சிறுநீரகம், நுரையீரல் மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த ஜூஸ் குடிங்க!

Posted By:
Subscribe to Boldsky

வர வர இந்த தலைமுறை மக்களிடம் ஆரோக்கியம் சீர்குலைந்து வருகிறது என பல ஆய்வுகளின் மூலமாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கு காரணம் என்ன? செயற்கை முறைகள் நமது வாழ்வியலில் அதிகரிக்க துவங்கியதில் இருந்து தான் நமது ஆரோக்கியம் வலுவிழக்க ஆரம்பித்தது.

மீண்டும், செயற்கையை விரட்டி, இயற்கையுடன் உறவாட ஆரம்பித்தால் இழந்த ஆரோக்கியத்தை மீட்டெடுக்க முடியும். பழங்கள், காய்கறிகள், இயற்கை முறையில் தயாரிக்கப்படும் உணவுகளுக்கு நாம் மாற வேண்டும்.

இதையும் படிங்க: சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எளிய ஆயுர்வேத குறிப்புகள்!

இதை சரியாக பின்பற்றி வந்தாலே நமது உடல் உறுப்புகளின் ஆரோக்கியம் மேலோங்க ஆரம்பித்துவிடும். இனி, சிறுநீரகம், நுரையீரல் மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஜூஸை எப்படி தயாரிப்பது என பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

 • கேரட் - 1
 • ஆரஞ்சு - 1
 • வாழைப்பழம் - 1
 • பால் - 120 மி.லி
வைட்டமின் சத்துக்கள்:

வைட்டமின் சத்துக்கள்:

சிறுநீரகம், நுரையீரல் மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்த ஜூஸ் குடிப்பதால் பெறும் வைட்டமின் சத்துக்கள்.,

வைட்டமின் A, B1, B12, B2, B3, B6, C, D மற்றும் E.

செய்முறை:

செய்முறை:

 • வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு பழத்தின் தோலை நீக்கிவிடுங்கள்.
 • ஆரஞ்சு, கேரட், வாழைப்பழத்தை துண்டு, துண்டாக வெட்டுக் கொள்ளுங்கள்.
 • மிக்ஸரில் கொஞ்சம், கொஞ்சமாக நறுக்கிய பழத் துண்டுகளை அரைக்கவும்.
 • கடைசியாக பாலை இதனுடன் சேர்த்து நன்கு கலக்கி குடியிங்கள்.

முக்கிய நன்மைகள்!

முக்கிய நன்மைகள்!

 • கண்களின் ஆரோக்கியத்தை வலுவாக்கும்.
 • எலும்புகளின் வலிமைக்கு உதவும்.
 • நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
 • நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்.
பொதுவான நன்மைகள்!

பொதுவான நன்மைகள்!

 • பருக்கள் உண்டாகாமல் தடுக்கும்.
 • வாயுத்தொல்லை உண்டாகாமல் இருக்க பயனளிக்கும்.
 • கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்.
 • அல்சர் மற்றும் கட்டிகள் உண்டாகாமல் இருக்க உதவும்.
 • செரிமானத்தை ஊக்குவிக்கும்.
 • உடல் எடை குறைக்க உதவும்.
குறிப்பு!

குறிப்பு!

தேவை என்றால் இந்த ஜூஸுடன் புதினா இலைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits of Banana Smoothie, Carrot, Orange and Milk Mix

Health Benefits of Banana Smoothie, Carrot, Orange and Milk mix, take a look on here
Subscribe Newsletter