உடல் எடை குறைய வெள்ளரிக்காயை எப்படி சாப்பிடலாம்?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

பிஞ்சு வெள்ளரிக்காயில் உப்பு மிளகாய்பொடியை தூவி சாப்பிட யாராவது விரும்பாமால் இருப்பார்களா? அதுவும் வெயில் காலங்களில் பேருந்து நிலையத்திலும், ரயில் நிலையங்களிலும் இதனை தேடாமால் இருக்கும் பயணிகள் மிகக் குறைவு.

சுவையுடன் இருக்கும் இந்த வெள்ளரிக்காயில் குறைவான கலோரியே உள்ளது. எல்லாவகையான சத்துக்களையும் கொண்டுள்ளது.

Cucumber may help to reduce your body weight

வெள்ளரிக்காயை தோல் நீக்காமல் அப்படியே சாப்பிட வேண்டும். ஏனென்றால் தோலில் தேவையான அளவு விட்டமின் சி உள்ளது. குளிர்ச்சியை தரும் இதில் 96 சதவீத நீர்சத்தும், விட்டமின் சியும் அதிகமாக உள்ளன. இது தரும் நன்மைகள் சிலவற்றை பார்ப்போம்.

மூட்டு வலி மற்றும் சிறு நீரக கற்களை தடுக்க :

வெள்ளரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள கற்களை கரையச் செய்யும். இந்த வெள்ளரிக்காய் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வெள்ளரிக்காயில் அதிக அளவில் சிலிகான் உள்ளதால், தசை இணைப்புகளை திடமாக்கி மூட்டு ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது.

Cucumber may help to reduce your body weight
போஷாக்கு கிடைக்க :

வெள்ளரிக்காய் வயிறு எரிச்சலை கட்டுப்படுத்துகிறது, மேலும் வெள்ளரிகளை சாப்பிட்டால் எளிதில் செரிமானம் ஆகும். வெள்ளரிச் சாறுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட உடல் ஊட்டம் பெறும். அதிலுள்ள சல்ஃபர் கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது. ஆகவே கருமையான, நீளமான கூந்தல் வளர வெள்ளரிக்காயை உண்ணுங்கள்

உடல் எடை குறைய :

உடல் எடை குறை நினைப்பவர்கள் தொடர்ந்து வெள்ளரிக்காயை விதையுடன் உண்டு வந்தால் ஒரே மாதத்தில் மாற்றங்களை காண்பீர்கள். வெள்ளரிக்காயை சமைக்கக் கூடாது ஏனெனில் அதிலுள்ள பொட்டாசியம் பாஸ்பரஸ் ஆகியவை அழிந்துவிடும். பச்சையாக சாப்பிடுவது மிக நல்லது.

Cucumber may help to reduce your body weight

கீல்வாதத்தை குணப்படுத்தும் :

மலச்சிக்கலை குணப்படுத்தும். மேலும் பித்தநீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது. வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

Cucumber may help to reduce your body weight

கண்பார்வை அதிகரிக்க :

கேரட் வெள்ளரிக்காயை நறுக்கி, தயிரில் பச்சடி போல் செய்து சாப்பிடுவது உடலுக்கு அற்புத நன்மைகளை தரும். வாரம் மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிடுங்கள். கண்பார்வை, சருமம் ஆகியவை ஆரோக்கியமாக திகழும். உடல் எடையும் குறையும்.

Cucumber may help to reduce your body weight
English summary

Cucumber may help to reduce your body weight

Cucumber may help to reduce your body weight
Please Wait while comments are loading...
Subscribe Newsletter