நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டிய இரத்தம் சார்ந்த பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளும்!

Posted By:
Subscribe to Boldsky

நமது உடலில் நாம் மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது எது என்றால், கண்ணை மட்டுமல்ல காது, மூக்கை கூட மூடிக்கொண்டு கூறலாம், அது இரத்தம் தான் என. ஆம், இரத்தம் சுத்தமாக இல்லையெனில், நமது உடலில் இருக்கும் அனைத்து பாகங்களின் செயலாற்றலும் குறைய துவங்கும்.

எந்த இரத்த வகையினர் எம்மாதிரியான உடற்பயிற்சியை மேற்கொள்வது நல்லது எனத் தெரியுமா?

மேலும், இரத்த ஓட்டம் சீராக இருந்தால் தான், தாம்பத்தியம் கூட சீராக இருக்கும். எனவே, இரத்தம் என்பது நாம் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும். இரத்தம் சுத்தமாக இல்லையெனில், அடிக்கடி உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, சுவாசக் கோளாறுகள் போன்றவை ஏற்படும்.

உடல் பருமனா? கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த இந்த ஜூஸ் குடிங்க!

இனி, இயற்கையான முறையில் இரத்தம் சார்ந்த பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வுக் காண்பது என பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 இலந்தைபழம்

இலந்தைபழம்

பசியை தூண்டிவிடும் சக்தி வாய்ந்த பழம் இலந்தைபழம். இப்பழம் இரத்தத்தை சுத்தம் செய்து, உடற்சக்தி அதிகரித்து சுறுசுறுப்பாக இயங்க பயனளிக்கிறது.

 இஞ்சி மற்றும் தேன்

இஞ்சி மற்றும் தேன்

உங்கள் உடலில் இரத்தம் சுத்தமாக இல்லாமல் இருந்தால், உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, சுவாசக் கோளாறுகள் போன்றவை ஏற்படும். இதை தவிர்க்க, இஞ்சி சாற்றை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தை சுத்தம் செய்ய முடியும்.

 இரத்த குழாய் சீராக

இரத்த குழாய் சீராக

செம்பருத்தி பூவை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், இரத்த குழாய்களில் உண்டாகியிருக்கும் அடைப்புகள் நீங்கும். மேலும், இரத்தம் விருத்தியாகும்.

 மலத்துடன் இரத்தம் கசிதல்

மலத்துடன் இரத்தம் கசிதல்

மலம் கழிக்கும் போது இரத்தம் கசிதல் ஏற்பட்டால், மாதுளம் பூவை இடித்து அதை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

 பித்தம் குறைய

பித்தம் குறைய

இரத்தத்தில் பித்தம் குறைய ஆரமரக்குச்சியை துண்டுகளாக வெட்டி காய்ச்சி வடிகட்டி அதை தேனில் கலந்து பருகி வந்தால், விரைவாக குணமடையலாம்.

தூதுவளை

தூதுவளை

தூதுவளை கீரையை பூண்டுடன் சேர்த்து சமைத்து உண்டு வந்தால், இரத்த ஓட்டம் சீராகும்.

 இரத்த குழாய் அடைப்பு

இரத்த குழாய் அடைப்பு

தயிரை உங்கள் அன்றாட உணவு முறையில் சேர்த்து உண்டுவந்தால் இரத்த அடைப்புகள் உண்டாகாமல் தடுக்க முடியும்.

 கொழுப்பை குறைக்க

கொழுப்பை குறைக்க

இரத்தத்தில் சேரரும் அதிகப்படியான கொழுப்பை குறைக்க, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் போன்ற உணவுகளை அரைத்து உணவுடன் சேர்த்து உண்டு வந்தாலே போதுமானது.

 நன்னாரி வேர்

நன்னாரி வேர்

இரத்த கோளாறுகளில் இருந்து தீர்வுக் காண, நன்னாரி வேரை பொடியாக்கி சாறெடுத்து, அதை பாலில் கலந்து குடித்து வந்தால் போதுமானது.

 விளாம்பழம்

விளாம்பழம்

இரத்தத்தில் இருக்கும் கிருமிகளை போக்க அவ்வப்போது விளாம்பழம் சாப்பிட்டு வர வேண்டும். இது இரத்தத்தை சுத்திகரிப்பு செய்ய பயனளிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Natural Ways To Get Rid Off From Blood Related Health Problems

Natural Ways To Get Rid Off From Blood Related Health Problems, read here in Tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter