Latest Updates
-
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
கடகத்தில் குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க
ஆண்களின் உயிரைப் பறிக்கும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் உணவுகள்!!!
தற்போது ஆண்களின் உயிரை அதிகம் பறிப்பதில் முதன்மையாக இருப்பது இதய நோய்கள் தான். இத்தகைய இதய நோய்களுக்கு வழிவகுப்பது இரத்த அழுத்தம். ஒருவருக்கு இரத்த அழுத்தம் அதிகமானால், அது இதயத்தில் உடனே பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் வருடத்திற்கு 9 மில்லியனுக்கும் அதிகமானோர் இரத்த அழுத்தத்தினால் உயிரிழக்கின்றனர். குறிப்பாக சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்வோர் தான் அதிக அளவில் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கு வேலைப்பளு தான் முக்கிய காரணம். வேலைப்பளு அதிகமாவதால், பலரும் டென்சன் ஆகி, இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரித்து, நாளடைவில் அதுவே மாரடைப்பை ஏற்படுத்தி உயிரை பறித்துவிடுகிறது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை பட்டியலிட்டுள்ளது. இந்த உணவுகளை அவ்வப்போது உட்கொண்டு வந்தால் இரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தடுக்கலாம்.

வாழைப்பழம்
இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமெனில், தினமும் ஒரு வாழைப்பழத்தை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் வாழைப்பழத்தில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் இது மிகவும் விலைக் குறைவில் கிடைக்கக்கூடியதும் கூட. பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், அவை சிறுநீரகத்தில் இரத்தத்தை சுத்திகரிக்கும் போது, இரத்தத்தில் உள்ள சோடியத்தை வடிகட்டிவிடும் மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, இரத்த ஓட்டத்தை சீராக செல்ல உதவும்.

கொழுப்பு நீக்கப்பட்ட பால்
இரத்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமானால், தினமும் ஒரு டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை குடிக்க வேண்டும். இதனால் உடலுக்கு வேண்டிய கால்சியம் மற்றும் வைட்டமின் டி கிடைத்து, அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்து, எலும்புகளை வலிமையாக்கி, இதய நோய்கள் வரும் வாய்ப்பைத் தடுக்கும்.

தர்பூசணி
கோடையில் கிடைக்கும் தர்பூசணி புத்துணர்ச்சி கொடுப்பது மட்டுமின்றி, இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். ஏனெனில் தர்பூசணியில் நார்ச்சத்து, லைகோபைன், வைட்டமின் ஏ மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளது. இந்த சத்துக்கள் அனைத்துமே இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்திற்கு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் சக்தி உள்ளது. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தையோ அல்லது ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸோ குடித்து வந்தால், இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

டார்க் சாக்லேட்
சாக்லேட் சாப்பிட அனைவருக்குமே பிடிக்கும். அதிலும் தினமும் ஒரு துண்டு டார்க் சாக்லேட் சாப்பிட்டால், அதில் உள்ள ப்ளேவோனாய்டுகள், இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். மேலும் சாக்லேட் சாப்பிட்டால், மன அழுத்தம் குறைந்து, மனம் ரிலாக்ஸ் ஆகும்.

சூரியகாந்தி விதை
சூரியகாந்தி விதையில் வைட்டமின் ஈ, ஃபோலிக் ஆசிட், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆகவே இதனை தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தம் குறைந்து, இதய ஆரோக்கியம் மேம்படும். அதுமட்டுமின்றி, சூரியகாந்தி விதை பெப்டைடு என்னும் நொதி இரத்த அழுத்தம் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும்.

தானியங்கள்
தானியங்களை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், குறிப்பாக ஓட்ஸ், கோதுமை போன்றவற்றை காலை வேளையில் உட்கொண்டு வந்தால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும் மற்றும் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும். ஆகவே உங்களுக்கு இரத்த அழுத்தம் இருந்தால், தானியங்களை உணவில் சேர்த்து வாருங்கள்.

பசலைக்கீரை
பசலைக்கீரையில கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகமாகவும் உள்ளது. இவை அனைத்துமே இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், சீராக பராமரிக்கவும் உதவும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பொட்டாசியம் வளமாக நிறைந்துள்ளது. ஆகவே சர்க்கரைவள்ளிக் கிழங்கை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், அவை இரத்தத்தில் உள்ள சோடியத்தின் அளவைக் குறைத்து, இரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தடுக்கும்.

திராட்சை ஜூஸ்
தினமும் 2 டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள பாலிஃபீனால்கள் நைட்ரிக் ஆக்ஸிடு உற்பத்தியை தூண்டி, இரத்த நாளங்களை தளரச் செய்து, இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். மேலும் இதில் கலோரிகள் இல்லாததால், இதயமும் ஆரோக்கியமாக செயல்படும்.

பெர்ரிப் பழங்கள்
பெர்ரிப் பழங்களில் பாலிஃபீனால்கள், ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் ஆந்தோசையனின்கள் உள்ளது. மேலும் இவைகளில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்தும் உள்ளது. ஆகவே தினமும் ஒரு கையளவு பெர்ரிப் பழங்களை உட்கொண்டு வந்தால், அவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இரத்த அழுத்தத்தைக் குறைத்து, நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications
