Latest Updates
-
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்!
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் இருக்கும் வியக்கவைக்கும் விஷயங்கள்!!
உணவு என்பது அனைத்து உயிரினத்தின் அடிப்படை தேவை. இதில், ரசித்து, ருசித்து உண்ணும் பழக்கம் கொண்ட ஒரே உயிரினம் மனிதர்கள் தான். நாம் அன்றாடம் சாப்பிடும் ஒவ்வொரு உணவின் பின்னணியிலும் சுவாரஸ்யமான, வியக்க வைக்கும் தகவல்கள் புதைந்துள்ளன.
நாம் சாப்பிடும் சில உணவுகள் நாற்பது வருடங்கள் முன்பு இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் நிறைய மாறி இருக்கிறது. சில உணவுகள் நூற்றாண்டுகள் தாண்டியும் கெடாமல் இருக்கும் தன்மைக் கொண்டுள்ளன.....

கோழியின் கொழுப்பு
நாற்பது வருடங்களுக்கு முன்பு கோழியில் இருந்த கொழுப்பை விட, 266% இப்போது நாம் உண்ணும் கோழியில் கொழுப்பு அதிகமாக இருக்கிறது. இது உடல்பருமன் மற்றும் இதய பாதிப்புகள் அதிகமாக காரணமாக விளங்குகிறது.

கேரட்
கேரட் ஆரஞ்சு நிறம் என்று நாம் அனைவரும் அறிவோம். ஆனால், கேரட் உண்மையில் ஊதா நிறமாகும்.

தேன்
என்றும் கெடாத உணவு ஒன்று இருக்கிறது எனில் அது தேன் தான். தேன் 3000 ஆண்டுகளுக்கு மேலும் கெடாமல் இருக்கும்.

பீனட் பட்டர் (Peanut Butter)
அறிவியல் அறிஞர்கள் பீனட் பட்டரை வைரமாக மாற்ற முடியும் என எப்போதோ கண்டறிந்துவிட்டனர்.

தாய்பால்
உலகிலேயே மனிதனுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்தும் தரக்கூடிய ஒரே உணவு தாய்பால் தான். அதனால் தான் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்காவது குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்க வேண்டும் என கூறப்படுகிறது.

விமான உணவுகள்
விமானத்தில் உணவு சாப்பிடும் போது அவற்றை முழுமையாக சுவைக்க முடியாது. ஏனெனில், அந்த உயரத்தில் நமது ருசி அறியும் திறன் மற்றும் நுகரும் திறன் 20% - 50% குறைந்துவிடுகிறது.

ஃபாஸ்ட்புட்
அன்றாடம் ஃபாஸ்ட்புட் உண்ணும் பழக்கம் இருந்தால், கல்லீரல் அழற்சி சீக்கிரமாக ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன..

பிடித்த உணவு பற்றிய எண்ணம்
உங்களுக்கு பிடித்த உணவை பற்றி எண்ணும் போது கூட டோபமைன் எனும் சூப்பர் ஹார்மோன் உடலில் சுரக்கிறது. இது உடலுறவை ஊக்குவிக்கும் சுரப்பியாகும்.



Click it and Unblock the Notifications
