சிவப்பு இறைச்சி உணவுகளை ஏன் சாப்பிடக் கூடாது என்பதற்கான காரணங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

சிவப்பு இறைச்சி உணவுகளான மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை தவிர்க்க கூறி பல ஆய்வாளர்கள் கூறி வருகிறார்கள். சமீபத்திய ஆய்வில், புகை பழக்கத்தால் ஏற்படும் அளவை விட, சிவப்பு இறைச்சி உணவுகளால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகள் தான் அதிகம் என்று உலக சுகாதார மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இறைச்சியை விட அதன் உறுப்புக்களை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போலவும், சில சமயங்களில் வாரத்திற்கு மூன்று முறை சிவப்பு இறைச்சி உணவுகளை சாப்பிடுவதும் கூட உடலுக்கு தீமையை விளைவிக்கிறது என்று கூறப்படுகிறது. இரத்த நாளங்கள் கடினமாவது, இதயக் கோளாறுகள், பெருங்குடல் புற்றுநோய் போன்ற அபாயங்கள் அதிகம் ஏற்பட சிவப்பு இறைச்சி காரணமாக இருக்கிறது....

உணவில் மட்டனை அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த நாளங்கள் கடினமாகின்றன

இரத்த நாளங்கள் கடினமாகின்றன

சிவப்பு இறைச்சி உணவுகளில் கண்டறியப்படும் கார்னைடைன் (carnitine) எனும் பொருள் இரத்த நாளங்களை கடினமாக்குகிறது. இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இது இயற்கை மருந்து (Nature Medicine) எனும் ஆய்வு பத்திரிகையில் வெளிவந்த ஆய்வறிக்கை மூலம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.

இதய பிரச்சனைகள்

இதய பிரச்சனைகள்

சிவப்பு இறைச்சியில் இருக்கும் கார்னைடைன் எனும் மூலப்பொருள் இதயத்தை பாதிக்கும் Trimethylamine-N-oxide (TMAO) -ஐ உருவாக்குகிறது. இது இதயம் சார்ந்த கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

பெருங்குடல் புற்றுநோய்

பெருங்குடல் புற்றுநோய்

அமெரிக்காவில் நடைபெற்ற சில ஆய்வுகள், சிவப்பு இறைச்சி பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் உடையது என்ற தகவலை வெளியிட்டுள்ளன. இந்த ஆய்வில் 50 - 74 வயதுடைய 1,48,610 பேர் பங்கெடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகப்படியாக சிவப்பு இறைச்சியை உட்கொள்ளும் நபர்களுக்கு தான் அதிகம் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுகிறது என்று இதன் மூலம் கண்டறியப்பட்டது.

நீரிழிவு

நீரிழிவு

நிறைய மாட்டிறைச்சி உட்கொள்வதால் டைப் 2 நீரிழிவு நோய் அபாயம் அதிகரிக்கிறது. வாரத்திற்கு மூன்று முறை மாட்டிறைச்சி உட்கொள்வதால் 50% வரை நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறதாம்.

அல்சைமர் நோய்

அல்சைமர் நோய்

மறதி நோய் எனப்படும் அல்ஸைமர் நோய் பாதிப்பு ஏற்படவும் சிவப்பு இறைச்சி உணவுகள் காரணமாக இருக்கின்றனவாம். அதிகப்படியாக சிவப்பு இறைச்சி உணவுகளை உட்கொள்ளும் போது அதன் அதீத புரதச்சத்தினால் ஏற்படும் விளைவு தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons To Stop Eating Red Meat

Do you know about the reasons to stop eating red meat? read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter