எந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

உண்ணும் உணவிற்கு தகுந்தாற்போலதான் உங்கள் ஆரோக்கியமும் அமையும். எல்லா உணவுகளும் ஜீரணிக்கப்பட்டு, சக்தியாகவும், சத்தாகவும் மாறுகிறது.

கார்போஹைட்ரேட் மற்றும் அதிகப்படியான கொழுப்பு உணவுகள் எனர்ஜியாக சேர்த்து வைக்கப்பட்டு, எப்போது தேவையோ அப்போது உபயோகப்படுத்தபடுகிறது.

புரோட்டின் உணவுகள் திசு செல் மற்றும் உடல் வளர்ச்சிக்கு பயன்படுத்தபடுகிறது. ஜீரணிக்கும் என்சைம்கள் உருவாகவும் ஹார்மோன்கள் உருவாகவும் புரோட்டின் தேவை.

விட்டமின்கள் உடலிற்கு போஷாக்கு தருகிறது. மினரல்கள் வளர்சிதை மாற்றத்திற்கும், நரம்புகளின் தூண்டுதலுக்கும் தகவல்களை கடத்துவதற்கும் பயன்படுகிறது.

Food to be consumed to burn calories

இன்னும் இவைகளின் நன்மைகளை சொல்லிக் கொண்டே போகலாம். இந்த எல்லா சத்துக்களும் சம அளவு இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஒன்று குறைந்து மற்றொன்று அதிகமாகினால் உடல் இயக்கம் பாதிக்கும்.

உடல் எடையை அதிகப்படுத்தும் இரு முக்கிய சத்துக்கள் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு உணவுகள். இவைகளை மிக அதிகமாக உண்ணும்போது , உடல் பருமனை உண்டுபண்ணுகின்றன.

Food to be consumed to burn calories

இதனை நாம் உண்ணும் உணவுகளாலேயே சரிபடுத்தமுடியும். அவற்றை எதிர்மறை கலோரி என்று குறிப்பிடலாம். காரணம் அதிகப்படியான கலோரியை இந்த மாதிரியான உணவுகள் எரித்து, வளர்சிதை மாற்றத்தை தூண்டுகின்றன. இதனால் முழுவதும் ஜீரணிக்கப்பட்டு, கழிவுகளை உடனடியாக வெளியேற்றி உடல் எடையை குறைக்க உதவும். அத்தகைய உணவுகள் எவையென பார்க்கலாம்.

பூண்டு :

பூண்டு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்யும். கல்லீரல் மற்றும் ரத்தத்தில் தங்கும் கொழுப்புகளை கரைக்க வைக்கும். மேலும் சாதரண அன்றாட வேலைகளிலேயே கலோரிகளை எரித்து, சேமிக்க வைக்காமல் உடல் எடையை குறைக்க உதவிடும்.

Food to be consumed to burn calories

சிட்ரஸ் உணவுகள் :

எலுமிச்சை, ஆரஞ்சு, வெள்ளரிக்காய், , திராட்சை ஆகியவை விட்டமின் சி நிறைந்தவை, இவையும் வளர்சிதை மாற்றத்தை தூண்டும். கொழுப்புகளை கரைத்திடும். பெர்ரி பழ வகைகள் அதிக நார்சத்து கொண்டவை. இவை அதிகப்படியான கொழுப்புக்களை உறிஞ்சி, சிறு நீரகம் வழியே வெளியேற்றிவிடும்.

Food to be consumed to burn calories

தானிய வகைகள் :

தானியங்கள் அதிக நார்சத்தும் விட்டமின்களும் கொண்டுள்ளன. இவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றன. உடல் எடையை குறைத்திடும். எலும்புகளுக்கு பலம் அளித்திடும். ஹீமோகுளோபின் அளவை ஏற்றும். கொழுப்பை கரைக்கும்.

Food to be consumed to burn calories

மீன் முட்டை :

மீனில் ஒமேகா வகை கொழுப்பு அமிலம் உள்ளன. இவை கொழுப்பே இல்லாத உணவு. இதை தொடர்ந்து சாப்பிடும்போது, உடல் எடை குறைந்துவிடும்.

Food to be consumed to burn calories

அதே போல் முட்டையும் உடல் எடையை அதிகரிக்காது. மாறாக குறைக்கச் செய்யும்.

English summary

Food to be consumed to burn calories

Food to be consumed to burn calories
Story first published: Wednesday, August 3, 2016, 15:10 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter