவை. இதனை கடைகளில் செயற்கை இனிப்புகளை போட்டு செய்வார்கள். ஆகவே கடைகளில் செய்யாமல் வீட்டிலேயே செய்து குடிக்கலாம்.

பழச் சாறுகள் :

பழச் சாறுகள் :

பண்டிகை காலங்கலில் உடலில் போதிய சத்துக்கள் இருக்காது. நேரம் காலமில்லாத உழைப்பால் சத்துக்கள் குறைந்திருக்கும். இந்த சமயங்களில் பழச் சாறுகள் கட்டாயம் குடியுங்கள்.

பானகம் :

பானகம் :

கல்கத்தாவில் இந்த சமயத்தில் புளியினால் செய்த பானத்தை அனைவருக்கும் தருவார்கள். இவற்றின் சுவை வாயில் உமிழ் நீரை சுரக்கச் செய்யும்.

சூப் :

சூப் :

சூப் குடிப்பதால் உடல் புத்துணர்வும் தெம்பும் தரும். அதோடு சோர்வினால் வரும் மன அசதியை போக்க சூப் குடித்துப் பாருங்களேன். புது உற்சாகம் கிடைக்கும்.

தர்பூசணி வெள்ளரிக்காய் :

தர்பூசணி வெள்ளரிக்காய் :

தர்பூசணி அல்லது வெள்ளரிக்காயை பருகுங்கள். காய்ச்சல், ஜலதோஷம் வராமல் தடுக்கப்படும். பொதுவாகவே குளிர்காலங்களில் வெள்ளரிக்காய் நீரிழப்பை தடுக்கும்.

 பனீர் பானம் :

பனீர் பானம் :

வீட்டில் செய்யப்படும் பனீர் வடிகட்டிய பின் மிகுந்த நீரை பழச் சாறுகளில் கலந்து பானம் தயார் செய்வார்கள். இது உடலுக்கு கால்சியம், எலும்புகளுக்கு பலத்தை தரும்.

 சாக்லேட் மில்க் :

சாக்லேட் மில்க் :

சாக்லேட் மில்க் மிகுந்த சுவை நிறைந்ததாகவும், உடனடி எனர்ஜியை தருவதாகவும் இருக்கும். இது போன்ற பானங்களிய கல்கத்தாவில் தயாரித்து சுவைத்து மகிழ்வார்கள்.

பாதாம் பால் :

பாதாம் பால் :

பாதாம் பால் அதிக மினரல் மற்றும் விட்டமின்களை பெற்றுள்ளது. தசைகளில் உண்டாகும் வலியை போக்கி, புத்துணர்வோடு இருக்கச் செய்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Navarathiri special Drinks to avoid health problems

Drink these health drinks to stay away from health problems during navratri time
Story first published: Saturday, September 24, 2016, 9:38 [IST]
Desktop Bottom Promotion