Latest Updates
-
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..
ஆண்குறியை பெரிதாக்க வேண்டுமா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...
பல ஆண்கள் ஆண்குறியின் அளவைப் பெரிதாக்க நினைப்பார்கள். அதற்காக இயற்கை வழிகளை நாடுவார்கள். இங்கு ஆண்குறியின் அளவைப் பெரிதாக்க உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
நிறைய ஆண்களுக்கு ஆண்குறியின் அளவு ஓர் பெரிய பிரச்சனையாக உள்ளது. பல ஆண்களுக்கு தங்களது ஆண்குறியின் அளவை எப்படி பெரிதாக்குவது என்று தெரியாமல் உள்ளனர். இதற்காக ஆண்குறியின் அளவைப் பெரிதாக்க உதவும் மாத்திரைகள், சிகிச்சைகள் போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.

ஆனால் அப்படி செயற்கை வழிகளைப் பின்பற்றுவதை விட, இயற்கை வழிகளைப் பின்பற்றுவது தான் நல்லது. அதற்கு ஆண்குறி அளவை பெரிதாக்க உதவும் உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். இங்கு ஆண்குறி அளவை அதிகரிக்க உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

வாழைப்பழம்
பல ஆய்வுகளில் ஆரோக்கியமான இதயத்தைக் கொண்டுள்ள ஆண்கள், ஆண்குறி அளவை பெரிதாக்க நினைத்தால் முடியும் என கூறுகின்றன. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது இதயத்தை ஆரோக்கியமாகவும், உடலில் இரத்த ஓட்டத்தை சீராகவும் வைத்துக் கொள்ளும். ஒரு ஆணின் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால், அது ஆண்குறியை பெரிதாக்கும் முயற்சியில் வெற்றி காண உதவும். எனவே ஆண்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வருவது ஆண்குறிக்கு நல்லது.

சால்மன்
சால்மன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது இரத்த அடர்த்தியைக் குறைத்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருக்கச் செய்யும். மேலும் பல ஆய்வுகளில், ஆண்குறியைப் பெரிதாக்குவதற்கு ஆரோக்கியமான இரத்த ஓட்டம் அவசியமானது என தெரிய வந்துள்ளது.

வெங்காயம்
ஆண்கள் தங்களது அன்றாட உணவில் வெங்காயத்தை சேர்த்துக் கொண்டால், அதில் உள்ள பைட்டோ கெமிக்கல், இரத்தம் உறைவதைத் தடுத்து, தலை முதல் கால் வரை இரத்த ஓட்டம் சீராக இருக்க செய்து, ஆண்குறியைப் பெரிதாக்கவும் உதவும்.

தர்பூசணி
இயற்கையாகவே தர்பூசணி ஒரு வயாகரா போன்று செயல்படும். இதற்கு அதில் உள்ள அமினோ அமிலமான சிட்ருலின் தான். இது உடலில் செல்லும் போது அர்ஜினைனாக மாறி, இரத்த நாளங்களை விரிவடையச் செய்யும். எனவே ஆண்குறி பெரிதாக நினைக்கும் ஆண்கள் தர்பூசணியை உட்கொள்வது நல்ல பலனைத் தரும்.

பூசணி விதைகள் மற்றும் சோயா பீன்ஸ்
இவைகளில் உள்ள L-அர்ஜினைன் என்னும் அமினோ அமிலம், இரத்த ஓட்டத்தை அதிகரித்து, விறைப்பின் போது ஆண்குறி பெரிதாக உதவும். டெல் அவிவ் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 6 வாரங்கள் L-அர்ஜினைன் நிறைந்த உணவுகளை உட்கொண்டு வந்ததில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

ப்ராக்கோலி
ப்ராக்கோலி ஆண்களின் ஆண்குறி அளவில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் இருந்தாலும், இது இடுப்பு பகுதியில் உள்ள தசைகளை வலிமைப்படுத்தும். ஒருவேளை ப்ராக்கோலி உங்களுக்கு பிடிக்காவிட்டால், தக்காளி, கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றை சாப்பிடலாம்.

குறைவான கொழுப்புள்ள தயிர்
இயற்கை வழியில் ஆண்குறி பெரிதாக்க உதவும் உணவுகளில் அதிக அளவில் மெலிந்த புரதம் இருக்க வேண்டும். இந்த மெலிந்த புரதம் கொழுப்பு குறைவான தயிரில் இருக்கும்.

டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட்டில் உள்ள ப்ளேவோனால், தாவர வகை பைட்டோ கெமிக்கல்கள் உள்ளது. இது ஆண்குறியில் இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, ஆண்குறியை பெரிதாக்க உதவும்.



Click it and Unblock the Notifications