For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் முட்டை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நல்ல மாற்றங்கள்!!

|

பாலுக்கு அடுத்ததாக நமது உடலுக்கு தேவையான அன்றாட ஊட்டச்சத்துக்களை கொண்ட உணவு முட்டை. முட்டையில் இருக்கும் நல்ல கொழுப்பான எச்.டி.எல். கொழுப்பு, தீயக் கொழுப்பான எல்.டி.எல். கொழுப்பை உடலில் அதிகம் சேராமல் தடுத்து இதய பாதிப்பு, இரத்த கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கிறது.

மேலும், தினமும் உங்கள் உணவுமுறையில் முட்டையை சேர்த்துக் கொள்வதால், உடல் எடை குறைக்க முடியும், உடல்நலக் குறைபாடு அதிகம் ஏற்படாமல் உடலை பாதுகாக்க முடியும். மற்றும் இதிலிருக்கும் புரதம், வைட்டமின் பி, கோலைன் போன்ற சத்துக்கள் உடல் வலிமையை வலுவாக்க பயனளிக்கிறது....

உடல்நலம், அழகு, சுவாரஸ்யங்கள், உறவுகள் சார்ந்த கட்டுரைகளை உடனுக்குடன் பெற தமிழ் போல்ட்ஸ்கை ஃபேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாரடைப்பு வாய்ப்புகள் குறையும்

மாரடைப்பு வாய்ப்புகள் குறையும்

முட்டையில் இருக்கும் நல்ல கொழுப்பு, உடலில் தேங்கும் தீயக் கொழுப்பை கரைக்க செய்கிறது. இதனால், இரத்த அழுத்தம், இரத்த கொழுப்பு குறைந்து மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகளும் குறைகிறது.

உடல் எடை குறைக்க

உடல் எடை குறைக்க

தினமும் காலை உணவின் போது முட்டையை சேர்த்துக் கொள்வதால், நாள் முழுதும் அதிக பசியும் எடுக்காது, உடலுக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கும். மற்றும் இது உடலில் வளர்சிதை மாற்றங்கள் ஏற்படுவும் உதவும். இதனால் உடலில் சேரும் கொழுப்பானது கரைந்துவிடும்.

உடல்நலக் குறைபாடு

உடல்நலக் குறைபாடு

தினமும் முட்டையை உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதனால் உடலில் நோயை பரப்பும் பாக்டீரியாக்களை விரைவாக எதிர்த்து போராட முடியும். முட்டையில் இருக்கும் செலினியம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கிறது.

முடி உதிர்வு, சரும பிரச்சனை

முடி உதிர்வு, சரும பிரச்சனை

முட்டையின் மூலம் கிடைக்கும் அதிகமான புரதச்சத்து முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் அவசியமானதாக இருக்கிறது. இது உங்கள் சருமத்தை இளமையாக பாதுகாக்கிறது. மேலும் இது முடி உதிர்வையும் கட்டுப்படுத்துகிறது.

வைட்டமின் பி

வைட்டமின் பி

முட்டையின் மூலம் நமது உடலுக்கு தேவையான வைட்டமின் பி அதிகமாக கிடைக்கிறது. இது பதட்டத்தை குறைக்கும் ஊட்டச்சத்து என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், மூளை சுறுசுறுப்பாக இயங்கும் மற்றும் நீங்கள் மகிழ்ச்சியாக உணர முடியும்.

மூளையின் வலிமை

மூளையின் வலிமை

முட்டையில் உயர்தர கோலைன் உள்ளது. இது மூளையை வலிமைப்படுத்த பெருமளவு உதவுகிறது. கோலைன் அளவு குறைந்தால் மனநலம் மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, முட்டை இதயத்திற்கு மட்டுமின்றி மூளைக்கும் வலு சேர்க்கிறது.

உடல் சக்தி

உடல் சக்தி

முட்டையில் இருக்கும் அமினோ அமிலங்கள் உடல் சக்தியை அதிகரிக்க செய்கிறது. அமினோ அமிலங்கள் குறைப்பாடு ஏற்பட்டால் தசை வலுவின்மை, சோர்வு, மயக்கம் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, முடிந்த வரை முட்டையை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வேக வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Seven Things That Happen To Your Body When You Eat Eggs

Do you know cholesterol in eggs is a good one and decreases the risk of heart attack. Eggs dont raise the cholesterol but remove the bad cholesterol from body.
Desktop Bottom Promotion