டயட் இருந்தும் உடல் பருமன் குறையவில்லையா? அப்போ இதுதான் காரணம்!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

உடல் பருமனை குறைக்க வேண்டும் என்பது குண்டானவர்களின் கனவாகத்தான் இருக்கும். அவர்கள் எத்தனையோ நாட்கள் கடும் டயட் இருந்தும், குறையவில்லை என்று கவலைப்படுவார்கள்.இதற்கு காரணம் என்னவென்று பாய்லர் பல்கலைக் கழக் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Is diet not working out to reduce body weight

நம்முள் பெரும்பாலோனோர் டயட் இருக்க வேண்டுமென்று பிடித்த உணவுகளை தியாகம் செய்து, சற்றும் பிடிக்காத உணவுகளை சாப்பிடுவார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.

நமக்கு பிடிக்காத உணவு உண்பதுதான் டயட் என்று நினைக்கக் கூடாது. உங்களுக்கு பிடித்த ஆரோக்கியமான உணவுகளை தெடி சாப்பிட வேண்டும். அப்போதுதான் உடலும் மனமும் இசைந்து உடல் பருமனை குறைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

Is diet not working out to reduce body weight

டயட்டினால் உடல் பருமனை குறைத்தவர்கள் தங்களுக்கு பிடித்தமான ஆரோக்கியமன உணவுகளை மட்டும்தான் சாப்பிட்டதாக அவர்கள் கூறியிருக்கின்றனர் என்று மெரிடித் டேவிட் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகின்றார்.

மேலும் உடல் எடை குறைக்க, தங்கள் விருப்பங்களை முற்றிலும் கட்டுப்படுத்திக் கொண்டு, மனதிற்கு ஒவ்வாத உணவுகளை சாப்பிட்டவர்கள் தோல்வியே அடைந்துள்ளனர் என்று டேவிட் கூறுகின்றார்.

Is diet not working out to reduce body weight

இந்த ஆய்வில் மொத்தம் 542 பேர் பங்குபெற்றனர். இவர்களில், குறைவான மனக்கட்டுப்பாடு உள்ளவர்கள், தங்களின் டயட் சார்ட்டில் உணவுப்பட்டியலை தயாரிக்கும்போது தங்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளான சிப்ஸ் மற்றும் நாவூறும் சில உணவுகளை நீக்கி, தயாரித்தனர்.

அதே சமயம் அவர்கள் ஆரோக்கிய உனவுகளான முளைக் கட்டிய தானியங்கள், நார்சத்துக் கொண்ட காய்கறிகளை விரும்பவில்லை

Is diet not working out to reduce body weight

ஆனால் அதிக மனக் கட்டுப்பாட்டிலுள்ளவர்கள் தங்களின் டயட் சார்ட்டில், எது உடலுக்கு ஆரோக்கியமோ அவற்றை பட்டியலில் சேர்த்து, அதனை பின்பற்றினர். இவர்கள் ஸ்ட்ராபெர்ரியை அதிகம் விரும்பினர்.

இவர்களில் விருப்பப்பட்டு ஆரோக்கிய உணவுகளையும், பிடித்த மாதிரி சிலவற்றை சேர்த்தும் சாப்பிடவர்கள் தங்கள் உடல் பருமனை குறைத்தனர்.

Is diet not working out to reduce body weight

எனவே நீங்கள் டயட் சார்ட் தயாரித்தால், ஆரோக்கியமாகவும் அதே சமயம் மனதிற்கு பிடித்த உணவுகளை மட்டும் ரசித்து உண்டால் சீக்கிரம் உடல் எடையை குறைக்கலாம் என்று டேவிட் கூறுகின்றார்.

English summary

Is diet not working out to reduce body weight

Is diet not working out to reduce body weight
Story first published: Wednesday, July 13, 2016, 18:15 [IST]
Subscribe Newsletter