Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
தப்பித் தவறியும் இந்த உணவுகளை மறுபடியும் வாங்கி சாப்பிடாதீங்க....
ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முதலில் நாம் மேற்கொள்ள வேண்டியது சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பது தான். சில உணவுகளை நாம் அன்றாட உணவில் சேர்த்து வருவோம். அப்படி நாம் சேர்க்கும் உணவுப் பொருட்கள் அனைத்துமே ஆரோக்கியமா என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!!
தற்போது சூப்பர் மார்கெட்டுகளில் கிடைக்கும் வித்தியாசமான உணவுகளின் சுவையை முயற்சித்துப் பார்க்கிறேன் என்று ஆரம்பித்தவர்கள், நாளடைவில் அந்த உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிட ஆரம்பித்து விட்டனர். சொல்லப்போனால் சூப்பர் மார்கெட்டுகளில் விற்கப்படும் சில உணவுகளில் டாக்ஸின்கள், செயற்கை சுவையூட்டிகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் கலக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள மிகவும் ஆபத்தான உணவுப் பொருட்கள்!!!
இவற்றை அதிக அளவில் உட்கொண்டு வந்தால், அதன் மோசமான விளைவுகளை கொஞ்சம் கொஞ்சமாக அனுபவிக்க ஆரம்பித்து, நாளடைவில் உயிரையே பறிக்கும் அளவிலான நோய்களுக்கு உள்ளாகி உயிரை இழக்க நேரிடும். இங்கு எக்காரணம் கொண்டும் மீண்டும் வாங்கி சாப்பிடக்கூடாத உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவைகளைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்
முதலில் கடைகளில் விற்கப்படும் ஹாட் டாக் மற்றும் நகெட்ஸ் வாங்குவதை நிறுத்துங்கள். ஆய்வில் இப்பொருட்களில் சோடியம் மற்றும் பதப்படுத்தும் பொருட்களில் 400 சதவீதம் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் இதில் நைட்ரேட்ஸ் என்னும் புற்றுநோயை ஏற்படுத்தும் பொருளும் உள்ளது. எனவே இந்த வகையான உணவுப் பொருட்கள் வாங்கி சாப்பிடுவதை அறவே நிறுத்துங்கள்.

சோடா
அனைவருக்குமே சோடாவை தொடர்ந்து குடிப்பது நல்லதல்ல என்று தெரியும். ஆனால் ஒவ்வொரு சோடாவிலும் 10 டீஸ்பூன் சர்க்கரை உள்ளது தெரியுமா? மேலும் சோடாக்களில் 58 சதவீதம் புற்றுநோயை உண்டாக்கும் நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.

நவதானிய பிரட்
கடைகளில் நவதானிய பிரட் என்று விற்கப்படும் பிரட்டை டயட்டில் இருப்போர் பலரும் வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி கடைகளில் விற்கப்படும் அனைத்து நவதானிய பிரட்டுகளிலும் அனைத்து தானியங்களும் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே அவற்றை நம்பி நவதானிய பிரட் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, நீங்களே வீட்டில் தானியங்களை வாங்கி அவற்றை கஞ்சி போன்று செய்து எடுத்துக் கொள்ளலாம்.

கொழுப்பு நீக்கப்பட்ட வேர்க்கடலை வெண்ணெய்
பொதுவாக வேர்க்கடலையில் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான நல்ல கொழுப்புக்கள் நிறைந்துள்ளது. ஆனால் கடைகளில் விற்கப்படும் கொழுப்பு நீக்கப்பட்ட வேர்க்கடலை வெண்ணெயில் தேவையற்ற கலோரிகளும், ஃப்ளேவர்களும் தான் நிறைந்துள்ளது. இவற்றை உட்கொண்டால், உடல் ஆரோக்கியம் தான் கெட்டுப் போகும்.

சாதம்
வெள்ளை சாதத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் நீரிழிவால் அவஸ்தைப்படக்கூடும். எனவே வெள்ளை சாதத்தை சாப்பிடுவதற்கு பதிலாக கைக்குத்தல் அரிசி சாதத்தை சாப்பிடுங்கள். இதனால் உடல் வலிமை அதிகரிப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

சுகர் ப்ரீ மிட்டாய்கள்
அடுத்த முறை சுகர் ப்ரீ மிட்டாய்களை வாங்கும் முன், அந்த பாக்கெட்டின் பின்னால் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைப் படித்துப் பாருங்கள். நிச்சயம் அதில் செயற்கை சுவையூட்டிகள் கலக்கப்பட்டிருக்கும். இந்த செயற்கை சுவையூட்டிகள் கலக்கப்பட்ட உணவுப் பொருட்களை உட்கொண்டால், செரிமான மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்படுவதோடு, வயிற்று வலி ஏற்படவும் கூடும்.

மைக்ரோவேவ் பாப்கார்ன்
மைக்ரோவேவ் பாப்கார்னில் பதப்படுத்தும் பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பதோடு, கெட்டுப் போகாமல் இருக்க நிறைய கெமிக்கல் பயன்படுத்தப்பட்டிருக்கும். எனவே இம்மாதிரியான பாப்கார்ன் வாங்குவதைத் தவிர்த்திடுங்கள்.



Click it and Unblock the Notifications