Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் ஆப்பிள், பீச், பேரிக்காய் ஜூஸ்
உடலில் கொலஸ்ட்ரால் அதிகமானால் வயறு வலி, தசை பிடிப்பு, உடல் வலு குறைவது, போன்ற சிறு, சிறு கோளாறுகளில் இருந்தும் கல்லீரல் செயற்திறன் குறைபாடு, செரிமான கோளாறுகள், மலமிளக்க பிரச்சனைகள் என பெரிய, பெரிய பிரச்சனைகள் வரை உண்டாகும்.
அதிகமாக எண்ணெய் பயன்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், சரியான உடல் வேலை இல்லாமல் இருப்பது போன்றவை தான் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணியாக இருக்கிறது. உங்களுக்கும் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கிறது என்றால், அதை எளிதாக குறைக்க, கரைக்க் இந்த ஜூஸை குடியுங்கள்...

தேவையான பொருட்கள்!
ஆப்பிள் - 1
பீச் - 1
பேரிக்காய் - 1

வைட்டமின் சத்துக்கள்!
உடலில் அதிகம் கொலஸ்ட்ரால் சேராமல் தடுக்க உதவும் இந்த ஆப்பிள், பீச், பேரிக்காய் ஜூஸை குடித்து வந்தால், உடலுக்கு கிடைக்கும் விராமின் சத்துக்கள்,
வைட்டமின் A, B, B1, B2, C, E மற்றும் K.

செய்முறை!
1) ஆப்பிள், பீச் மற்றும் பேரிக்காய் பழங்களை சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.
2) பீச், பேரிக்காய் மற்றும் ஆப்பிளில் இருக்கும் விதைகளை நீக்கிவிடுங்கள்.
3) விதை நீக்கப்பட்ட பழங்களை சின்ன சின்னதாக நறுக்கி கொள்ளவும்.
4) நறுக்கிய பழங்களை ஒன்றாக சேர்த்து ஜூஸரில் போட்டு அரைக்கவும்.

நன்மைகள்!
* ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
* உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் சேர்க்காமல் தடுக்க உதவுகிறது.
* சரும செல்களின் வயதாகும் தன்மையை குறைத்து, இளமையாக தோற்றமளிக்க செய்கிறது.
* இந்த ஜூஸை குடிப்பதால் உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகரிக்கும். இதனால், நோய் எதிர்ப்பு திறன் சீராகும்.
* இதயம், பற்களின் வலிமையை ஊக்குவிக்கும்.
* இரத்தத்தை சுத்திகரிக்க இந்த ஜூஸ் உதவுகிறது.
* செரிமானத்தை சீராக்கி, மலமிளக்க பிரச்சனை உண்டாகாமல் பாதுகாக்கிறது.
* கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

குறிப்பு!
தேவைப்பட்டால் சிறிய துண்டு இஞ்சியை இந்த ஜூஸுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதுவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவி புரியும்.



Click it and Unblock the Notifications
