வேக வைத்து சாப்பிட வேண்டிய சில முக்கிய காய்கள் !!

Posted By: Hemalatha V
Subscribe to Boldsky

காய்கறிகளின் மகத்துவத்தை பற்றி சொல்லித் தெரிவதில்லை. ஒவ்வொரு காயுமே ஒவ்வொறு உறுப்பிற்கு தனிப்பட்ட நன்மைகளை தருபவை. காய்கறிகளை வேக வைத்து சாப்பிடக் கூடியவை மற்றும் பச்சையாக சாப்பிடக் கூடியவை என பிரிக்கலாம். சில காய்கறிகளில் சத்துக்கள் செயல்படாத நிலையில் இருக்கும்.(inactive form) அவற்றை வேக வைக்கும்போதே உயிர் பெறும்.(Active)

நீரில் கரையும் உணவுகளான விட்டமின் சி நிறைந்த வெள்ளரிக்காய், நெல்லிக்காய், ஆகியவற்றை வேக வைக்காமல் பச்சையாக சாப்பிட்டால் நல்லது. புரோட்டின், கார்போஹைட்ரேட் நிறைந்த காய்கறிகளை வேக வைத்தால்தான் சத்துக்கள் இரட்டிப்பாகும். அப்படி என்னென்ன காய்கள் எந்தனை நேரம் வேக வைத்து சாப்பிட்டால் நல்லது என பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பீட்ரூட் :

பீட்ரூட் :

பீட்ரூட்டை பச்சையாக காட்டிலும் வேக வைத்து சாப்பிடும்போது அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்டுகள் மற்றும் நுண்சத்துக்கள் உயிர்பெறுகின்றன. 3 நிமிடங்கள் வேக வைத்தால் போதுமானது.

உருளைக் கிழங்கு :

உருளைக் கிழங்கு :

உருளை கிழங்கு ஸ்டார்ச் அதிகம் இருப்பதால் இதனை சமைக்கும்போது அதன் சத்துக்கள் வெகுவாக நமக்கு கிடைக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு வேக வைத்து கொடுப்பது நல்லது.

பெரியவர்களுக்கு உடல் எடையை குறைக்கும்.பச்சையாகவோ அல்லது எண்ணெயில் வறுத்து சாப்பிடும்போது அவை கொழுப்பாக மாறி அஜீரணத்தையும், உடல் பருமனையும் தந்துவிடும்.

முட்டை :

முட்டை :

முட்டையில் அதிக புரோட்டின் , அனைத்து விட்டமின், மினரல்கல் உள்ளன. அவற்றை பச்சையாக குடிக்கும்போது அதன் முழு சத்துக்களும் முழுமை பெறுவதில்லை.

ஆம்லெட் சாப்பிடும்போது அவை கலோரியாக அதிகரித்து, உடல் பருமனை உண்டாக்குகின்றன. அதனை வேக வைத்து சாப்பிடும்போது அதன் சத்துக்கள் ரெட்டிப்பாகிறது. சரிவிகதத்தில் அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன.

பீன்ஸ் :

பீன்ஸ் :

பீன்ஸிலுள்ள நார்சத்து மற்றும் புரோட்டின் வேக வைக்கும்போது முழுமை பெறுகின்றன. குறிப்பாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வேக வைத்த பீன்ஸ் சாப்பிடுவது நல்லது. 6 நிமிடங்கள் வேக வைத்தாம் போதுமானது.

பசலைக் கீரை :

பசலைக் கீரை :

பசலைக் கீரை மற்ற கீரைகளும் வேக வைத்து சாப்பிடுவதால்தான் அவற்றின் பலன்கள் கிடைக்கின்றன. அதிலுள்ள பீட்டா கரோட்டின் வேக வைத்து நாம் சாப்பிடும்போது உடலில் விட்டமின் ஏ வாக மாறுகிறது.

காலிஃப்ளவர் :

காலிஃப்ளவர் :

காலி ஃப்ளவரில் அதிக சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இதனை ஆவியில் அவித்து சாப்பிட்டால் முழு சத்துக்களையும் அனுபவிக்கலாம். எண்ணெயில் பொரித்து சாப்பிடுவதும் பச்சையாக சாப்பிடுவதும் நல்லதல்ல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Importance of boiled Vegetables

Health benefits of boiled vegetables
Story first published: Thursday, September 1, 2016, 16:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter