Latest Updates
-
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்!
எந்தெந்த உணவு அளவுக்கு மீறி சாப்பிடுவது அபாயமானது என தெரியுமா?
அளவுக்கு மீறிய செயல்களில் ஈட்படுவது நமக்கு எப்போதுமே கைவந்த கலை. மேலும், எதை சரியாக செய்ய வேண்டுமோ அதை தான் நாம் மிக தவறாக செய்வோம். மற்ற வேலைகளில் விட, ஆரோக்கியம் சார்ந்த வேலையில் நாம் இவற்றை தெளிவாக கடைப்பிடிப்போம்.
எந்தெந்த நேரத்தில என்னென்ன உணவு சாப்பிடணும், சாப்பிடக் கூடாதுன்னு தெரியுமா?
எவ்வளவு அருமையான உணவாக இருப்பினும் சரி, ஊட்டச்சத்துக்கள் குவிந்து இருந்தாலும் சரி, ஏன் அமிர்தமாக இருப்பினும் கூட அளவுக்கு மீறினால் நஞ்சு என்று பழமொழியே இருக்கிறது. ஆம், சில நல்ல உணவுகளை கூட அளவுக்கு மீறி உண்ணும் போது அது உடலுக்கு தீய விளைவுகளை உண்டாக்கும்.
காய்கறி, பழங்களில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த ஸ்டிக்கர் குறியீடுகள் எதை குறிக்கின்றன?
அப்படியானால், எந்தெந்த உணவை எவ்வளவு சாப்பிடுவது உடல் நலனுக்கு நல்லது..? வாங்க, இனி அதை தான் பார்க்க போகிறோம்....

காய்கறிகள்
இரு கைக்கூப்பும் நிலையில் எவ்வளவு காய்கறிகள் அடங்குமோ, அவ்வளவு காய்கறிகள் தான் நீங்கள் ஒரு நாளுக்கு உண்ண வேண்டும். அதற்கு மீறி உண்பது, சத்துக்கள் இருப்பினும், கழிவாக வெளி சென்றுவிடும்.

காய்கறிகள்
மேலும், ஒரு நாளுக்கு இரண்டு வேலைகள் நீங்கள் காய்கறி சேர்த்து உண்டு வந்தால், உங்கள் உடல்நலனுக்கு எந்த பிரச்சனையும் வராது. ஆரோக்கியம் மற்றும் உடற்சக்தி அதிகரிக்கும். நினைவில் கொள்ளவும், உங்கள் இரு கைகளில் எத்தனை அளவு அடங்குமோ அவ்வளவு காய்கறிகள் ஓர் நாளுக்கு எடுத்துக் கொண்டாலே போதுமானது.

கார்ப்ஸ் உணவுகள்
கார்பஸ் உணவுகள் ஓர் நாளுக்கு ஒரு கைப்படி அளவு போதுமானது. அதற்கு மேல், கார்பஸ் உணவுகளை நீங்கள் உட்கொண்டால், அதற்கு ஏற்ற உடற்பயிற்சி அல்லது வேலைகளில் ஈடுபட வேண்டும். இல்லையேல் உடல் பருமன் தாறுமாறாக ஏறும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இறைச்சி உணவுகள்
விரல்களை சேர்க்காது, வெறும் உள்ளங்கை அளவு இறைச்சி மட்டும் தான் உங்கள் உடலுக்கு தேவையானது ஆகும். கொழுப்பு குறைவான இறைச்சியாக இருந்தால் இரண்டு நாளுக்கு ஒருமுறை எடுத்துக் கொள்ளலாம். உடலுக்கு ஆரோக்கியமானது.

பழங்கள்
உங்கள் ஒரு கையை மூடிய அளவில் எவ்வளவு பழங்கள் அடங்குமோ அது தான் ஒரு நாளுக்கு உங்களுக்கு தேவையானது.

பால் உணவுகள்
நெய், வெண்ணெய், சீஸ் போன்ற பால் உணவுகள் உங்கள் ஆள்காட்டி மற்றும் நடுவிரலை இணைத்தால் எவ்வளவு அடங்குமோ, அவ்வளவு தான் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு மீறி எடுத்துக் கொள்வது, கண்டிப்பாக உங்கள் உடல் எடையை அதிகரிக்கும்.

மீன் உணவுகள்
வாரத்திற்கு ஒருமுறையாவது மீன் உணவு எடுத்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. மீன் உண்ணும் பழக்கம் இல்லாதவர்கள், பருப்பு வகை உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இது உடற்சக்திக்கு மிகவும் அத்தியாவசியமான உணவாகும்.

வண்ணம் சார்ந்த உணவு
அல்லது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ண உணவுகளை டயட்டில் சேர்த்து வந்தாலே, உங்கள் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் சிறந்து விளங்கும்.

வண்ணம் சார்ந்த உணவு
அதாவது, ஒரு நாள் பச்சை உணவுகளான, கீரை, பீன்ஸ் போன்றவை, ஒருநாள் சிவப்பு உணவுகளான பீட்ரூட், கேரட் போன்றவை, மறுநாள் வெள்ளை உணவுகளான முள்ளங்கி என டயட் பின்பற்றலாம்.

உடல் பருமன்
உடல் பருமனை குறைக்க விரும்புவோர், தினமும் இரண்டு வேலை, காய்கறி, பழங்கள் சேர்த்துக் கொள்வது அவசியம். ஏனெனில், இதில் கொலஸ்ட்ரால் குறைவு, ஊட்டச்சத்துக்கள் நிறைவு. மேலும், ஒரு நாளுக்கு ஒரு முறையாவது பால் பருக வேண்டும். இது எலும்புகளின் உறுதியை ஊக்கப்படுத்தும்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டி மிட்டாய்..



Click it and Unblock the Notifications
