அடிக்கடி உடம்பு சரியில்லாம போகுதா? இந்த இயற்கை உணவுகளை சாப்பிட்டு பாருங்களேன்..

By: Srinivasan P M
Subscribe to Boldsky

உடல்நலக் குறைபாடுகள் அது சிறியதோ அல்லது பெரியதோ வாழும் உயிர்களுக்கு ஒரு பெரிய தடையாக குறிப்பாக மனிதர்களுக்கு அவர்களின் பல்வேறு தினசரி வேலைகளுக்கு நடுவில் இது பெரும் தடையாக இருக்கும்.

நீங்கள் சிறிய குழந்தையாக இருக்கும்போது, மாணவராக, பணிபுரிபவராக, மனையாளாக என பல்வேறு நிலைகளில் இருக்கையில் நோய்வாய்ப்படுவது அனைவரையுமே பாதிக்கும்.

Natural Foods Which Helps You To Avoid Falling Sick

நோய்களுக்கு மனிதர்கள் ஒன்றும் புதிதல்ல. உலகில் உள்ள எண்ணிலடங்கா நோய்களுள் எந்த நோயும் எந்த நேரமும் நம்மை எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் தாக்கக் கூடும்.

ஜுரம் சளி போன்றவை சிறிய மற்றும் குணப்படுத்தக் கூடிய நோய்கள் இருந்தாலும் புற்றுநோய் போன்ற கொடும் நோய்களும் இருக்கவே செய்கின்றன.

நோயற்று இருக்க முக்கியமானது ஆரோக்கியமான மற்றும் வலிமையான நோயெதிர்ப்பு சக்தி. உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நோயின் காரணிகளை எதிர்க்கும் திறன் கொண்டிருந்தால், நீங்கள் ஆரோக்கியத்துடன் திகழ்வீர்கள்.

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் உணவுகள் என்ன என்பதை அறிய மேற்கொண்டு படியுங்கள்.

1. சிக்கன் சூப்

புரோட்டீன் மற்றும் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு கப் சிக்கன் சூப் உங்கள் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்த ஏன் காய்ச்சலை குணப்படுத்தவும் கூட ஒரு சிறந்த இயற்கை உணவு.

2. ஆரஞ்சு

உங்களுக்கு நோய் வராமல் இருக்க வேண்டுமென்றால், தினமும் ஆரஞ்சு அல்லது அதன் சாற்றை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள். இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

3. காளான்

வைட்டமின் பி, ரைபோஃப்ளேவின் மற்றும் நையாசின் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்த காளான்கள் ஒரு உடலுக்கு ஆரோக்கியமான, நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சூழலை உருவாக்கி பல நோய்களை எதிர்த்துப் போராடச் செய்கிறது.

4. தயிர்

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் தயிருக்கு முக்கிய இடம் உண்டு. இது நொதிக்கப்படுவதால், உயிர்சத்துக்களும் வைட்டமின் சத்துக்களும் நிறைந்து ஆரோக்கியம் செறிந்து காணப்படுகிறது.

5. குடை மிளகாய் (காப்ஸிகம்)

குடைமிளகாய் குறிப்பாக சிவப்பு நிற மிளகாய், வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. இதில் உள்ள அதிக நீர்ச்சத்தும் சேர்ந்து இந்த காய்கறியை சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியளித்து நீரிழப்பையும் தவிர்க்க உதவுகிறது.

6. ப்ரோக்கலி

நோய் எதிர்ப்பில் உதவும் முக்கிய உணவுகளில் ஒன்றான ப்ரோக்கோலி வைட்டமின் சி, ஏ, மற்றும் இ மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் ஆகியவை நிறைந்து உங்கள் நோய் எதிர்ப்பு மேம்பட உதவுகிறது

7. பூண்டு

பூண்டில் உள்ள அல்லிசின் எனப்படும் உட்பொருள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். எனவே பூண்டு நோய்களை எதிர்ப்பதில் ஒரு சிறந்த உணவு.

English summary

Natural Foods Which Helps You To Avoid Falling Sick

Natural Foods Which Helps You To Avoid Falling Sick
Story first published: Tuesday, November 8, 2016, 6:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter