For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காரசாரமான உணவுகளை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் தெரியுமா?

|

ஆந்திரா என்றாலே காரம்தான் நினைவுக்கு வரும். அவர்கள் வெறும் சிவப்பு மிள்காய் பொடியில் நெய் கலந்து சாப்பிடுவார்கள். கண்களில் நீர் வர காரம் சாப்பிடுவது சிலருக்கு மிகவும் பிடிக்கும்.

Health Benefits of Spicy Foods

பசி நேரத்தில் காரசாரமான உணவுவகைகள் நினைத்தாலே எச்சில் ஊறும். அதிக காரம் உடலுக்கு நல்லதில்லை. வயிறு புண்ணாகிவிடும். அதே சமயம் காரமே இல்லாமல் சாப்பிட்டாலும் அவை வயிற்றிற்கு மந்தத்தன்மையை அளித்துவிடும். போதிய அளவு என்சைம்கள் சுரக்க, காரமான ஆரோக்கியமான உணவுகளும் தேவை.கார உணவுகளை சாப்பிடுவது அதிக நன்மைகள் தரும். எப்படி? என்ன நன்மைகள்? என்று பார்க்கலாம்.

உடல் இளைக்க :

காரமான உணவுகள் அதிக கொழுப்பை கரைக்க உதவுகிறது. கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. 8 % கொழுப்பு கார உணவுகளால் எரிக்கப்படுகிறது என ஆய்வு கூறுகின்றது. மேலும் கார உணவுகளை சாப்பிடும்போது குறைவாகவே உட்கொள்ளத் தோன்றும்.

புற்று நோயை தடுக்கும் :

மிளகாயில் உள்ள கேப்ஸெய்சின் என்ற மூலக்கூறு புற்று நோய் செல்களை அழிக்கிறது. புரோஸ்டேட் புற்று நோய் செல்களை குறைக்கும் தன்மை கொண்டது என அமெரிக்கன் கென்ஸர் சொஸைட்டி சொல்கிறது.

இதய நோய்களை தடுக்கும் :

மிளகு , சிவப்பு மிளகாய் மற்றும் குறுமிளகில் உள்ள மூலக்கூறுகள் இதயத்தில் படியும் கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது. இதயத்தில் கட்டமைக்கும் கொழுப்பு படிமங்களை மிள்காய் உடைக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

நீண்ட ஆயுள் வாழ :

கடந்த 2015 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றும், ஹார்வார்டு பல்கலைக் கழகமும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில் நீண்ட ஆயுளில் இருப்பவர்கள் காரசாரமான உணவுகளை உண்பதால்தான் என தெரிய வந்துள்ளது.

எந்த வித நோயும் தாக்காம்ல் நோய் எதிர்ப்பு சக்தியுடன் அதிக ஆயுள் வாழ்வதாக தெரிய வந்துள்ளது.

English summary

Health Benefits of Spicy Foods

Health Benefits of Spicy Foods
Story first published: Monday, August 22, 2016, 17:57 [IST]
Desktop Bottom Promotion