ஏன் மாதவிடாய் காலங்களில் குறைவாக பசி உண்டாகிறது என தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

நமது இந்தியாவில் காலங்காலமாக பெண்களை மாதவிடாய் காலங்களில் ஒதுங்கி அமரவைப்பார்கள் . அறிவியல் பூர்வமாக இது நல்லதுதான். அந்த சமயங்களில் பெண்களுக்கு ஓய்வு அவசியம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பெண்களுக்கு பசி ஏற்படுவதற்கும் மாதவிடாய் சுழற்சிக்கும் இடையே ஒரு இணைப்பு உண்டு. ஆண் பெண் என யாராக இருந்தாலும் உங்கள் எனர்ஜி மற்றும் பசி, செயல்களை தீர்மானிப்பது உங்கள் ஹார்மோன்தான்.

சரியாக தூங்காமல் இருப்பதில் தொடங்கி வேலைப்பளுவுடன் கூடிய நாட்கள் உழலும்போது ஆரம்பிக்கிறது உங்கள் சமனிலையற்ற ஹார்மோன் சுரப்புத்தன்மை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 மாதிவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள் :

மாதிவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள் :

உடல் எடைக்கும் மாதவிடாய்க்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது. எப்படியென்றால் மாதவிடாய் சுழற்சியில் ஒவ்வொரு நிலையிலும் ஹார்மோன் செயல்கள் வேறுபடும்.

அதனால்தான் பெண்களுக்கு சில நாட்கள் சாப்பிட தோன்றுவதில்லை. சில நாட்கள் அதிகமாக சாப்பிட தோன்றும். இதனைப் பற்றி விரிவாக பார்க்கலாமா?

ஹார்மோன்- உடல் எடை :

ஹார்மோன்- உடல் எடை :

உடல் எடை பொதுவாக பெண்களுக்கு கூடுவதற்கு இந்த ஹார்மோன் மாற்றங்களும் காரணம். அந்த மாதிரியான சமயங்களில் உங்கள் உணவு பழக்கம் மற்றும் பயிற்சிகளால் மாற்றினால், திருமணமான பின்னும் உங்கள் உடல் எடை கூடாமல் சரியாக வைத்திருக்க உதவும்.

முதல் 1- 4 நாட்கள் :

முதல் 1- 4 நாட்கள் :

இந்த மாத விடாய் நாட்களில் உங்கள் எனர்ஜி குறைவாக இருக்கும். பசியும் எடுக்காது. எனவே இந்த சமயங்களில் மெதுவான நடை பயிற்சி, சின்ன உடற்பயிற்சி செய்வது நல்லது.

எனர்ஜி குறைவாக இருப்பதால் அந்த சமயங்களில் சத்துள்ளதை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது உங்கள் கர்ப்பப்பையை பலமாக்கும்.பசியில்லை என்று சாப்பிடாமல் இருப்பது தவறு. அதிக உழைப்பும் தராமல் இருப்பது நல்லது.

5- 15 நாட்கள் :

5- 15 நாட்கள் :

இந்த நாட்களில் உங்கள் எனர்ஜி அளவு அதிகரிக்கும். இந்த சமயங்களில் அதிக புரத உணவு எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இவை உடல் எடையை அதிகரிக்கச் செய்யாது. நன்றாக இந்த சமயத்தில் உடற்ப்யிற்சி , நடைபயிற்சி செய்வது நல்லது. உங்கல் எடை கூடாமல் வைத்திருக்கும்.

16- 28 நாட்கள் :

16- 28 நாட்கள் :

இந்த நாட்களில்தான் அதிக பசி எடுக்கும். அதிக எனர்ஜியுடன் இருப்பீர்கள். இந்த சமயத்தில் கவனமாக இருங்கள். அதிக நொறுக்குத்தீனிகள், கொழுப்பு உணவுகளை சாப்பிடத் தோன்றும்.

பின்னாளில் உடல் பருமனாக காரணமாகிவிடும். ஆகவே நிறைய நட்ஸ் மற்றும் பழ வகைகளை பசியெடுக்கும்போது தேர்ந்தெடுங்கள்.

ஆராய்ச்சி :

ஆராய்ச்சி :

உடல் பருமன் மற்றும் பெண்களின் மாதவிடாய் தொடர்பாக செய்யப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் கீகர், கீல் மற்றும் 60 ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் பரிந்துரையின் படி சொன்ன விஷயங்கள்தான் மேற்கண்டவை.

பெண்கள் மாதவிடாய் சுழற்சியின் போது தங்கள் உணவுப்பழக்கத்தை ஹார்மோன் மாற்றங்களின் தக்கபடி மாற்றிக் கொண்டால் உடல் எடை கூடாது என தெரியவதுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Diet tailored to your menstrual cycyle

Die to be followed during menstrual cycle
Story first published: Wednesday, September 28, 2016, 14:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter